ஸ்ரீ இராமர் ஆலயம்  (சாங்கி) கிருஷ்ணன், சிங்கை   பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்; மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானை முதற் முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால் எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறி முறைகளையும், நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் உபதேசத்தின் மூலம் நமக்கு வழிகாட்டி எடுத்தியம்புவது இராமாயணமும், மகாபாரதமும். அடியார்கள் வழிபடும் இந்து சமயத்தின் இரு கண்கள் இவ்விரு பிரிவுகள்.Read More →

  அருள்மிகு முருகன் திருக்கோயில்  [ ஜுரோங் ]  Jurong  Arulmigu Murugan Temple கிருஷ்ணன், சிங்கை. ஜுரோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முருகன் ஆலயம், இந்த நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஆலயமாகும்  . ஜுரோங் சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்குகிறது.         சிங்கப்பூரின்  கிழக்குப் பகுதியில் ஜுரோங் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அப்பகுதியில் வாழும் இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியர்கள் மிக குறைந்த அளவில் இவ்வட்டாரத்தில்Read More →

  ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர்  ஆலயம் Sri Veeramuthu Muneeswarar Temple கிருஷ்ணன், சிங்கை.   ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இவர் ’ஹோக் ஹுவாட் கெங்’ [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலின் வளாகத்திலேயே குடிகொண்டு எல்லா வகை பூஜை, வழிபாடுகளையும் ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார்.   சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா?   கேட்பதற்குப் புதுமையாகவும்,வியப்பாகவும் இருக்கிறதுRead More →

  ஸ்ரீ  லாயான் சித்தி விநாயகர் ஆலயம் Sri Layan Vinagar Temple கிருஷ்ணன், சிங்கை.   விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர், பெருமையுடையவர், ஸச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர், தேசங்கடந்தவர், காலங்கடந்தவர்,விக்கினங்களை விலக்குபவர், எக்காரியம் தொடங்கும் முன்பும் அவரது ஆசியும் வேண்டும் என்பது விநாயகரின் தனிச்சிறப்புகளாகும். காட்சிக்கு எளிமையானவரான அவருக்குத் தமிழ் நாட்டில்Read More →

  ஸ்ரீ  ருத்ர காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை.     எத்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லை    என்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னை பத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதி    பண்பும் பரிவும் பணிவும் அருள்வாய் உருத்திரகா ளியே கொத்தடிமை கொள்வாய் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!          கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!Read More →

  வீரமா காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை.   சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!                            காராரு மேனிக் கருங்குயிலே! ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே! மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே! சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே! வீரமாகாளி அம்மையே! நினது தாமரைத் திருவடி என் சென்னியதே!     திருவருளம்மை காளியே கால சொரூபிணி. அவளுக்கு அன்னியமாகக் காலம் இல்லை. அவளே காலத்தின் அதிபதியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாற்றங்களைRead More →

  ஸ்ரீ சிவ – கிருஷ்ணன் கோவில் SRI SIVA – KRISHNAN KOVIL கிருஷ்ணன், சிங்கை.   காக்கும் கடவுளாக விளக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், திருவடியில் சேர்த்துக் கொள்ளும் கடவுளாக விளங்கும் பரமேசுவரனும் ஒரே திருமேனியில் சங்கரநாராயண அவதாரமாக ஸ்ரீ சிவகிருஷ்ணர் எனும் திருப்பெயரோடு சிங்கப்பூர் வாழ் அடியார் அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றனர்.   ஆலய வரலாறு முதன்முதலில் 1962 ம் ஆண்டு திரு.குஞ்சு கிருஷ்ணன்Read More →

  ஸ்ரீ   கிருஷ்ணன் ஆலயம் SRI KRISHNAN TEMPLE கிருஷ்ணன், சிங்கை.     ”கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறார் ஆண்டாள். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்னும் பரம்பொருளின் எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்தி அதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம்; பாரதப் போர் நிகழ்த்தவும், பூமியின் பாரம் தீர்க்கவும், கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுரைச் சிறையில் நாராயணன்Read More →

  ஸ்ரீ  அரச கேசரி சிவன் ஆலயம் SRI ARASA KESARI  SIVAN KOVIL கிருஷ்ணன், சிங்கை. அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச்கேசரி சிவன் என்றாகியது. ’அரசு’ என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளையும் குறிக்கும். ’கேசரி’ என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு  அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது.   நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாகRead More →

  ஸ்ரீ  முனீஸ்வரன் ஆலயம் Sri Muneeswaran Temple (Queens Town) முன்பொருகாலத்தில் உலகில் அறியாமை எங்கும் சூழ்ந்தது. பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர்,  சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென் திசை நோக்கிக் குருவாக அமர்ந்து அவர்களுக்கு ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும் தோன்றின.  சிவபெருமானின் ஞான வடிவம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.   முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்துRead More →