விளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன. காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்.. சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்… பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்… இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள். Read More →

சூலூர் திரு.சிவக்குமாரின் (நிறுவனர், தமிழாய்வு அறக்கட்டளை) மாணவர்கள் செய்து காட்டும் தமிழர் வீர விளையாட்டுக்கள்   சிலம்பம் – வணக்கம் செலுத்தும் முறை   சிலம்பத்தில் இரட்டை கம்பு நெஞ்சு மற்றும் பின் உருளி. இது உடலை ஒற்றி சுற்றக்கூடியது. உடல் இந்தப் பயிற்சியினால் நல்ல வளைவு தன்மை அடையும்.   எப்பேற்பட்ட பிடியில் இருந்தும் பிடிபடாமல் விலக இப்பயிற்சி உதவும்    Read More →

யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள விளையாட்டுக்களில் சில. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) நீர் நிறைத்தல்   யானைக்குக் கண் வைத்தல்   போழை  அல்லது மாபிள் அடித்தல்   ஓப்பு விளையாட்டுRead More →

முனைவர் ச. கண்மணி கணேசன் ஓய்வுபெற்ற முதல்வர், காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு   இது ஒரு குழு விளையாட்டின் போது பாடப்படும் பாட்டு. பாட்டில் ஏதோ குறிப்புப் பொருள் உள்ளது என்று இப்போது புரிகிறது. ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை. சிறு வயதில் பொருள் புரியாமலேயே இதை பாடிக்கொண்டு விளையாடுவதுண்டு. எத்தனைபேர் வேண்டுமானாலும் சேரலாம். 1) மக்கா சுக்கா பால் பரங்கி ஆட்டுமை கூட்டுமை சீ சல் சல்லத் தூக்கி மேலRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 33. பூசணிக்காய் விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. (8-13 வயது) விளையாடுகின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். இவ்வரிசையில் முதலில் அமர்ந்திருப்பவர் பாட்டி என்றழைக்கப்படுகிறார். தனியாக நிற்கும் இருவரில் ஒருவர் ராசாவாகவும் மற்றவர் சேவகனாகவும் கூறப்படுகின்றனர். ஒருவர் நாயாகவும் உட்கார்ந்திருப்பவர்களினருகில் இருக்கிறார். விளையாடுவதற்கு முன்னாலேயே பாட்டி, ராசா, நாய், சேவகனாகRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 32. தில்லாக்கு விளையாட்டு இது சிறுமியர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டாகும். இதில் இரண்டுவகை காணப்படுகிறது. தனித்தனியாக விளையாடுவது, சோடியாக விளையாடுவது என இருவகை. இவ்விளையாட்டை தனியாக விளையாடினால் இரண்டு முதல் நான்கு நபர்களுக்கு மேல் விளையாடுவதில்லை. சோடியாக விளையாடினால் எட்டு நபர்களுக்கு மேல் விளையாடப்படுவதில்லை. அ. தனிநபர் ஆட்டம் ஆரம்பம் முடிவு மேலே படத்தில் காட்டியதுபோல் (ஆரம்பம்)Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 31. வருதுகிளி வரட்டுங்கிளி விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. விளையாடுபவர்களனைவரும் உத்திபிரித்தல் முறை முலம் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். ஓடுபவர்களும் பிடிப்பவர்களும் யாரென்று தீர்மானித்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் 12 நபர்களுக்கு மேல் விளையாடுவதில்லை. பிடிக்கும் அணியினரில் தலைவரைத் தவிர மற்றவர்கள் தரையில் எழுந்து ஒடுவதற்குத் தயாராக அமர்வது போல் அமர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 30. சிலை விளையாட்டு சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு இது. விளையாடுகின்றவர்கள் தங்களுக்குள் கூடி ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். பட்டவர் விளையாடும் மற்றவர்களுக்குத் தன் முதுகுப்புறத்தைக் காட்டி நின்று கொண்டு ஓன், ட்டு, த்ரி என்று 10 வரை கூறுகிறார். கூறி முடித்தபிறகு மற்றவர்களை நோக்கித் திரும்புகிறார். அவ்வாறு திரும்புவதற்குள் மற்றவர்கள் ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பதுRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 29. வளையல் விளையாட்டு சிறுமிகளாலும் பருவமடைந்து வீட்டிலிருக்கும் பெண்களாலும் (வயது 5 – 15) விளையாடப்படும் விளையாட்டு. உடைந்துபோன வளையல் (கண்ணாடி) துண்டுகளை வைத்து விளையாடுகின்றனர். அ. பல்வேறு நிறங்களுடைய சுண்டுவிரல் நீளமுடைய கண்ணாடி வளையல் துண்டுகளை வலதுகை நிறைய வைத்துக்கொண்டு அவற்றை மெதுவாக உயரே தூக்கிப்போட்டு புறங்கையில் வாங்குகின்றனர். கீழே விழுந்த வளையல் துண்டுகளைத் தவிரRead More →