Tuesday, September 09, 2014 Posted by Dr.Subashini
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவு வெளியீடு செய்தேன்.இன்று மேலும் ஒரு விழியம் வெளியீடு காண்கின்றது. கேரித்தீவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு மக்கள் வாழ்வியல், இந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான Sime Darby, கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றைப் பதிந்துள்ள விழியம் இது.
தமிழிலும் சாலை பெயர் உள்ள மலேசிய தீவு இது என்பது கூடுதல் விஷயம்,
இன்றும் தமிழர்களே இத்தீவின் அதிகப் பெரும்பாண்மையினராக இருக்கின்றனர் என்பதுவும் ஒரு கூடுதல் செய்தி. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.
பசுமை நிறைந்த இக்கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். வாருங்கள்.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot. de/2014/09/20.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/ watch?v=QXEoQcxzpMY&feature= youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 12 நிமிடங்கள் கொண்டது.
புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!
இப்பதிவினைk கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]