ரமண மகரிஷி

 

ரமண பகவான்

 

[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான்,  ரமணமகரி”களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]

{எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், பதிப்பாளர் சி.டி.என்.வெங்கட்ராமன், நிர்வாகி,-தலைவர் , ரமணாச்ரமம்திருவண்ணாமலை 1963}

 


இந்த நூலை முழுவதுமாக தட்டச்சு செய்து வழங்கியவர் ஓம். சுப்ரமணியம் அவர்கள்.  இப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நிழற்படங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிப்பிற்காக தொகுத்து வழங்கியவர் திரு.ஹரி கிருஷ்ணன் அவர்கள்.


 

பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.

அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.

பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.

 

குறிப்பிடத் தக்க நிகழ்வு.

பதினாறு வயது வரை இப்படிப் படிப்பில் கழிந்தது. 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவரது வாழ்வில் ஓர் முக்கியசம்பவம் நிகழ்ந்தது. ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார்.”எங்கிருந்து வருகிறீர்?” என்று  வேங்கடராமன் நலம்   விசாரித்தார்.”அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று வந்தது பதில். அது அவரைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த ‘அருணாசலம்’ என்னும் ஏதோ ஒன்று,பூமியிலுள்ள ஓர் தலம், மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார். ஆனால் அவர் அதைப் பற்றி அதிகம் ஒன்றும் நினைக்கவில்லை. இதன் பிறகு பெரிய புராணம் என்னும் நூல் கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடையதிவ்ய சரித்திரங்கள் அவரது சிந்தையைக் கவர்ந்தன. ஆயினும் இந்த அனுபவங்கள்கூட மனதில் ஆழப் பதியவில்லை.

 

கடைசியாக 1896-ஆம் ஆண்டில் தான் திடீரெனஒரு மாறுதல் ஏற்பட்டது.

ஆத்ம சாக்ஷாத்காரம்.

ஒருநாள் வேங்கடராமன் தனதுசிறிய தந்தை வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று ஏதோ ஒருவித பயம் உள்ளத்தில் எழுந்தது. தான் மரணத் தருவாயில் இருப்பதாகச் சிறுவருக்குத் தோன்றியது. ஆனால் பெரியவர்கள் எவரிடத்திலும் இதை அவர் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளத் துணிந்தார். பிற்காலத்தில் இதை இவர்விவரிக்கும் போது , மகர்”¢களே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. ‘சரி, சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால்என்ன? எது சாகிறது? இந்த உடல் தானே செத்துப்போகிறது?’ என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்.”

” பிணம் போல விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன்.’சரி; இந்த உடம்பு செத்துவிட்டது’ என்று உள்ளுக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள். இது சாம்பராய்ப் போகும்.ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் ‘நானும்’ இறந்து விட்டேனா? இந்த உடல் தான் நானா? இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக்கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்குமப்பாற் கூட ‘நான்’ என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே! ஆகவே’நான்’தான் ஆத்மா–உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வSது, என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் ஒரு மனத் தோற்றம் அல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கிற்று.

 

ஆத்மானுஸந்தானம் – பாகம் 2

 

இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறிவிட்டது. மரண பயம் பறந்து போய்விட்டது. அவரது மனம் ஆத்ம தியானத்தில்ஆழ்ந்து, படிப்பைச் சிறிதும் நாடவில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை.விளையாட்டுத் தோழர்களையும்மறந்தார். விளையாடலும் சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை.சாந்தமும் வணக்கமும் நிறைந்தவரானார். உணவைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லை. நல்லதோ, கெட்டதோ கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார்.

