Home Tamilmanigal து.கண்​ணப்ப முத​லி​யார்

து.கண்​ணப்ப முத​லி​யார்

by Dr.K.Subashini
0 comment

"செந்​த​மிழ்ச் செல்​வர்" வித்​து​வான் து.கண்​ணப்ப முத​லி​யார்

இடைமருதூர் கி. மஞ்சுளா

 

த​மி​ழும்,சைவ​மும் ஒரு​சேர தழைத்​தோங்கி வள​ரச்​செய்த பெரு​மைக்​கு​ரி​ய​வர் வித்​து​வான் பாலூர் து.கண்​ணப்​பர்.​ ஆற்​றல் மிக்க எழுத்​தா​ள​ராய்,​​ பன்​மு​கத் திற​மை​யு​டன் திகழ்ந்த,​​ து.கண்​ணப்​பர்,​​ தமிழ் அன்​னைக்​குப் பல ஒளி​மிக்க அணி​க​லன்​க​ளைப் பூட்டி அழ​கு​பார்த்​த​வர்.​

 

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த பாலூர் எனும் சிற்​றூ​ரில்,​​ துரை​சாமி முத​லி​யார் – மாணிக்​கம்​மாள் தம்​ப​திக்கு 1908ஆம் ஆண்டு டிசம்​பர் 14ஆம் தேதி பிறந்​தார்.​ சைவத்தை உயிர் மூச்​சா​க​வும் தமி​ழின் மீது ஆறாக் காத​லும் கொண்​டி​ருந்​த​வர் இவ​ரது தந்​தை​யார் துரை​சாமி.​
 
மீன் குஞ்​சுக்கு நீந்​த​வும் கற்​றுக்​கொ​டுக்க வேண்​டுமா என்ன?​
 
தந்தை வழி​யைப் பின்​பற்​றியே சைவ​மும் தமி​ழும் இரு​கண்​கள் எனப் போற்றி,​​ அவை செழித்​தோங்​கப் பாடு​பட்​டார் கண்​ணப்​பர்.​

 

ஆ​ரம்​பப் பள்​ளிக் கல்​வியை முடித்து,​​ பின்​னர் செந்​த​மிழ்க் கல்​வி​யைக் கற்​ப​தில் மிகுந்த ஆர்​வம் காட்​டி​னார்.​ கல்​வித் தொண்டு புரி​வ​தையே தம் கட​மை​யா​கக்​கொண்டு வாழ்ந்த டி.என்.சேஷா​ச​லம் ஐயர் என்​ப​வ​ரி​டம் கண்​ணப்​பர் ஆங்​கில மொழி​யை​யும்,​​ தமி​ழி​லக்​கிய இலக்​க​ணங்​க​ளை​யும் குற்​ற​ம​றக் கற்​றார்.​ என்​றா​லும்,​​ அவ​ரது தமிழ் வேட்கை ஒரு​சி​றி​தும் தணி​ய​வில்லை.​ இத​னால்,​​ 
 

  • மே.வீ.வேணு​கோ​பா​லப் பிள்ளை
  • கோ.வடி​வேலு செட்​டி​யார்
  • "இசைத் தமி​ழ​றி​ஞர்" சூளை வைத்​திய​லிங்​கம்
  • ஆகி​யோ​ரி​ட​மும் சென்று
  • தமி​ழி​லக்​கி​யம்
  • இலக்​க​ணம்
  • தருக்​கம்
  • வேதாந்​தம்
  • சைவ​ சித்​தாந்​தம்
  • தமி​ழிசை

 

ஆகி​ய​வற்றை முறை​யாக,​​ கச​ட​றக் கற்​றுத் தேர்ந்​தார்.​

 
"தமி​ழா​சி​ரி​யர் பணியே தலை​யா​ய​பணி" என்ற எண்​ணம் கொண்​டி​ருந்த கண்​ணப்​பர்,​​  சென்​னை​யில் உள்ள லூத்​த​ரன் மிஷன் உயர்​நி​லைப் பள்​ளி​யில் தமி​ழா​சி​ரி​யர் பணி​யைத் தொடர்ந்​தார்.​  பின்​னர், சென்னை முத்​தி​யா​லுப்​பேட்டை மேல்​நி​லைப் பள்​ளி​யில் நான்கு ஆண்​டு​க​ளும் திரு​வல்​லிக்​கே​ணி​யில் உள்ள கெல்​லெட் மேல்​நி​லைப் பள்​ளி​யில் 11 ஆண்​டு​க​ளும்
பணி​பு​ரிந்​தார்.​  நிறை​வாக இரா​யப்​பேட்​டை​யில் உள்ள புதுக் கல்​லூ​ரி​யில் 16 ஆண்​டு​கள் தமிழ்த்​து​றைத் தலை​வ​ரா​க​வும்,​​ பேரா​சி​ரி​ய​ரா​க​வும் பணி​யாற்​றி​னார்.​

