வில்வம் – Aegle marmelos Correa

வில்வம் – Aegle marmelos Correa

திரு.அ.சுகுமாரன்

 

Oct 13, 2009
 

சிவனுக்கு  மிக உகந்தது வில்வம். வில்வமரத்தை சிவ ஸ்வரூபமாகவே பார்ப்பர்  வில்வ மரத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணுபாகம், மேல்பகுதி சிவரூப
ம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சித்தால் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.

 

வில்வம், பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய ஐந்து மரங்களையும் தேவலோகத்திலிருந்து வந்த "பஞ்சதருக்கள்’ என்று புராணங்கள் கூறுகின்றன.

 

பில்வாஷ்டகம் என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.

இது ஒரு புனித மரம் .இதன் அனைத்து  பாகங்களும் இலை  வேர் , கிளை பழம் ,விதை அனைத்தும் மருத்துவ குணம் உடையது. மனிதனின் கொடிய வியாதியையும் ,வினையும் ஒரு சேர தீர்க்கவல்லது

 

மற்றமொழியில்:
Aegle marmelos Correa
Family: Rutaceae
English names: Bengal quince, golden apple, stone apple
தெலுங்கு maredu (Andhra Pradesh),
வங்காளம் (Bengal), bil (Gujrat), bael, bil (Himachal Pradesh),
ஹிந்தி bael 
கன்னடம் bilpatra, kumbala, 
மலையாளம் vilwam 
bilwa (Sanskrit),
தமிழ் கூவிளம் ,வில்வம்  கூவிளை, சிவத்துருமம், நின்மலி,மாலூரம்
 
திருவிளையாடல் புராணத்தில் வில்வத்தை பற்றிய ஒரு பாடல இதோ
 
புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ
மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி
அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள்
விரகில்வெய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம். 

 

அதற்க்கு நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் தந்த உரை:

புரகரன் இச்சாஞானக்கிரியையாய்ப் போந்த
வில்வமர முதல் அடைந்து – திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா
ஞானக் கிரியைவடிவாயுள்ள வில்வமரத்தினடியைச் சார்ந்து, மூன்று
வைகல் ஊண்உறக்கம் இன்றி – மூன்று நாட்கள்வரை உணவுந்
துயிலும் இல்லாமல், அரகர முழக்கம் செய்வோர் – அரகரவென்று
முழங்குவோர் செய்த, ஐம்பெரும் பாதகங்கள் – ஐந்து பெரிய
பாவங்களும், விரகு இல் செய் கொலைகள் – அறிவின்றிச் செய்த
கொலைப்பாவங்களும் தீரும் – நீங்கும், ஆதலால் – ஆகலின்,
வில்வம் விசேடம் – வில்வம் சிறந்தது.

 புரகரன் – புரத்தை யழித்தவன். வில்வ இலையின் மூன்று கவர்களும் இறைவனுடைய மூன்று சத்திகளின் வடிவம் என்க.  விரகின்மையாவது அதனாற் றமக்கு ஊதியஞ் சிறிது மின்றி ஏதமே மிகுமென்னும் அறிவு இல்லாமை.

 

அமைப்பு
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும்  இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.

வில்வ மரத்திலும் வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்ற பெயருண்டு.

 

மஹாலக்ஷ்மி வாசம் என்றால் ஆரோகிய லக்ஷிமியும் ,வில்வம்  இருக்கும் இடத்தில் இருக்கும் என பொருள் .
 
நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது.  சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும்.
 
இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.  மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.  வயிற்றிலே  தோன்றும் அஜீரணக் கோளாறுகளை அகற்றுகிறது.  வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது.  வில்வ இலைகளை மசிய அரைத்து, வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து பருக வேண்டும்.
 
