தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.   தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின்Read More →

   தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி         தமிழ் மரபு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 18.12.2009 அன்று செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கையாக தனியார் வசம் பாதுகாக்கப்பட்டு வரும் பனை ஓலைச்சுவடிகளைத் தேடும் பணி ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கப்பட்டது.  ஜனவரி மாதம் ஏற்பாட்டு வேலைகளும் அதனைத் தொடர்ந்துRead More →

தமிழ்ப்பல்கலைக்கழக நிகழ்ச்சி   தமிழ்ச்சுவடிகள் – அன்றும் இன்றும் கருத்தரங்கம் தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு  கருத்தரங்க தொடக்க விழா       தலைமை, மற்றும் பாராட்டுரை முனைவர் ம.இராசேந்திரன், மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் {flv}rajendran 2{/flv} சிறப்புரை, முனைவர்.க.சுபாஷிணி,  தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை. {flv}suba{/flv}     ஓலைச்சுவடித்துறை தலைவர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரையாற்றுகின்றார். திரு.சுகுமாரன் கௌரவிக்கப்படுகின்றார். திரு.செல்வமுரளி கௌரவிக்கபப்டுகின்றார்.   கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன்.Read More →

  ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் –  ௨௩    (23) விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். முழுமை பெறக்கூடிய காரியங்களை    அவை செல்லும் விதத்தைப் பார்த்து ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளலாம், ஆகுமா ஆகாதா என !  .நீர் ஒழுக்குப்போல் செவ்வனே தடையின்றி நடைபெறும்  செயல்கள் நடக்காமல் போகாது. முன்னமே முரண்டு பிடிக்கும் காரியங்கள் நம் ஊக்கத்தின் வேகத்தைப் பொறுத்துக் கொஞ்சம் கூலி மாதிரி பலன் அளிக்கும். இப்படித்தான் நாககிரிப் பண்டிதரிடமும்Read More →

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் –  ௨௨ (22)   ”இ"யை முதலெழுத்தாகக் கொண்ட அந்தப் பேராசிரியையின் இல்லம்  சென்றோம்; அவர்தான் NMM  திட்டத்திற்கு அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தாராம்.  அவரிடம் "இந்த மாவட்டத்தில் நீங்கள் எங்காவது அதிகமான சுவடிகளைக் கண்டீர்களா? நீங்கள் பார்த்த சுவடிகளில் மதிப்பு வாய்ந்த சுவடிகள் என எதைக் கருதுகிறீர்கள்? “ எனக் கேட்டோம் .     அவர் “திருச்செங்கோடு பகுதியில் ஒரு பட்டா சாரியாரிடம்Read More →

ஓலைச்சுவடிகள்  தேடிய படலம்    ——   ௨௧ (21) நாமக்கல் பகுதியில் இருக்கும் வரை தினமும் தொடர்பு கொள்ளச் சொல்லி வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் முதல் தவணை ஓலைச் சுவடிகளைத் தரும்போது கூறினார் அல்லவா? அதையே வேதவாக் காகக் கொண்டு தினமும் வேலை முடிந்ததும் நேரே வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் வீட்டுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டோம் ; இந்த முறையினால் கூடுதலாக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் சன்னிதியிலும் சில நிமிடங்கள் அமரும் வாய்ப்புRead More →

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் – ௨௦0 (20)   அன்னை  சத்தியா நகர் சென்று பழனிசாமி, கந்தசாமி, மெய்யப்பன் என அங்கிருந்த முகவரிகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்ததுமே எங்களைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நாங்கள் கையில் ஒரு பட்டியல் அடங்கிய கோப்பு, கமரா, பாண்ட்டு,  கண்ணாடி முதலியவற்றுடன் போனதும் ஏதோ அரசு உதவிகள் தருவதற்காக அதிகாரிகள்  கணக் கெடுக்க வநது விட்டார்கள்;  நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வாராத மாRead More →

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம்  —-  ௧௯ (19)    நாமக்கல் நகரமே ஒரு கல்லைச் சுற்றித்தான் இருக்கிறது;  நாமகிரி என்று அழைக்கப்படும் 65 அடி உயரமுள்ள பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது.  ஊரே அந்தக் கல்லைச்  சுற்றித்தான் உருவாகி யிருக்கிறது. வழக்கமாக ஆற்றைச் சுற்றிலும் ஊர் உரு வாகும்; இங்கே கல்லைச் சுற்றி ஊர்.  அதிசயம்தான் !   http://en.wikipedia.org/wiki/Namakkal – நாமகிரி என்ற பெயரிலிருந்துதான் நாமக்கல்Read More →

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம்  —  ௧௮ (18)   செங்கல்பட்டில் இருக்கும் சில முகவரிகளைப் பார்த்துவிட்டுப் பிறகு காஞ்சிபுரம் நகரம் சென்று பார்த்துவிட்டு  எங்கள் காஞ்சி மாவட்டத் தேடலை அன்று முடிக்க எண்ணினோம். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து நாள்கள் வீதம்தான் ஒதுக்க முடிந்தது. எங்களுக்கு  மார்ச் மாதம் 31க் குள் அதிகபட்சம் முடிந்தவரை சென்று பார்க்க வேண்டிய நெருக்கடி வேறு இருந்தது;  எனவே ஒய்வு என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்Read More →

ஓலைச்சுவடிகள் தேடிய படலம் —  ௧௭  (17)   அடுத்து நாங்கள்  தேடுதலுக்குப் புறப்பட்ட ஊர் மதுராந்தகம்.   பெயரைக் கேட்ட உடனேயே  கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரமான  மதுராந்தகனை  நினைவுபடுத்தும் ஊர்.   உத்தம சோழன் எனப் பெயர் பெற்ற மதுராந்தகன்  கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்தியரின் மகன் ஆவார்.  இவர்  12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார் . இவருக்குRead More →