Home Tamil Writers திரு.வி.க.

திரு.வி.க.

by Dr.K.Subashini
0 comment

பழைமையில் பூத்த புதுமை மலர் திரு.வி.க!

புலவர் கோ. ஞானச்செல்வன்

thiru.vi.ka

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் –  சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (26.8.1883) பிறந்தவர் இவர்.

தாத்தா வேங்கடாசல முதலியார் காலத்திலேயே திருவாரூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். தந்தையார் காலத்தில், துள்ளத்தில் பிறந்திருந்தும், முன்னோரின் பிறப்பிடமாகிய திருத்தலம் திருவாரூரை மறவாதிருக்கத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டு திருவாரூர் வி. கலியாணசுந்தரம் என்றே கையொப்பமிட்டு வந்தார். 1890ல் துள்ளத்திலிருந்து, சென்னை இராயப்பேட்டைக்குக் குடும்பம் வந்து சேர்ந்தது. தம் இறுதிநாளான 17.9.1953 முடிய இராயப்பேட்டையிலேயே வாழ்ந்திருந்தார் திரு.வி.க.

  • தமிழ்த்தென்றல்
  • தமிழ் முனிவர்
  • தமிழ்ப் பெரியார்
  • சாது
  • சாது முதலியார்

என்று பலவாறாகப் பலரால் அழைக்கப்பட்ட இவருக்கு நிகராகப் பல்துறைத் தொண்டாற்றியவர் வேறு எவரும் இலர் என்றே சொல்லலாம். மெலிந்த, நலிந்த உடல்வாகு கொண்ட இவர் எழுபது ஆண்டுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.

ஆன்மிகத்தில் ஒருகாலும், இலக்கியத்தில் ஒருகாலும் அழுத்தமாக ஊன்றி, அரசியலுக்கு ஒரு கையும், தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு கையும் படர்த்திப் பெண்ணின் பெருமை பேசுகின்ற வாயோடும், பொதுவுடைமையையும், பொதுச் சமய நன்னெறிகளையும் எதிர்நோக்கும் விழிகளையும் கொண்டு இயங்கியவர்.

1917ல் அரசியலில் இவரது கன்னிப்பேச்சு கூட்டத்தாரைக் கவர்ந்தது. அன்னிபெசன்ட் அம்மையாரிடம் அரசியல் நிலையிலும், ஆன்மிக நிலையிலும் திரு.வி.க.வின் மனம் ஈடுபட்டது. திலகர் வழியில் தொடங்கிய இவரது அரசியல் பின்னாளில் காந்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டது.

  • தேசபக்தன்
  • நவசக்தி

இதழ்களின் வாயிலாக இவர் எழுதிய – எழுப்பிய விடுதலை உணர்வை வேறு எவரும் செய்திருக்க இயலாது. எழுத்தாலும் பேச்சாலும் விடுதலைக் கனலை மக்கள் மனத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்த விடுதலை வீரர் எனலாம். தமிழ்நாட்டுக் காங்கிரஸின் முப்பெரும் தலைவர்களாக அந்நாளில்,

  • வரதராசுலு நாயுடு
  • ஈ.வே. இராமசாமி நாயக்கர் மற்றும்
  • திரு.வி. கலியாணசுந்தர முதலியார்

ஆகியோர் திகழ்ந்தனர். மக்கள் இவர்களை,

  • நாயுடு
  • நாயக்கர்
  • முதலியார்

என்றே அழைத்தனர்.

திரு.வி.க. தாம் வகித்து வந்த வெஸ்லிக் கல்லூரித் தமிழாசிரியர் வேலையை அரசியல் பணிகளுக்காகக் கைவிட்டவர். பல மாநாடுகளில் பங்கேற்றும் தலைமை தாங்கியும் எழுச்சியுரை ஆற்றினார். மார்க்சியத்தை மனமார ஏற்று அக்கருத்துகளையும் தேசிய மாநாடுகளில் பரப்பி வந்தார்.

