தமிழக இல்லங்களிலே காணப்படும் மூலிகைகள் முனைவர்.க.சுபாஷிணி மிகச் சுலபாக வளரக்கூடியதும் சிறந்த மருத்துவ பலன்களைத் தரக்கூடியவையுமானவை மூலிகைச் செடிகள். துளசி, கரிசலாங்கண்ணி, பொன்னங்கன்னி, இஞ்சி, முருங்கை, போன்றவை தமிழகம் மட்டுமன்றி வேறு பல ஆசிய நாடுகளிலும் கூட கிடைக்கக்கூடியவை. இந்த மூலிகைச் செடிகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இவை பிரத்தியேக பாதுகாப்பு இன்றியும் கூட செழிப்பாக வளர்பவை. மூலிகைகளை உணவில் சேர்த்து சமைத்து உண்பதை …