 

கோவிலுக்குப் போவதிலே புதிய ஸ்ரத்தை ஏற்பட்டது. இதற்கு முன்னமெல்லாம், எப்போதாவது, ஸ்ரீ மீனாக்ஷ¢யம்மன் சந்நிதிக்குப் போவதென்றால் தமாஷாக, சினேகிதர்களுடன் போய்வருவது வழக்கம். ஆனால் இப்போது அப்படியில்லை! நாள்தவறாது, தனியே கோவிலை அடைந்து அம்மன், சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர் சந்நிதிகளில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு வருவார். “அறுபத்துமூவரது அன்பைப் போன்று எனது பக்தியைப் பெருக்கி நிலைக்கச் செய்ய அருள் சுரக்குமாறு ஒவ்வோர் சமையம் இறைவனை இறைஞ்சுவேன்.

 

ஆனால் அநேகமாக எதையும் அபேக்ஷ¢த்துப் பிரார்த்திப்பதில்லை. அகக் கடல் பொங்கி அருட்கடலோடு கலக்கும் இந்த ஹிருதய சங்கமத்தினால், கண்களில் நீர் துளிக்கும் அவ்வளவுதான் இன்பதுன்ப உணர்ச்சி ஒன்றும் கிடையது” என்று சுவாமி சந்நிதியில் தான் அடைந்த இன்பத்தை விளக்கியிருக்கிறார்.

 

அப்பன் அழைப்பு

 

இவ்வாறு ஆறு வாரங்கள் கடந்தன. வேங்கடராமனின் மாறுதலைக் கண்ட உறவினர்களுக்கு அது பிடிக்காமலிருந்தது ஆச்சரியமல்ல. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்ததும் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷயம் முற்றிவிட்டது.

 

அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடம்   எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. மூன்றாவது முறையாக எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. புத்தகத்தைகட்டி மூலையில் போட்டுவிட்டு, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

 

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து,” இப்படிப் பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன.  இவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அன்று மட்டும், அக்கேள்வி

சுருக்கென்று தைத்தது.

 

” ஆமாம்; வாஸ்தவம் தானே. எனக்கு இங்கு என்னவேலை?” என்று சிந்தனை எழுந்தது. அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்னே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய §க்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தைவிட்டு எழுந்து,” பள்ளியில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்”, என்று அண்ணனிடம் சொன்னார். “அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விட்டுவா “, என்று கூறினார் நாகசாமி.  “இதுவும் தெய்வ கடாக்ஷம் தான்” என்று நினைத்துக் கொண்டு வேங்கடராமன் அவ்வாறே ரூபாயை எடுத்துக்கொண்டார். பின்னர் ‘அட்லஸ்’ புத்தகம் ஒன்றை எடுத்து ரயில் மார்க்கத்தைக் குறிப்பாகப் பார்க்கவே மூன்று ரூபாய் போதும் என்று தோன்றியது. உடனே, ஒரு கடிதமெழுதி, பாக்கி ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைத்துவிட்டு புகைவண்டி நிலையத்துக்குப் புறப்பட்டார்.

 

 

கடிதத்தில் கண்டிருந்ததாவது: “நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக்காரியத்திற்கு ஒருவரும் விசனப் படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணச்செலவும் செய்ய வேனாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. இரண்டு இதோடுகூட இருக்கிறது. இப்படிக்கு………..”கடிதத்தின் வார்தைகளில் அவரது மனநிலை ஸ்பஷ்டமாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். “நான்” என்ற ஆரம்பம் சில  வரிகளுக்கப்பால், ஏதோ ஓர் அ·றிணை ‘இது’ வாக மாறி, கடைசியில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஒருவரும் இல்லாமல் மறைந்துவிட, கடிதமும் கையெழுத்தில்லாமலே முடிந்துவிடுகிறது.

 

தந்தையை நோக்கி – பாகம் 3

மதுரையைவிட்டு வெங்கடராமன் திருவண்ணாமலைக்கு மேற்கொண்ட பயணம் தனித் தன்மை வாய்ந்தது.  . மாலையில் அவரது சிற்றப்பா வீட்டினிலிருந்து புறப்பட்டார். அரை மைல் தூரம் உள்ள மதுரை ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றார்.

 

ஆனால் அன்று வண்டி அதிர்ஷ்ட வசமாக நிலையத்தினின்றும் தாமதமாகப்   புறப்பட்டது. எனவே அவர் பயணம் தடங்கலின்றி அமைந்தது.