1925ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் திரு.வி.க. வீற்றிருக்க, பெரியார் ஈ.வே.ரா. கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை, மாநாட்டுச் சூழல் காரணமாக, தலைவர் ஆதரிக்க மறுத்ததால் ஈ.வே.ரா. காங்கிரஸிலிருந்து விலகவும் அவர் காரணம் ஆனார். பின்னாளில் தாமும் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் என்பது தனிக்கதை. ஆயினும் அரசியல் துறவு மேற்கொள்ளவில்லை.

ஆயிரம் விளக்குப் பகுதி பள்ளியிலும், வெஸ்லிக் கல்லூரியிலுமாக ஏழரையாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பழைய இலக்கியங்களையும் புதுமை நோக்கில் இனிமை தவழ அவர் கற்பித்தமை தனித்தன்மை வாய்ந்தது. நான்கு முழக் கதர் வேட்டியும், கதர் முழுக்கைச் சட்டையும், தோளில் சுற்றிய ஒரு துண்டுடன் எளிமையுடையவராக வாழ்ந்தார். தமிழ்த் தென்றலாகத் தவழ்ந்து வரும் அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.

  பேச்சிலும் ஏற்றமுடையது அவரது எழுத்து. திரு.வி.க. எழுத்து நடை ஒரு தனி நடை. கரடு முரடான கடுநடையின்றி இனிய செந்தமிழில் உணர்ச்சி மிகுந்து காணப்படும் நடை அவருடையது. அவர் எழுத்துகளை அச்சிட நிரம்ப உணர்ச்சிக்குறிகளும் (!) வினாக்குறிகளும் (?) வேண்டும்.   எண்ணுக! கருதுக! எழிலின் திருக்கோலம் என்னே! வியப்பினும் வியப்பே! என்றவாறும், நோக்கம் என்ன? அளவுண்டோ? புகழவல்லேன்?   என்ற ஆளுமைகளை நூல்கள் முற்றிலும் காணலாம்.   ஏறத்தாழ ஐம்பது நூல்கள் படைத்தளித்துள்ளார். அவை தமிழுக்குத் திரு.வி.க.வின் கொடை எனலாம்.

  • முருகன் அல்லது அழகு
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
  • முடியா? காதலா? சீர்திருத்தமா?
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்
  • உள்ளொளி
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • சைவத்தின் சமரசம்
  • முருகன் அருள்வேட்டல்

முதலாய ஆறு வேட்டல் என மறக்க முடியாத நூல்கள் பற்பலவாம்.

தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற வ.உ.சி. அவர்களைப் போன்றே திரு.வி.க.வும் அரும்பணி ஆற்றியுள்ளார்.

தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பிலிருந்த எவரும் செய்திராத வகையில், தொழிலாளர்க்கு மார்க்சிய, லெனினிய கொள்கை விளக்க வகுப்புகள் நடத்தியவர் திரு.வி.க. ஒரு பொழிவின்போது “தொழிலாளர்க்குப் புள்ளிவிவரக் குறிப்புகள் கூறலாமா?” என்று காவல் துறைத் தலைவர் கடிந்துரைத்தபோது, தொழிலாளரும் “மாந்தர் அல்லரோ?” என முகத்தில் அடித்தால் போல் விடை பகர்ந்தார்.

மார்க்சிய இலக்கை காந்திய வழியில் அடைவதே திரு.வி.க.வின் தனிப்பாதை. மார்க்சியமும், காந்தியமும் அவரின் இருகண்கள். மார்க்சியம் தந்தை என்றால் காந்தியம் தாய் என்றார் அவர்.

திரு.வி.க. சமயப்பற்றுமிக்கவர். சமயப்பற்றினும் சமயப்பொறைமிக்கவர். சமய நூல்களில் புலமையும், ஆழ்ந்தகன்ற அறிவும் தெளிவும் உடையவர். சைவ, வைணவ, சமண, பெளத்த, கிறித்துவ, இஸ்சுலாமிய நூல்களைக் குறைவின்றிக் கற்றவர். யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளையும், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ஞானியாரடிகளும் பெரு ஞானத்தை ஊட்டியவர் ஆவர்.

புராண விரிவுரைகள் ஆற்றி வந்தவர், பட்டினத்தார் பாடல்களுக்கு உரை எழுதினார். பற்பல “பக்த சன சபை”க் கூட்டங்களில் பேசி வந்தார். தவத்திரு ஞானியாரடிகள் தலைமையில் சைவ சிந்தாந்த “மகா சமாச” விழாவில் அரியதோர் உரையாற்றினார். 1934ல் சைவ சித்தாந்த மகா சமாச மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார்.

அவரவர் சமய நெறி கடைப்பிடித்து வாழ வேண்டும்; பிற சமய வெறுப்பு வேண்டா; உயிர்ப்பலியிடுதல் கூடாது; புலால் உண்ணக் கூடாது என்பவை அவர் வலியுறுத்திய சமய நெறிகள். பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமை, சாதி வேறுபாடு கருதாமை, அன்பே சிவம் என்றறிதல், எவரையும் தாழ்த்தாமல் மதித்து நடத்தல் எனும் சமரச நெறிகளை வற்புறுத்தியும் கடைப்பிடித்தும் வாழ்ந்தார்.

ஆணுக்குப் பெண் நிகரானவள் என்னும் கருத்திற்கும் மேலாக, ஆணினும் பெண் உயர்வுடையவள்; போற்றி வணங்கி வழிபடத் தக்கவள் என்னும் கருத்தை இடையறாது வலியுறுத்தியவர் திரு.வி.க. “பெண்ணின் பெருமை” எனும் நூல் திரு.வி.க.வின் பெண்ணியச் சிந்தனைகளுக்குச் சான்றாக விளங்குகிறது.

அன்பு மனைவியுடன் ஆறாண்டுகள் வாழ்ந்து, ஆண், பெண் இரு குழந்தைகளைப் பெற்று இரண்டையும் அற்ப ஆயுளில் இழந்து, பின்னர் மனைவியையும் என்புருக்கி நோய்க்குப் பலி கொடுத்து வாடிய திரு.வி.க. மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர்.

அரசியலில் அனைத்துக் கட்சியினரிடத்தும் அன்பும், தொடர்பும் கொண்டிருந்தார்.

  • தேசியம்
  • நயன்மை (நீதிக்கட்சி)
  • திராவிடம்
  • தமிழியம்
  • பொதுவுடைமை

என அனைத்துப் பிரிவினரும் மதித்துப் போற்றும் சான்றோராக வாழ்ந்தார். பதவிக்கும், புகழுக்கும், செல்வத்திற்கும் நசையுறாத மேன்மை கொண்டவர்.

வாடகை வீட்டிலே வாழ்ந்தவருக்குச் சொந்த வீடு அமைத்துக் கொடுக்கச் சிலர் முனைந்தபோதும் “வேண்டா” எனத் தடுத்த நேர்மையாளர். அவர்தம் குழந்தையாகப் பேணி வளர்த்த சாது அச்சுக்கூடம் இன்றில்லை. கண்ணொளி மங்கிய இறுதிக் காலத்திலும் சாது அச்சக நண்பரைக் கொண்டு, திரு.வி.க. சொல்ல அவர் எழுத என்று உருவாக்கம் ஆன நூல் “முதுமை உளறல்.” இப்படியும் ஒருவர் வாழ்ந்தாரா? என்று வியக்கச் செய்யும் வாழ்வு அவருடையது.   பழைமையில் பூத்த புதுமை மலர் திரு.வி.க!     நன்றி: தமிழ்மணி (தினமணி)

 


… உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்பொவது உண்மை. மேல்நாடும் கீழ்நாடும் ஒன்றுபட்டு ஈனப் போகும். உலகு உங்கள் அருணெறியையே தழுவும்…” (திரு.வி.க:1930: சைவத்தின் சமரசம்).

நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு திரு.வி.க. அவர்கள் அளித்த வாழ்த்தோ இது!

சான்றோர்கள் பலர் வாழும் நெறியை நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். உணர்த்தியும், வாழ்ந்தும், மிக்க சிலர் வழி காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு பற்பலத் துறைகளில் கலங்கரை விளக்காக திகழ்ந்த அரிய மனிதர், திரு.வி.கல்யாணசுந்தரம் ( 26.08.1883 – ‍ 17.09.1953).

திரு.வி.க. அவர்கள், “புலவர்க்கும் புலவர்; எழுத்தாளகளுக்கும் எழுத்தாளர்…(அவர்களை) இணைக்கும் பாலமாக அவரது வாழ்க்கை இய‌ங்கியது…” என்கிறார், மு. வரதராசன் (மு.வ: 1972: தமிழ் இலக்கிய வரலாறு:15,16). தொழிலாள‌ர் உரிமையை முதல் முதலாக இந்தியாவில் 27. ஏப்ரல், 1918 அன்று நிலை நிறுத்திய திரு.வி.க, நாட்டுப்பற்று உந்த,  அரசியலில் புகுந்து, இதழியலில் ஆழ்ந்து, தமிழை அரியாசனத்தில் அமர்த்தினார்.
தமிழ் உரை நடையின் தந்தை இவரே. பெண்ணியம், சமுதாய சீர்திருத்தங்கள், சமரசம், காந்தீயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய அவர், கடைசி மூச்சு வரை தன்னை மார்க்ஸிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டார். சமயமோ, திருவாரூர் சோழிய வேளாண் மரபைச் சார்ந்த சைவம். அறிந்து கொண்டதோ, கிருத்துவம், இஸ்லாம், பெளத்தம், சைன மதங்களின் சாராம்சம். வாழ்ந்ததோ வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் ஜீவகாருண்ய, சமரசக் கோட்பாடுகளுடன்!
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று ஐம்பது வருடங்களில், அயராது உழைத்து 55 நூல்களை வெளியிட்ட  திரு.வி.க. அவர்கள், ஏழ்கடலையும் கடந்து இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை, கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்பே வாழ்த்தியுள்ளார் என்று நாம் பெருமிதம் கொள்வது, கற்பனை அல்ல.  இதற்கு ஆதாரமாக, யான்  ஒரு மேல்நாட்டு மேற்கோளை  சொல்ல விரும்புகிறேன். ” நமது முன்னோர்களான இலக்கியச்சிற்பிகள் நம்மிடம் தானே, தமது இறவா வரத்தை விட்டுவிட்டு சென்றார்கள். ( டி.ஏஸ். எலியட்: மரபும், தனி மனிதனும்).
– ஸ்ரீ.செளந்தரராஜன் (22/11/2007)
“It is truly said: Your Right Conduct will spread across the Globe. The West and the East shall meet.  The World shall look forward to your Ethics…” – Thiru.Vi.Ka: 1930: Saivism Reconciled Oh!
Is this Thiru.Vi.Ka. greeting our Tamil Heritage Foundation!
Mentors who taught us Wisdom are many.  Some, among them led exemplary lives and taught by example.  Rare, some did both. Thiru.Vi.Kalyanasundaram (26.08.1883 – 17.09.1953) is the beacon light for us in many spheres.  Describes as “…the preeminent scholar among scholars, the preeminent writer among writers…the bridge for them was his life…” (Mu.Varatharaachan: 1972: History of Tamil Literature:15, 16),Thiru.Vi.Ka.was also the founder of trade unionism in India on April 27. 1918.
The magnet of patriotism drew him to politics and Tamil Journalism.  It was he, who had enthroned modern Tamil prose. Thiru.Vi.Ka’s service to feminism, social reforms, the spirit of reconciliation and Gandhism is profound.  He held fast to his Marxism till he breathed his last. His religion was Saivisim in the Thiruvarur Solizhiya Velan Marabu (Tradition).
He was well-versed in the intricacies of Christianity, Islam, Buddhism and jainism also. His chosen spiritual path was that of Compassion and Reconciliation, preached by the mystic, Ramalinga Adigalar. He brought out 55 books in a span of fifty years, working indefatigably.
His life was one of service.  We are not imagining in perceiving his Blessings unto us, in a passage written seventy years ago in a different context.  I cite in support none other than T.S.Eliot in his Tradition and the Individual, “…not only the best, but the most individual parts of his (writer’s) work may be those in which the dead poets, his ancestors assert their immortality most vigorously…”.

– Mr.Soundararajan (22/11/2007)

—————————————————————————————————————————————————————-
A.வாழ்க்கை வரலாறுகள்
1.நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் – 1908
2.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
3.பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – 1927
4.நாயன்மார் வரலாறு – 1937
5.முடியா? காதலா? சீர்திருத்தமா? – 1938
6.உள்ளொளி – 1942
7.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
8.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
B.உரை நூல்கள்
09.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
10.பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் – 1923
11.காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1941
12.திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
13.திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) 1941
C.அரசியல் நூல்கள்
14.தேசபக்தாமிர்தம் – 1919
15.என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
16.தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
17.தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
18.சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து – 1930
19.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
20.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
21.இந்தியாவும் விடுதலையும் – 1940
22.தமிழ்க்கலை – 1953
D.சமய நூல்கள்
23.சைவசமய சாரம் – 1921
24.நாயன்மார் திறம் – 1922
25.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
26.சைவத்தின் சமசரசம் – 1925
27.முருகன் (அல்லது) அழகு – 1925
28.கடவுட் காட்சியும் தாயுமானவரும் – 1928
29.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் – 1929
30.தமிழ் நூல்களில் பௌத்தம் – 1929
31.சைவத் திறவு – 1929
32.நினைப்பவர் மனம் – 1930
33.இமயமலை (அல்லது) தியானம் – 1931
34.சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
35.சமரச தீபம் – 1934
36.சித்தமார்கக்ம – 1935
37.ஆலமும் அமுதமும் – 1944
38.பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி – 1949
E.பாடல்கள்
39.உரிமைவேட்கை (அல்லது) நாட்டுப்பாடல் – 1931
40.முருகன் அருள் வேட்டல் – 1932
41.திருமால் அருள் வேட்டல் – 1938
42.பொதுமை வேட்டல் – 1942
43.கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
44.புதுமை வேட்டல் – 1945
45.சிவனருள் வேட்டல் – 1947
46.கிறிஸ்து மொழிக்குறள் – 1948
47.இருளில் ஒளி – 1950
48.இருமையும் ஒருமையும் – 1950
49.அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி – 1951
50.பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – 1951
51.சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் – 1951
52.முதுமை உளறல் – 1951
53.வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் – 1953
54.இன்பவாழ்வு – 1925
பிற நூல்கள்..
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம்
———————————————————————————————————————————————————–

Obituary in The Hindu dated  September 19, 1953 – Passing away of Thiru.Vi.Ka

The scholar-writer Mr. T.V.Kalyanasundara Mudaliar (71), well-known as “Thiru Vi.Ka.”, passed away in his residence in Ganapathi Mudali Street, Royapettah, Madras, on the evening of the 17th. He had lost consciousness at about 5 p.m. and breathed his last at 7-40 p.m.
An eminent scholar in Tamil, a great writer, a fluent speaker, and a former Trade Union Leader, Thiru.Vi.Ka. had been ailing for about three months. His 71st birth-day had been celebrated not long before.

Thiru Vi.Ka. had written nearly 50 books on subjects of varied interest — such as school education, social service, and religion.
He was an ardent follower of the teachings of Saint Sri Vallalar Ramalinga Swamigal. Thiru.Vi.Ka. provided written commentaries on Tirukkural and Periya Puranam.

He composed too a number of fine Tamizh poems. Among his outstanding works were
“Pennin Perumai”
“Manitha Vazhkkaiyum Gandhiyadigalum” and
“Murugan (Azhagu)”

He had been a keen advocate for workers’ rights, but retired from trade union and political activity in 1947.
Born in Tullam village in Chinglepet district in 1883, Mr.Kalyanasundara Mudaliar went to the Wesley College High School.
He worked in Spencers in Madras for a short time, and later as a teacher in the Thousand Lights School. During 1916-17 he was employed as a Tamil lecturer in the Wesley College. In December 1917 he joined the editorial staff of Desabakthan, a Tamil daily, which he served for more than two years.

Thiru.Vi.Ka. entered the field of trade union activity in 1918. Joining hands with Mr. B.P.Wadia, he was responsible for the establishment of the labour movement for the first time in South India in 1918. Thiru.Vi.Ka. started the Tamil weekly Navasakthi in 1920.
He was President of the Tamizh Nadu Congress Committee in 1926. Mr.C.Rajagopalachari, Chief Minister of Madras, called at the residence of the late Thiru V.Kalyanasundara Mudaliar and paid his last respects to the departed leader. Among others who visited the residence were
Messrs.

J.Sivashanmugham Pillai, Speaker of the Madras Assembly,
T.Chengalvaroyan, Mayor,
S.Parthasarathi Iyengar, Commissioner of Police,
M.Bhaktavatsalam,
M.P.Sivagnana Gramani,
T.P.Meenakshisundaram,
S.S.Vasan,
Abdul Hameed Khan,
Dawood Shah,
Periaswami Thooran,
Dr.B.Natarajan,
Dr.P.Varadarajalu Naidu,
Kotthamangalam Subbu,
N.D.Sundaravadivelu,
K.Chandrasekharan,
K.S.Ramaswami Sastri,
Pandithai Krishnaveni Ammal,
Mrs. Neelavathi Ramasubramaniam,
Dr.Dharmambal, and
Mrs.Tara Cherian.

The body of Thiru Vi. Ka. was removed to the premises of the Madras Labour Union in Perambur Barracks Road, from where it was to be taken in procession through the main roads of the City to Mylapore for the last rites.


 

திரு.வி.க. பற்றிய திருவாளர் ஸ்ரீ.செளந்தரராஜன் அவர்களின் சிந்தனைகள் :

 

 

Soundararajan

 

Mr.S.Soundararajan (Innamburan) took his Masters in Economics in 1954 (Madras), in Applied Sociology (Advice Studies´) in 2006 (Staffordshire University UK) and is currently a student in B.Litt (Tamil). He retired as the Additional Deputy Comptroller & Auditor General of India in 1991 and was into Consultancy and lecture tours for some time. He writes occessionaly in the Hindu and Frontline. He spent five years as a Citizen Adviser in the UK, as a volunteer.  

Mr.Soundarajan is an admiror of  Thiru.Vi.ka. He shares his thoughts and  recalls historical  events linking Thiru.Vi.Ka  period. He is currently living in England.

[The telephone conversation recordet by Dr.K.Subashini]

 

 

பாகம் 1 :

-திரு.வி.க அறிமுகம்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 14/11/2008]

 

பாகம் 2 :

-போதி மரம் திரு.வி.க. ஒரு உருவகம்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 14/11/2008]

 

பாகம் 3 :

– பல சமய ஞானம்
– தேச பக்தனில் ஏற்பட்ட தொடர்பு
– சந்தித்த பிரச்சனைகள்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 14/11/2008]

 

பாகம் 4 :

– தொழிற்சங்கவாதி திரு.வி.க

[பதிவு செய்யப்பட்ட நாள்: 14/11/2008]

 

பாகம் 5 :

– 6.4.1919 – சத்தியா கிரக நாள் – விவரணை

[பதிவு செய்யப்பட்ட நாள்: 28/11/2008]

 

பாகம் 6 :

– திரு.வி.கவின் வாரிசுகள்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 28/11/2008]

 

You may also like

Leave a Comment