அன்​றைய நாள்​க​ளில்,​​ சென்னை -​ இரா​யப்​பேட்டை,​​ பெரம்​பூர்,​​ குயப்​பேட்டை முத​லிய இடங்​க​ளில் பொது​மக்​க​ளுக்​காக இர​வுப் பாட​சா​லை​கள் இல​வ​ச​மாக இயங்கி வந்​தன.​ அங்கு பயின்று வந்த பல​ருக்கு கண்​ணப்​பர் இல​வ​ச​மா​கத் தமிழ் கற்​றுக்​கொ​டுத்​தார்.​ மேலும்,​புர​சை​வாக்​கம் ​சுந்​த​ரர் கல்​லூ​ரி​யில் புல​வர் வகுப்பு
நடத்​தி​னார்.​

  • புரசை கம்​பன் கழ​கம்
  • சிந்​தா​தி​ரிப்​பேட்டை தமிழ்ச்​சங்​கம்
  • சூளை இளை​ஞர் கழ​கம்

ஆகிய தமிழ் அமைப்​பு​க​ளுக்​குச் சென்று தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​க​ளைக் கற்​பித்​தார்.​ இவை​த​விர,​​ "அம்​மை​யப்​பர் கழ​கம்" எனும் ஓர் அமைப்​பைத் தோற்​று​வித்து,​​ அதன்​வழி பல​ருக்​கும் தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​க​ளைக் கற்​பித்​தார்.​
 
த​மிழ் நூல் வர​லாறு என்​னும்,​​ "தமிழ் இலக்​கிய வர​லாறு" என்ற நூலை,​​ தமிழ் இலக்​கிய உல​கிற்கு வழங்​கி​யுள்​ளார்.​ தமிழ் இலக்​கிய வர​லாற்​றில் காலம்​தோ​றும் நிகழ்ந்து வரும் பல மாற்​றங்​க​ளை​யும், திருப்​பங்​க​ளை​யும், புது​மை​யைக் கையா​ளும் முறை​க​ளை​யும் கவ​னத்​தில் கொண்டு,​​ விருப்பு வெறுப்​பற்ற நடு​நி​லை​மை​யு​டன் தான் கண்ட ஆய்வு முடி​வு​க​ளைத் துணி​வா​க​வும் அதே நேரத்​தில் தனக்கு உடன்​ப​டாத,​​ சில முர​ணான செய்​தி​க​ளைத் தகுந்த ஆதா​ரத்​து​டன் மறுத்​தும் இந்நூ​லில் பதி​வு​செய்​துள்​ளார்.​
 
இதைத்​த​விர,​​

  • மாண​வர்​க​ளுக்​கான நூல்​கள்
  • இலக்​க​ணம்
  • இலக்​கி​யம்
  • வாழ்க்கை வர​லாறு
  • சம​யம்
  • தொகுப்பு
  • ஆய்வு
  • உரை நூல்​கள்

என 57 நூல்​க​ளைப் படைத்​த​ளித்​துள்​ளார்.​

தெய்​வானை என்​னும் பெண்ணை இல்​வாழ்க்​கைத் துணை​யாக ஏற்​றுக்​கொண்ட கண்​ணப்​பர்,​​ இல்​ல​ற​நெ​றி​யி​லும் சிறந்து விளங்​கி​னார்.​ அவர்​க​ளுக்கு மக​ளிர் எழு​வர் பிறந்​த​னர்.​ ப​ழம்​பெ​ரும் இலக்​கிய,​​ இலக்​கண உரை​யா​சி​ரி​யர்​க​ளான இளம்​பூ​ர​ணர்,​​ நச்​சி​னார்க்​கி​னி​யர்,​​ பேரா​சி​ரி​யர் முத​லிய உரை​யா​சி​ரி​யர்​க​ளுக்கு இணை​யா​கத் தமிழ் மந்​தி​ரம்,​​ திரு​ஈங்​கோய்​மலை எழு​பது,​​ சேக்​கி​ழார் பிள்​ளைத் தமிழ் போன்ற நூல்​க​ளுக்கு இவர் எழு​திய ஆராய்ச்சி உரை​களே இவ​ரது உரைச்​சி​றப்​புக்கு சான்று கூறு​வன.​
 