ரயில்வே கால அட்டவணையில் மதுரையிலிருந்து திண்டிவனம் செல்வதற்கான வண்டிச் சத்தம் இரண்டு ரூபாய் பதிமூன்று அணா என்பதை அறிந்து கொண்டார். ஒரு சீட்டினை வாங்கிக் கொண்டு மீதம் மூன்று அணாவை வைத்துக் கொண்டார்.

 

விசாரித்திருந்தால் மதுரையிலிருந்து  திருவண்ணாமலைக்கு வேறுவழி இருப்புப் பாதை உள்ளது என்பதையும் அதற்கான சத்தம் ரூபாய் மூன்றுதான் என்பது தெரியவந்திருக்கும். வண்டியில் பயணம் செய்யும்போது  உடனிருந்த மௌல்வி வாயிலாக திருவண்ணாமலை செல்வதற்கு தனியே பாதை உள்ளது என்றும், அதற்கு திண்டிவனம் செல்லவேண்டியதில்லை என்றும்  முன்பாகவே விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறவேண்டும் என்றும் கூறினார்.

திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தபோது இருட்டிவிட்டது. வெங்கடராமனுக்கு பசித்தது.  அரையணாவுக்கு  மூன்று பழங்கள் வாங்கினார். ஒன்றைச் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணவு ஏற்பட்டது.  அதிகாலை மூன்றுமணியளவில் வண்டி விழுப்புரத்தை  அடைந்தது.

அங்கிருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாகத் தீர்மானித்தார். விழுப்புரம்  நகருக்குள் சென்றார். திருவண்னாமலை செல்லும் பாதையை அறிந்து கொள்ள கைகாட்டியைத் தேடினார். ஒரு கைகாடிப் பலகையில் மாம்பலப்பட்டு என்று காணப்பட்டது. மாம்பலப்பட்டு திருவண்ணாமலை செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை அவர் அறியவில்லை. அசதியும் பசியும் இருந்ததால் சற்று ஓய்வு எடுக்க நினைத்தார்.

 

ஒரு உணவு விடுதிக்குச் சென்றார்.  சாப்பாடு சமைக்க மதியம் வரை ஆயிற்று. உணவு அருந்திவிட்டு இரண்டு அணா தன் சாப்பாட்டிற்கெனத் தரலாமா என்று உரிமையாளரிடம் கேட்டார். “நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்று அவர் திரும்பக் கேட்டார்.”என்னிடம் இரண்டரை அணா” என்று வெங்க்ட்ராமன் சொன்னார். பணம் ஏதும் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் உரிமையாளர். அவர்  மாம்பலப்பட்டு  திருவண்ணாமலலை செல்லும் வழியில்தான் உள்ளது என்று விளக்கினார். வெங்கடராமன் மீளவும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து  கைவசம் உள்ள பணத்திற்கு மாம்பலப்பட்டுவரை மட்டுமே சீட்டு  வாங்கிக் கொண்டார்.

மாம்பலப்பட்டு ரயில் நிலையத்தில் இற்ங்கினார். . அங்கிருந்து கால் நடையாகவே திருவண்ணாமலை செல்லும் வழியில் நடந்தார். ப்த்து மைல்கள் நடந்தபின்   அரையாணி நல்லூர் கிராமத்திற்கு வந்தார். அங்கே சிறிய குன்றின் மீது ஒரு கோயில் தென்பட்டது. அந்தக் கோயிலை நோக்கி நடந்து நுழைவாயில் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருந்தார். நடை திறந்தபின்னர்.

