தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கண, மருத்துவ, கலை நூல்கள் அனைத்தும் தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றை பதிப்பித்த சான்றோர்களின் சேவையினால் நமக்கு கிடைத்தவை. இவ்வகையில் பனை ஓலைச் சுவடிகளைத் தேடி, அதனை வாசித்து, வெவ்வேறு படிகளைச்  சோதித்து அவற்றை அச்சுப் பதிப்பிற்கு கொண்டு வந்த பெரியோர்களை நாம் அறிந்திருப்பது மிக அவசியம்.  சுவடியியல் அறிஞர் முனைவர்.மாதவனின் சுவடிப்பதிப்பியல் எனும் நூல் ஒரு பட்டியலை வழங்கியுள்ளது.Read More →

  எழுத்து வரிவடிவமும் திரிபுகளும் ச.பாலசுந்தரம்             இருதிணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களான் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களான் ஆக்கம் பெற்றதாகும். அது கொண்டு பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும். எழுத்துமொழிRead More →

சி. மூக்கரெட்டி   அ. முன்னுரை          தமிழ் உயர் தனிச் செம்மொழி. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி. பலநூறு ஆண்டுக் காலமாக முறையே இலக்கண இலக்கிய வளம் பெற்றுத் தழைத்துள்ள மொழி. இம்மொழியில் உள்ள நூல்கள் இலக்கணம், இலக்கியம், காவியம், புராணம், சிற்றிலக்கியங்கள், சமயம், சாத்திரம், தோத்திரம், கணிதம், அறிவியல் எனப் பல வகையிற் பல்கியுள்ளன. இந்நூல்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டின்Read More →

  இரா.இளங்குமரன் வெண்ணிலா விளையாட்டு என்னும் பெயரால் 1975 இல் ஒரு நெடும்பாடல் இயற்றினேன்.  அதில்கடலுக்கு ஒரு பெயர் சூட்டினேன்.  அஃது ‘ஏடு தின்னி’ என்பது.   யா.வி. பதிப்பு என் நெஞ்சத்தின் ஆழத்துள் ‘கொடுங்கடல்’ கொண்ட செய்தியும், ‘வாரணங் கொண்ட தந்தோ’ என்னும் இரங்கலும் படிந்து கிடந்தன.  அவற்றுக்கு மூலத்தூண்டலாக அடியார்க்கு நல்லாருரை, யாப்பருங்கலவிருத்தியுரை, களவியற் காரிகையுரை, புறத் திரட்டு என்பன அமைந்தன,  இவற்றையெல்லாம் உணர்வுடையார் ஒருங்கே கண்டுRead More →

    முனைவர். ம.இராசேந்திரன்   முன்னுரை   காலமும் இடமும் கடந்து நிலைத்து நிற்க கருத்துக்கள் பதிவு செய்யப் படுகின்றன. கால்களில் இரண்டைக் கைகளாக மாற்றிக் கொண்டு விலங்கினின்று மனிதன் வேறு பட்ட காலம் முதல் கருத்தறிவித்தல் இருந்திருக்கிறது. மனித குல வரலாற்றின் தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் வேட்டைக்குச் சென்ற இடம் பற்றியும், வேட்டையாடிய விலங்கு பற்றியும், வேட்டையாடிய முறை பற்றியும் கோடுகளால் அக்கால மக்கள் வரைந்து காட்டியுள்ளனர். Read More →

  த.கோ.பரமசிவம் “எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்”   என்னும் பழமொழி மிகப் பரவலாகவும்,மிக மிகச் சாதாரண நிலையிலும் வழங்குகிறது.  இப்பழமொழி எல்லாவகைப்பட்ட நூல்களிலும் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பு, தவிர்க்க முடியாதது. அவ்வக் காலத்தே கூடத் தோன்ற முடிந்த விரைவைக் கொண்டது என்பவற்றைத் துல்லியமாகக் காட்ட வல்லதாம்.   பாடவேறுபாடுகளும், பாடத் தெரிவும் என்னும் இக்கட்டுரையில் ஒரு நூலின் படிகளாகக் காணப்பெறும் சுவடிகளில் அமைந்த பாடவேறுபாடுகள் தோன்றும்Read More →

  தி.வே. கோபாலையர் முன்னுரை      சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சுப்பொறி தமிழகத்தில் அறிமுகமானபிறகும் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொட்டே ஏட்டுச்சுவடியிலிருந்த இலக்கண நூல்கள் பலவும் அச்சிடப்பெறுவவாயின. மழவை மகாலிங்கஐயர், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை முதலிய சான்றோர் பலரால் சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற இலக்கண நூல்கள் பலவும் ஏனைய பலராலும் பின்னர் அச்சிடப்பெறவே, ஒவ்வொரிலக்கண நூலும் இக்காலத்துப் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. அப்பதிப்புக்களுள் ஆய்வுப்பதிப்பு என்ற சிறப்பிற்குறிய பதிப்புக்கள்Read More →

முனைவர் அ. நா. பெருமாள்   மனித இனத்தின் வாழ்வியல் வரலாற்று ஆவணமாகச் சுவடிகளைக் கருதலாம். தாளும், மையும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் சுவடிகளே மனித எண்ணங்களின் பாதுகாவல் சாதனங்களாகப் பயன்படுத்தப் பெற்று  வந்துள்ளன. மனிதனின் எண்ணங்களும்  உணர்ச்சிகளும் இலக்கியங்களாகவும்,கலைகளாகவும் உருவெடுத்துக் காலங்காலமாக மனித வாழ்வுடன் கூடி உறவாடி வருகின்றன.அவை பண்பாட்டு மூலங்களாக அன்றிலிருந்து இன்று வரை கல்லிலும், சுவரிலும், சுவடியிலும், தாள்களிலும் பாதுகாக்கப் பெற்று வருகின்றன.   சுவடியுருவில்Read More →

  செ. இராசு   பொதுப் பெயர் செப்பேடு (செம்பு + ஏடு), ஏட்டுச் சுவடி (ஓலைச்சுவடி) ஏடு + சுவடி என்ற இரண்டு பெயர்களிலும் “ஏடு” என்ற பொதுவான பெயர் வருவதைக் காணலாம். செப்பேடுகளும் ஓலைச் சுவடிகளும் தனித்தனி ஏடுகள் கொண்ட தொகுதிகளாக உள்ளன.   ‘பாடம் ஏதினும் ஏடது கைவிடேல்’ ‘ஏடாயிரங்கோடி எழுதாது’ ‘ஏடெடுத்தேன்’ போன்ற எடுத்துக்காட்டுகளில் ஏடு என்பது சுவடியையும் ஏனைய எழுதப் பயன்படும் பொருள்களையும்Read More →

வீ.சொக்கலிங்கம்     “வைய மீன்றதொன் மக்க ளூனத்தினைக் கையி நாலுரை காலம் இரிந்திடப் பைய நாவை யசைத்த பழந்தமிழ்”                         அதனைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி மக்கள் நாளடைவில் பனையோலைகளில் எழுதிப் பயன்படுத்திப் பாதுகாத்து வந்தனர். அவ்வாறு எழுத்தாணியால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் எண்ணிலடங்கா. அவைகளில் பல செல்லின் வாய்ப்பட்டும், தீக்கிரையாகியும், தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டும், ஒடிந்தும், மடிந்தும், மக்கியும், அறியாமையால் அடுப்பெரித்தும், பயனற்றுப்Read More →