மகா​வித்​து​வான் மீனாட்​சி​சுந்​த​ரம் பிள்​ளை​யின்,​​ சேக்​கி​ழார் பிள்​ளைத் தமி​ழுக்கு கண்​ணப்​பர் எழு​திய பேருரை "பெரு​வி​ளக்​க​வுரை" எனப் போற்​றப்​ப​டு​கி​றது.​ தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​கள்,​​ சைவ சித்​தாந்த ​மெய்​கண்ட சாத்​தி​ரங்​கள்,​​ பெரி​ய​பு​ரா​ணம் முத​லி​ய​வற்றை ஆராய்​ப​வ​ருக்கு கண்​ணப்​பர் இயற்​றிய இப்பேருரை மிக​வும் பய​னுள்​ள​தா​க​வும் மிகச் சிறந்த வழி​காட்டி நூலா​க​வும் விளங்​கும் என்​ப​தில் எள்​ள​ள​வும் ஐய​மில்லை.​
 
தொள்​ளா​யி​ரம் பக்​கங்​கள் கொண்ட இவ​ரது பேருரை நூல் போல் இது​வரை வேறு எவ​ரும் உரை​வி​ளக்​கம் அளிக்​க​வில்லை என்​ப​தும் குறிப்​பி​டத்​தக்​கது.​  அது​மட்​டு​மன்றி,​​ இவ​ரது பணி​க​ளி​லேயே மிக உன்​ன​த​மான பணி என்று கூறி​னால்,​​

  • சென்​னை​யில் அமைந்த "சைவ சித்​தாந்த சமா​ஜம்"
  • சென்னை எழுத்​தா​ளர் சங்​கம்
  • செங்கை மாவட்ட எழுத்​தா​ளர் சங்​கம்

முத​லிய அமைப்​பு​க​ளில் முக்​கிய பொறுப்​பு​களை ஏற்று அதன்​வழி பல பணி​க​ளைச் செவ்​வனே செய்​த​தும்,​​ தமி​ழா​சி​ரி​யர் நிலை உய​ர​வும் பாடு​பட்​டது தான் என​லாம்.​
 
மேலும்,​​ சென்​னைப் பல்​க​லைக்​க​ழ​கப் பாடத்​திட்​டக் குழு​வி​லும் முக்​கிய உறுப்​பி​ன​ராய்த் திகழ்ந்து பணி​யாற்​றி​யுள்​ளார்.​

 
"தமிழ் மந்​தி​ரம்" என்ற ஓர் அரிய நூலைப் படைத்​துள்​ளார் பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர்.​ திரு​மூ​ல​ரின் திரு​மந்​தி​ரத்தி​லி​ருந்து தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட 365 பாடல்​களை உள்​ள​டக்​கிய ஒரு தொகுப்பு நூல் இது.​ எளிய நடை​யி​லும்,​​ சிறந்த உரை​யு​ட​னும் கூடிய இந்நூ​லில்,​​ 15க்கும் மேற்​பட்ட ஆய்​வுக் கட்​டு​ரை​களை எழு​தி​யுள்​ளார்.​  திரு​மந்​தி​ரத்தை ஆராய்​ப​வர்க்கு இந்​நூல் மிகுந்த பயன் தரக்​கூ​டி​யது.​கற்​ப​னைக் காட்​சி​களை கண்​முன் கொண்​டு​வந்து நிறுத்​தும் ஓர் அற்​புத நூல்,​​ "திரு​ஈங்​கோய் மலை எழு​பது".​ இது 11ஆம் திரு​மு​றை​யில் இடம்​பெற்ற பக்​திப்  பனு​வல்.​ தலை​சி​றந்த ஆய்​வா​ள​ரான கண்​ணப்​ப​ரின் ஆய்​வுத்​தி​ற​னுக்​குக் கட்​டி​யம் கூறும் நூல்,​​ "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​" என்​பது.​ சுந்​த​ர​மூர்த்தி  சுவா​மி​க​ளால் பாடப்​பட்ட திருத்​தொண்​டத்​தொ​கை​யில்,​​ "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர்க்​கும் அடி​யேன்" என்று சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​கள் குறிப்​பி​டு​கி​றார்.​
 