 

கோயிலின் பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அற்புதமான சுகானுபவம் ஏற்பட்டது.  கோயில் முழுதும் எல்லா இடத்திலும் கண் கூசும் பிரகாசமான ஒளிவெள்ளம் தென்பட்டது. அந்த வெண்மை ஒளி வந்ததைப் போன்றே சிறிது நேரத்தில் மறைந்தது. வெங்கடராமன் ஆழ்ந்த தியான நிலையில் மூழ்கியிருந்தார்.  நேரம் போனதே தெரியாமல் அவர் மோன நிலையில் இருந்தார். நடை சாத்தும் நேரம் வந்ததும்   வெங்கடராமனை எழுப்பினார்.கோயில் அர்ச்சகர் மூன்றுகல் தொலைவில் உள்ள கிலூர் (திருக்கோவலூர் வீரட்டம்) பூஜைக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் பணியாளர்கள் புறப்பட முற்பட்டனர். வெங்கடராமனும் அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கும் அவர் சகஜ சமாதி நிலை அடைந்தார். பூஜை முடிந்தபின்னர் அவர்கள் மீளவும் அவரை உணர்வு நிலைக்கு எழுப்பினர்.

 

ஆனால் அவருக்கு எவரும் உணவு அளிக்க முன்வரவில்லை.  அர்ச்சகர்களின் போக்கைக் கண்டித்து மேளகாரர் தன் பங்கு உண்டைக்கட்டியினை ( பச்சையரிசிச் சாதம் உருண்டை அச்சில்) கொடுத்தார். தாகவிடாய் ஏற்பட்டபோது சற்று தூரத்தே உள்ள ஒரு சாஸ்த்ரி வீட்டிற்கு சென்று நீர் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.

அந்த சாஸ்த்ரிகள் வீட்டினை நெருங்கும் போது வெங்கடராமன் மயக்கமுற்று வீழ்ந்தார். அக்கம் பக்கத்தினர் நீர் தெளித்து  அவரை ஆசுவாசப் படுத்தினர். அந்தகூட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

மறுநாள் காலயில் அவர் எழுந்தார். அன்று கோகுலாஷ்டமி தினம். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி,1896. அருணாசலத்தை நோக்கி மீண்டும் நடைபயில ஆரம்பித்தார். அசதியும் பசிப்பிணியும் வாட்டியது. அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவருடைய வீடு. வெளியிலிருந்தே பசிக்கின்றது என்று கேட்டார். பாகவதர் அவரை உள்ளே அழைத்தார். அந்த இல்லத்து மாதரசி அவருக்கு உணவு கொடுத்து கண்ணனே அன்று அவர்கள் வீட்டிற்கு வந்து உண்டதாக நினைத்து  இளைய சாதுவை ஆராதித்தார்.

தன் இரு கடுக்கன்களையும் (காதணி) அடகாக பெறுக்கொண்டு தன் யாத்திரைக்கென ரூபாய் நான்கு தரும்படி கேட்டார். சோதித்துப் பார்த்தார்  பாகவதர் இருபது ரூபாய் பெறுனமானமுள்ள  காதணிகளுக்கு  கேட்டபடி  ரூபாய் நான்கு கொடுத்தார். ஒரு கடுதாசியில் முகவரி  எழுதிக்கொடுத்து எப்போது விரும்பினாலும் வந்து கடுக்கன்களை மீட்டிச் செல்லலாம் என்று

கூறினார்.

வெங்கடராமன் மதியச் சாப்பாட்டினை அவர்கள் வீட்டடிலேயே முடித்துவிட்டுப் புறப்பட்டார். அவருடைய மனைவியார் கோகுலாஷ்டமி இனிப்புத் தின்பண்டங்கள் கட்டிக் கொடுத்தார்.ரயில் நிலையம் சென்று இரவு வண்டியில்லாததால் நிலையத்திலேயே கழித்தார்.

1896 செப்டெம்பர் மாதம் முதல் தேதி திருவண்ணாமலை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தார். பயணம் சிறியதே. சற்று நேரத்தில்  திருவண்ணாமல் நிலையம் வந்தது.  ரயிலை விட்டுஇறங்கியவுடன் அருணாச்லேச்வரர் கோயிலை நோக்கி விரைந்தார். கோயில் அவருடைய வருகைக்கென காத்துத் திறந்தே இருந்தது போலும். எவருமே அர்ச்சகர்கள் உட்பட் மக்கள் நடமாட்டமே இல்லை. வெங்கடராமன் வாயிலில் நுழைந்து தந்தை அருணாசலேச்வரர் முன் நின்றார். சொல்லொணா பேரின்ப உணர்ச்சி பெற்றார். காவியப் பயணம் நிறைவுற்றது..

