"குன்றின் மேலிட்ட தீபம்" த.நா.குமாரஸ்வாமி கலைமாமணி விக்கிரமன்   தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும், பண்டைய இலக்கியங்களுக்கு ஈடாக மகாகவி பாரதியின் வழியில் புத்திலக்கியம் படைத்த எழுத்தாளர்கள் பலர்.   அவர்களுள், த.நா.குமாரஸ்வாமியைத் தமிழ் படைப்பிலக்கிய உலகம் என்றும் மறக்காது.   சென்னையில், 1907ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி தண்டலம் நாராயணஸ்வாமி ஐயர் – இராஜம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.     60 ஆண்டுகளுக்கு முன்புRead More →

முது​பெ​ரும் எழுத்​தா​ளர் -​ நாரண துரைக்​கண்​ணன் கலை​மா​மணி விக்​கி​ர​மன்   நாரண துரைக்கண்ணன் – ஜீவா இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.     சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக்கென்று தனிவழி வகுத்துக் கொண்டவர். இதழாசிரியராக இருந்ததால் பல்வேறு பகுதிகளை எழுதும்போது வெவ்வேறு புனைப் பெயர்களை அமைத்துக்கொள்ள நேர்ந்தது. தான் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி,Read More →

வ.ராமசாமி (வ.ரா) கலைமாமணி விக்கிரமன்   19ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய மறுமலர்ச்சி  இயக்கம் தோன்றியது. வ.உ.சி., பாரதி போன்றவர்கள் தோன்றி, விடுதலை வேள்வி ஓங்கி உயர வழி செய்தனர்.     வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா, வீரவாஞ்சி, திருப்பூர் குமரன் போன்றவர்களின் ஆவேசமிக்க பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு தம் வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட இளைஞர்கள் பலர். அவர்களுள் "வ.இரா" என்ற ஈரெழுத்துகளால் பெருமையுடன் புகழப்படும் வ.இராமசாமி அய்யங்காரும்Read More →

தேசியக்கவி முகவை முருகனார் இலா.சு.அரங்கராஜன்   முகவைக் கண்ண முருகனார் (1890 – 1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910 – 1924 காலகட்டத்தில் ஒரு தேசபக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சமகாலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு ணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.   பாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு "ஸ்வதேச கீதங்கள்" என்ற தலைப்பில் 1908இல்Read More →

  "கரந்தைக் கவியரசர்" அரங்க. வேங்கடாசலம் பிள்ளை முனைவர் பா.இறையரசன்     கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும் தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர். உரைகளும் கூட அவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக, ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத்தராமல் வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம்Read More →

"பல்துறை வித்தகர்" டாக்டர் சர் ஆர்.கே.சண்முகனார் முனைவர் இராமஸ்வாமி சுந்தர்ராஜ்   உலகப் பொருளாதார நிபுணர், இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்றவாதி, ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர், சிறந்த பேச்சாளர், தமிழ் இசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டவர். இவ்வாறு பல்துறை திறன் பெற்றவராகத் திகழ்ந்தவர், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்.     கோவை நகரத்தின் செல்வமிக்கRead More →

"பன்முகப் பேராசிரியர்" அ.சீ.ரா. கே.எஸ்.இராதாகிருஷ்ணன்     மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து "சான்றோர் வாக்கு" எனும் நிகழ்ச்சியில், 1960களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும். இந்தக் குரலின் உரையில் தனித்தன்மை இருக்கும். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்தான் பேராசிரியர் அ.சீநிவாசராகவன்.     தஞ்சை மாவட்டம் கண்டியூரில் 1905ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்தார். இவரதுRead More →

"காந்தி காவியம்" படைத்த டி.கே.இராமாநுஜக் கவிராயர் மணிவாசகப்பிரியா   20ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி என்ற புண்ணிய பூமி தந்த பெரும் புலவர்களுள் இராமாநுஜக் கவிராயரும் ஒருவர். எளிமையின் பிறப்பிடமாய், புலமைக்கோர் கலங்கரை விளக்காய், கருவிலே "திரு" வாய்க்கப் பெற்றவராய்த் திகழ்ந்தவர் இராமாநுஜக் கவிராயர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கிய இவர், 1905ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, கள்ளபிரான் – அரசாள்வார் அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.  Read More →

ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா இரா. செழியன்   தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் தொடங்கியது.     மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி – மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின்Read More →

"இலக்கணக் கடல்" தி.வே.கோபாலையர் செந்தலை ந.கவுதமன்     பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை – தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்.   தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு "மாந்தக்கணினி"யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர்.   ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின்Read More →