அவர் குறிப்​பி​டும் "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​" என்று பல அறி​ஞர்​க​ளின் உள்​ளங்​க​ளில் தோன்​றிய கேள்​விக்கு சரி​யான விடை கிடைக்​க​வில்லை.​  சுந்​த​ரர் பாடிய ஒரு வரிக்கு,​​ 88 பக்​கங்​க​ளில் தக்க ஆதா​ரத்​து​டன் "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் மாணிக்​க​வா​ச​கர்" தான் என்று சரி​யான – ​உண்​மை​யான விடை கண்​ட​வர் பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர் ஒரு​வர்​தான்.​

 

இந்நூ​லின் சிறப்பு குறித்து,​​ "திரு​வா​ளர் பாலூர் கண்​ணப்ப முத​லி​யார் இயற்​றிய பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​ என்ற நூலை ஓதும் பேறு பெற்​றேன்.​  இவ்​வாறு எழும் வினா​விற்கு விடை​யாக மாணிக்​க​வா​ச​கரே எனப் பல சான்​று​கள் காட்​டிக் கூறு​கின்​றார்.​ சிக்​க​லான கேள்வி இது.​ இருந்​தா​லும் இவர் நூல் இனி​தா​க​வும், எளி​தா​க​வும் அமைந்​துள்​ளமை பாராட்​டத் தக்​க​தே​யாம்" என்று பன்​மொ​ழிப் புல​வர் தெ.பொ.மீனாட்​சி​சுந்​த​ர​னார் கூறி​யுள்​ளார்.​

 

சன்​மார்க்க சிங்​க​மான வள்​ள​லா​ரின் "இங்​கி​த​மாலை" என்ற அகப்​பொ​ருள் சார்ந்த இந்​நூ​லுக்கு பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர் அளித்​துள்ள உரை​ வி​ளக்​கம்,​​ இவ​ரது  உரைத்​தி​ற​னுக்​குச் சான்​றாய் அமை​கி​றது.​கண்​ணப்​ப​ரது மணி​விழா,​​ 1969ஆம் ஆண்டு அக்​டோ​பர் 16ஆம் தேதி மிகச் சிறப்​பா​கக் கொண்​டா​டப்​பட்டு,​​ அம்மணி​வி​ழா​வின் ​போது சிறப்பு மலர் ஒன்​றும்
வெளி​யி​டப்​பட்​டது குறிப்​பி​டத்​தக்​கது.​ இவ​ரது அரும்​பெ​ரும் பணி​களை நினைவு கூர்ந்து போற்​றும் வகை​யில்,​​

  • செந்​த​மிழ்ச் செல்​வர்
  • சைவ​ச​மய சிரோன்​மணி

என்று இவ​ரைத் தமி​ழ​றி​ஞர்​கள் போற்​றிச் சிறப்​பித்​துள்​ள​னர்.​

த​மது 63ஆம் அக​வை​யில்,​​ 1971ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இவ்​வுலக வாழ்வை நீத்​தா​லும்,​​ தமிழ்ப் பேரு​ல​கில் நிலை​யான தடம் பதித்​து​விட்​டார் பாலூர் கண்​ணப்​பர்.​
 
தன் கண்​ணையே பரம்​பொ​ரு​ளுக்​குத் தந்த கண்​ணப்​பநா​ய​னா​ரைப் போல,​​ தமிழ்ப் பணிக்​கா​க​வும் சைவ சம​யத்​துக்​கா​க​வும்
தமது வாழ்​நா​ளையே அர்ப்​ப​ணித்த பேரா​சி​ரி​யர் கண்​ணப்​ப​ரின் பெய​ரும் புக​ழும்,​​ தமி​ழும் சைவ​மும் உள்​ள​வரை நின்​றோங்​கும்!

 
நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment