ஆல் – Ficus Benghalensis

ஆல்

திரு.அ.சுகுமாரன்

 

Oct 30, 2009
 

 

இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும்  ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
 

ஆலமர் செல்வன் அமைந்த ஆலவாய் எனும் நகரையே கொண்டவர்கள் நாம் .
 

 

ஆலமரத்தடி தான் அந்த காலத்து பாராளுமன்றம் ,ஊர் கூடும் சபை .அது !
நாட்டாமை !தீர்ப்பை மாற்று ! என  திரைப்படத்தில் வருவது போல் அங்கேதான்
அடிக்கடி  கூவப்பட்டன.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே  ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம்  நடத்தபடுவதில்லை ,  மாறாக ஆலமரத்தடியில்  சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.

இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .

 

 

நான்  கூட சில வருடங்களுக்கு முன் புளி, உப்பு இவைகளை சேர்க்காது அதாவது சாம்பார் குழம்பு  ரசம் சாப்பிடாது சிலவருடம் சில விரதங்கள் இருந்தேன் .அப்போது ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன்  , அங்கே கட்டுமான பணியை பார்க்க செல்வேன் .
சென்றயுடன் அரைமணியில் வேலை முடிந்துவிடும் .பின் எனக்கு அங்கே  அருகில் இருந்த ஆலமரத்தடியில் போடப்படும்.  அந்த நாற்காலியில் கையில் கொண்டு வரும் கனத்த புத்தகம் ,உணவு இவைத்துடன் சென்று மாலை வரை அங்கேயே அமர்ந்திருப்பேன் .
அப்போது ஆலமரத்தில் நிறைய எறும்புகள் இருக்கும் நான் காலை நீட்டி
உடக்கார்ந்தது இருக்கும் போது அது பாட்டில் மேலே ஏறி செல்லும். ஆனால்  கடிப்பதில்லை .நான் கூட நாம் விரதமாக இருப்பதால் அவைகள் கடிப்பதில்லை என முதலில் நினைத்தேன். ஏன் எனில் ஒரு மனிதன் ஆன்மீக வழியில்  செல்ல ஆரமித்ததும் அதை முதலில் உணருவதில்  ஆறுஅறிவுள்ள மனிதன் தான் கடைசியாக இருப்பான் .இதர ஓர் அறிவு ,முதல் ஐந்து அறிவுள்ளவைதான் முதலில் அவனை இனம் காணும்.
ஆனால் பிறகுதான் ஆலமரத்தின் மகிமை தெரிந்தது .அதனடியில் வாழும் எறும்பு கூட தன சுபாவத்தில் இருந்து மாறுபடுகிறது .எப்போதாவது ஆலமாரத்தின் அருகில் செல்லும் போது ஆழ்ந்து உணருங்கள் ! கவனித்துப் பாருங்கள் வித்தியாசத்தை ..உணருங்கள்.

ஆலமரம் புத்தருக்கு போதி மரமாகவும், இந்துக்களுக்கு கோவில் மரமாகவும், ஜைனர்களுக்கு கேவலா மரமாகவும் திகழ்கிறது. மேலும்  மடாதிபதிகள் கையில் வைத்திருக்கும் தண்டும் ஆல மரத்தில் இருந்தே செய்யப்பட்டதாக இருக்கும்.    நிம்மதியைத் தேடி அலையும் மனிதன், ஆல மரத்தடியில் சில நாட்கள் தவம் இருந்து பார்க்கட்டும் மனதிற்கு அமைதி கிடைத்துவிடும்.
இயற்கையான ஏ.சி. குளுமை தரும் ஏ.சி. மரம் ஆல மரம்.

இந்து சமுதாய மக்கள் ஆலமரத்தைச் சுற்றி வரும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
தேவ் சுட்டிக்காட்டியபடி ஆல் எனும் பெயரில் பல ஸ்தலங்கள் ள்ளது .ஆலங்காடு ,ஆலங்குடி முதலிவை .

எல்லாப்பகுதியிலும்  நிச்சயம் ஆலங்குடி ,ஆலப்பாக்கம் என்ற பெயரில் ஊர் இருக்கும் . திருஅன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு முதலிய சிவத்திருத்தலங்களிலும் திருமெய்யம், திருவில்லிபுத்தூர் முதலிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாக ஆலமரம் வணங்கப்படுகிறது.

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.

 

பழம்:நன்றாகப் பழுத்த ஆலம் பழத்தை நிழலில் உலர வைத்துச் சாப்பிட்டால் ஞாபக சக்தி மேம்படும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

பொதுவாக ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும்
Botanical Name : Ficus Benghalensis
Family Name : Moraceae
Common Name : Banyan, Vada Tree, Indian Banyan, Figuier Des Pagodes, East Indian Figtree

ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.
கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி  என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

பூக்கள்: பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

விழுதுகள்: தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
 
இலைகள்:ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.
ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.
ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது  தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *