“சிறுகதையி​ன் சிகரம்” – “மெளனி” இராஜை. என். நவநீதகிருஷ்ணராஜா எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்;  படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெளனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெளன வழியையே தம் தலையாய கொள்கையாகக் கொண்டவர், இத்தகு சிறப்புமிகு மணிக்கொடி மெளனியே சுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரை அனைவரும் செல்லமாக ஆர்.எஸ்.மணி என அழைப்பினும்Read More →

"தென்காசிச் சிங்கம்" டி.எஸ். சொக்கலிங்க​ம் கலைமாமணி விக்கிரமன்   பெருந்தலைவர் காமராஜுடன் டி.எஸ்.சொக்கலிங்கம்   திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில், 1899ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பத்திரிகையாசிரியரும் தேசபக்தருமான அமரர் டி.எஸ்.சொக்கலிங்கம். சொக்கலிங்கத்துக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். "மடத்துக்கடை" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தை மறைவுக்குப் பிறகு டி.எஸ்.சி.யின் (டி.எஸ்.சொக்கலிங்கத்தை மரியாதையுடன்Read More →

பாடிப் பறந்த புதுவைக்கு​யில் – தமிழ்ஒளி கலைமாமணி விக்கிரமன்     புதுவை பெற்றெடுத்த கவிஞர் "தமிழ்ஒளி"யை நாம் நினைவில் கொள்ளாவிட்டால் புதுமை, புரட்சி, இலட்சியம் என்ற சொற்கள் பொருளற்றதாகிவிடும். ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு (1951) "தமிழ்ஒளி" அவ்வப்போது "அமுதசுரபி" அலுவலகம் வருவார். சந்தித்திருக்கிறேன். டென்சிங் என்ற இந்திய இளைஞர், இமயமலையின் உச்சியில் தேசியக் கொடியை நாட்டிய செய்தியை 1953களில் உலகம் பரபரப்பாகப் பேசியது. அதிசயத்துடன் பேசப்பட்ட "எவரெஸ்ட் பிடிபட்டது"Read More →

துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன் கலைமாமணி விக்கிரமன்     நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவர் தமிழ்வாணன். தேவகோட்டையும், காரைக்குடியும், செட்டிநாட்டுப் பல ஊர்களும் தமிழ்நாட்டுக்குத் தந்த பல செல்வங்களுள் படைப்பிலக்கியச் செல்வங்கள் மறக்கRead More →

"குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்​பா கலைமாமணி விக்கிரமன்       தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியாருக்குப் பிறகு எளிய நடையில் பாடல்கள் பாடி, சின்னஞ்சிறு கதைகள் எழுதியவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அழ.வள்ளியப்பாவின் பாடல்கள்தான் பிள்ளைகள் மனதைப் பெரிதும் கவர்ந்தன.   கை வீசம்மா கைவீசு மாம்பழமாம் மாம்பழம்   என்ற அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பாடும்போது வாய் தேனூறும். சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும், ஆடவும் செய்த கவிஞர்Read More →

"நாகம்மாள்​" படைத்த ஆர். சண்முகசுந்​தரம் கலை​மா​மணி விக்​கி​ர​மன்     காங்கேயத்துக்கு வடக்கில் உள்ள நாலு ரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் கீரனூர். அந்தச் சிற்றூரில், 1917ஆம் ஆண்டு, எம்.இரத்தினசபாபதி முதலியாருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் சண்முகசுந்தரம். இவருடைய சகோதரர் திருஞானசம்பந்தம்.  எழுத்தாளர் உலகில், கொங்கு மணம் வீசும் படைப்புகளை ஈந்த சகோதரர்களான இவ்விருவரின் பெயர்களும் நினைவில் நிற்கக்கூடிய பெயர்கள். இருவரும்,Read More →

"பாரதி பித்தர்" தொ.மு.சி. இரகுநாதன் கலைமாமணி விக்கிரமன்     தொ.மு.சி. இரகுநாதன் – எழுத்தும், பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே. 1941ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. இரகுநாதன் போன்ற இளம் இரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள். அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார். இரகுநாதன், திருநெல்வேலிRead More →

பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்     கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர் – காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்)பாரதிதாசன் (சுப்புரத்தினம்) சுரதா (சுப்புரத்தின தாசன்) கம்பதாசன் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள் என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா.,Read More →

 "உவமைக் கவிஞர்" சுரதா கலைமாமணி விக்கிரமன்       இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா"வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர். கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம் – சண்பகம் தம்பதிக்கு 1921ஆம் ஆண்டுRead More →

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.இரா​மையா கலைமாமணி விக்கிரமன்       வத்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது. வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் – மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பி.எஸ்.இராமையா பிறந்தார். படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட இராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும்,Read More →