படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012     இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் சார்ந்தது. தன்னை காணிக்கையாகக் கொடுத்து பலியிட்டுக் கொள்ளும் இவ்வழக்கம் பண்டைய வழக்கில் இருந்து வந்துள்ளதற்கு இச்சிற்பங்கள் சான்றாக உள்ளன. தமிழ் நாடு முழுவதுமுள்ள நடுகல்களில் ஏறக்குறைய 90Read More →

படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன்   கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.   கூத்தனார் அப்பன் சிலை கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதிRead More →

  தொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு.     தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.   தமிழகத்தில்Read More →

    அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும்  மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன்.       பாகம் 1 : [முல்லைத் தினை, குறிஞ்சித் திணையிலும் அதிகமாக ..வடமேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக நெடுகல்.. தேனீ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட காலத்தால் முற்பட்ட கல்வெட்டு.. (கி.பி.5ம் நூற்றாண்டு)..Read More →

  தமிழகத்தில் நடுகல் – “சதி”கல் வழிபாடு! ஆய்வாளர் இல. கணபதிமுருகன்     மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.   இடி, மின்னல், மழை, சூரிய வெப்பம், கொடிய விலங்குகள் ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின்Read More →