தலையிலே ஏற்படும் வழுக்கையை அகற்றி, மீண்டும் கூந்தலை வளரச்செய்யும் ஆற்றல் வில்வப் பழத்தின் தோலிற்கு உள்ளது.  குறைந்த தீயில் வில்வப் பழத்தின் தோலைச் சுட்டு, அதை வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், பலன் தெரியும். நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இலைகள் குஷ்டத்தைக் குணப்படுத்துகின்றன. தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 1 மண்டலம் (48 நாட்கள்)  தொடர்ந்து உட்கொண்டால் குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூலகள் கூறுகின்றன. சாப்பிட்ட உடன் 108 முறை  கோயிலை  வலம் வரவும் கூறுகின்றன . இல்லையில் இலை ஜீரணம் ஆகாது என்பதுதான் அதன் உட்ப்பொருள் .
 
வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாத தோஷம் போகும் .

The fruit pulp contains 60.7 per cent moisture. The pulp contains 0.46 per cent acidity, 8.36 per cent total sugars, 6.21 per cent reducing sugars, 2.04 per cent non-reducing sugars and 0.21 per cent tannins. The pectin content is 2.52 per cent, which is quite high.

அதிக அளவு புரதம் அதன் கனியில் உள்ளது .அதிகஅளவு சீத பேதி மட்டும் மல கழிவுக்கு வில்வகனி சிறந்த நிவாரிணி .

 

பாதி கனிந்த பழத்தை சதையை  நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்,மற்றும் உடம்பு எரிதல் குணமாகும் .

சோகை நோய்க்கு அதன் காயை சதைபத்தை எடுத்து காயவைத்து அதை போடி செய்து , 10 கிராம் பொடிக்கு  50  கிராம் பசும் நே சேர்த்து நாள் ஒன்றிக்கு இருமறை ஒரு மண்டலம் உபயோகிக்க குணமாகும் .

ரத்த அழ்த்ததிர்க்கு இலையை சாறுபிழுந்து உபயோகிக்க குறையும் . விலவ இல்லை காற்றை சுத்தமாக்கும் . வில்வ பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சக்கரை வியாதி குணமாகும் .
அதில் உள்ள   Tanin, துணை புரியும்.  contains 20% and the pulp has only 9% of Tanin. This substance helps to cure diabetes
 
மஞ்சள் காமாலையை  குணப்படுத்தும்-  சுமார்  100   வில்வ இலைகளின் சாரை பத்து மிளகின் தூளுடன் கலக்கவும் .இதை காலை மாலை இருவேளையும் குடித்துவர தீவிர மஞ்சள் காமாலையை  குணப்படுத்தும் .இதை அருந்தும் போது கூடவே ஐந்து கோப்பை கரும்பின் சாரையும் குடிக்கவும் .இது ஒரு ரகசிய அனுபவ முறை .

டைபாயிண்டு எனப்ப்படும் தொடர்ந்து தாக்கும் அதிக சுரத்தை குணப்படுத்த சுமார்  200 இலைகளை சாறு இடுத்து அதை சுண்டக் காய்ச்சி (  1/3) அது வற்றியபின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட குணமாகும் .
வெண்ணையுடன்  சேர்த்து   வில்வப்பழத்தின் குழம்பு  சிறிது சக்கரையுடன்
தொடர்ந்து சாப்பிட புத்தி கூர்மையும் ,தேஜசும் கிடைக்கும்.

 

1. It increases the glucose level and glycosylated hemoglobin in diabetic patients.
2. It decreases plasma insulin and liver glycogen in diabetic patients.
3. It decreases the lipid peroxidation.
4. It stimulates macrophage functioning.
5. It causes significant elevation in the GSH (glutathione) concentration in liver, kidney, stomach, and intestine.
Tannins:
1. It shows potent anti-viral activity.
2. It causes significant decrease in lipid peroxidation, conjugated diene and hydroperoxide levels in serum.
3. It significantly reduces the blood sugar level.
4. It reduces the significant oxidative stress.

மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.
 
உடலிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துகிறது.
 
தோலிற்கு மினுமினுப்பை அளிக்கிறது.
 
மனநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இலைகளை மென்று உண்பது நல்லது. இனி வில்வ பழத்தை கோவிலில் கண்டால் விடவே விடாதீர்கள் .அதன் இலைகளை பறிக்கக் கூடநாட்கள் என சில உள்ளது .எனவே அதையும் தெரிந்து செய்யுங்கள் .!
வில்வம் பக்திக்கும் மட்டுமல்ல ,உடல் சக்திக்கும் அதுவே துணை .!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *