மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி
பேட்டி: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி
ஒலி, காணொளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி
பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009
மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன்
பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part1.mp3{/play}
மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள்
தூதுவளை மூலிகையின் படத்தை அட்டை படமாகப் போட்டு தனது மூலிகைமணி முதல் இதழை வெளியிட்ட செய்தியைக் குறிப்பிடுகின்றார். திருமுருக கிருபானந்த வாரியார் முன்னிலையில் இந்த இதழ் வெளியீடு கண்டுள்ளது. மூலிகைமணி இதழ் மாத வெளியீடுகளை வெளியிட ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், மூலிகைமணி இதழை வெளியிட ஏற்பட்ட ஏனைய சிரமங்கள் படிப்படியாக 1964லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இதழ் வாசகர் எண்ணிக்கையில் உயர்வு பெற்று 1972 ல் வளமாக நல்ல வளர்ச்சியை அடைந்த நிலையைப் பகிர்ந்து கொள்கின்றார். இந்த இதழ்கள் வெளியீட்டிற்காக சுயமாக அச்சகத்தை ஏற்படுத்தி மூலிகைமணி அச்சகத்தில் இவை பதிப்பாக்கம் பெற்றுள்ளன. பரிபாஷையில் இருந்த பல மருத்துவ சொற்களுக்கு எளிய தமிழில் விளக்கங்களை மூலிகைமணி இதழ் கட்டுரைகள் வழி அறிமுகம் செய்திருக்கின்றார் திரு.கண்ணப்பர்.
பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part2.mp3{/play}
காப்புக் காரர் என இவர்கள் தகப்பனாருக்குப் பெயர் வந்ததற்கு காரணம் என்ன என்று திரு.சுகுமாரன் எழுப்பும் கேள்விக்கு இந்தப் பகுதியில் விளக்கம் அளிக்கின்றார் திரு.வேங்கடேசன். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக சித்த வைத்திய மருத்துவர்களாக இருந்த செய்திகள், வழி வழியாக குடும்பத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சித்த வைத்திய முறைகள், இவரது பாட்டனார் ஐயாவு முதலியார் பற்றியும் தகவல்களை இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம். – ஆர்க்காடு நவாபு இவரது
பாட்டனார் ஐயாவு முதலியாரை பெறுமை செய்ய தங்கத்தில் காப்பு செய்து அணிவித்திருக்கின்றார். இது இன்றளவும் இவரது குடும்பத்தினரால் சிறந்த கவுரவமாக போற்றப்படுகின்றது. வழி வழியாக சித்த மருத்துவம் இவர்கள் குடும்பத்தில் குடும்பத் தொழிலாக இருந்திருக்கின்றது. மரபு வழி கற்றல் என்ற அடிப்படையில் வழி வழியாக இந்த ஞானம் இவர்கள் சந்ததியினருக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. திரு.வெங்கடேசன் தற்போது மூலிகைத் தோட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். 120 மூலைகைகள் இந்தத் தோட்டத்தில் தற்போது வளர்க்கப்படுகின்றன. கொல்லிமலையின் பின் புறத்தில் இந்த மூலிகைத் தோட்டம் அமைந்திருக்கின்ற விவரத்தையும் இந்தப் பகுதில் அறிந்து கொள்ளலாம்.
பாகம் 3 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part3.mp3{/play}
சித்த மருத்துவர்களுக்குக் கொல்லி மலையோடு கூடிய உறவு மிகச் சிறப்பானது என்பதை விளக்கும் பகுதி இது. கோரக்கர் குகை பற்றிய செய்திகள், கோரக்கர் மலை வாகடம் நூலின் அடிப்படையில் இவரது ஆய்வுகள் அமைந்திருக்கும் தன்மைகள் பற்றிய தகவல்கள் இப்பகுதியில் உள்ளன.
இவரது தாத்தா ராமகிருஷ்ண முதலியார் காஞ்சிபுரத்து தேவதாசி வீதியில் தேவதாசிகளுக்குப் பால்பவினை நோய் ஏற்படுமானால் அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக இருந்திருக்கின்றார். மெல்லிய குரல் இருந்ததால் இவரை கீச்சு குரல் வைத்தியர் என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.
{wmv}kapart1{/wmv}
பகுதி 1
மூலிகைமணி கண்ணப்பர்
பாகம் 4 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part4.mp3{/play}
இப்பகுதியில் தனது தந்தையார் மூலிகைமணி கண்ணப்பர் பற்றிய தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றார்.
பெற்றோரை இழந்து சிறு வயதில் துயரமான சூழலை அனுபவித்தவர் திரு.கண்ணப்பர். தகப்பனாரின் நண்பரின் வழி இவரும் சித்த மருத்துவ துறையில் ஈடுபட்டுள்ளார்.
திரு.வேங்கடேசன் தற்போது எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை என்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது மூலிகைக் கூடத்தில் பற்பல பயிற்சிகள், பற்பல வைத்திய முறைகள், மருந்துகளை தயாரிக்கும் முறைகள் என்ற விதத்தில் மேலும் சில தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன.
பாகம் 5 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part5.mp3{/play}
திரு.கண்ணப்பர் மூலிகை மருத்துவத்தில் தனக்குள்ள தீவிர ஆர்வத்தால் மேற்கொண்ட பல்வேறு சுய ஆராய்ச்சிகளை திரு.வேங்கடேசன் விவரிக்கின்றார் இப்பகுதியில். அத்தோடு ஜோதிவிருட்ஷம், தில்லை விருட்ஷம் இரண்டைப் பற்றிய விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. திரு.கண்ணப்பர் நம் நாட்டு மூலிகைகள் என்ற தலைப்பில் தினமனியில் 1962 தொடங்கி 1970 வரை 200 மூலிகைகளை அறிமுகப்படுத்தி சாதனை செய்திருக்கின்றார். இது மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் மக்களை சென்றடைய உதவியுள்ளது.
பாகம் 6 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part6.mp3{/play}
தமிழ் மரபு என்பது மூட நம்பிக்கைகளையும் பொய்யுறைகளையும் அடிப்படைகளாகக் கொண்டவைகள் அல்ல; தமிழர் பாரம்பரியம் சிறந்த கொடைகளைச் சமூகத்திற்குத் தந்திருக்கின்றது.
மனிதனின் வாழ் நாள் மரணத்தை நோக்கியது மட்டுமல்ல; அடுத்த கட்டமான ஏழாவது அறிவை அடைவதே நோக்கம் என்கின்றார் திரு.வேங்கடேசன்.