வெங்கடராமன் என்னும் கப்பல் அருணாசலேச்வரர் என்னும் துறைமுகத்தை பத்திரமாக  அடைந்தது.

பால யோகி – பாகம் 4

 

வெளியே வந்ததும், ஊரின் கீழ்க்கோடியிலுள்ள ஐயன் குளத்தருகே சென்று  கீமூரில் கிடைத்த ப?ணங்கள் பொட்டலதை எடுத்து.”இந்தக் கட்டைக்குத் தின்பண்டங்கள் எதற்கு?”  என்று கூறிக்கொண்டே எறிந்து விட்டு நடந்தார். “முடி எடுக்கவேண்டுமா?” என்று வழியில் யாரோ  ஒருவர் கேட்கவே, இதுவும் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.

 

அழகிய குடுமி அன்றோடு  ஒழிந்தது. அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து ஒரு  பீனத்திற்கான துண்டைமட்டும் கிழித்துக்  கொண்டு, மற்றதையெல்லாம் சுருட்டி, பூணூலையும் மிச்சமிருந்த ரூபாயையும் சேர்த்துத் தூர எறிந்தார்.  Sநானம் செய்வது கூட அவசியம் என்று  தோன்றவில்லை. நேரே கோவிலுக்குள் திரும்பிப் போகும்  முன்னமேயே, திடிரென்று கனத்த மழை பெய்வித்து, அருணாசலேஸ்வரர் அவரை ஸ்நானம் செய்வித்தார்.  நேரே ஆயிரக்கால் மண்டபத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்தார்.  ஆனால் வெகு நாள்வரை அங்கிருக்கமுடியவில்லை. பால சந்நியாசியின்  இளமையும் மௌன விரதமும் பலருக்கும் ஆச்சர்யத்தை விளைவித்தன. அவர் யார், எந்த ஊர், ஏன்  இக்கோலம் முதலிய விவரங்களை அறிய ஆவல் கொண்டனர். இது தவிர, வி”மக்கார சிறுவர்களின்  தொந்தரவும் அதிகமாயிற்று. ஆகவே, அவர் தனிமையான ஓர் இடத்தை நாடினார். கோவிலிலே  பாதாளலிங்கம் என்ற ஓர் இருட்டுக் குகையைக் கண்டார்.

 

பட்டப் பகலில் கூட அதற்குள் செல்ல  எல்லோருக்கும் பயம். ஆனால் பால சந்நியாசி பாதாள லிங்கத்தையே தெரிந்தெடுத்துத் தனிமையான  தவயோகத்தில் ஆழ்ந்தார்.  அங்கே எத்தனை தினங்கள் தவங்கிடந்தனரோ ஒருவருக்கும் தெரியாது. பிறகு ஒரு  நாள் பால சந்நியாசி அங்கிருப்பது எப்படியோ வெளியாயிற்று. அந்த யோக நிலைக்காட்சி கண்டோரை  வியக்கச் செய்தது. பூர்வம், வான்மீக முனிவர் தம்மைச் சுற்றிலும் கரையான் புற்றுக்கள் மூடிக்  கொண்டதையும் உணராது வருடக் கணக்காகத் தவம் செய்ததாகக் கூறுவர். பால யோகியின் தவ  நிலையும் அதை ஒத்திருந்தது. பாதாள லிங்கத்தின் இருட்டிலேயே குடியிருந்த ஈ, எறும்பு,  பூச்சிகளுக்கு யோக நிலையில் இருந்தவர் உடம்பு சரியான இரையாகக் கிடைத்தது.

 

உடம்பின் கீழ்ப்  பாகம் பூச்சி அரித்து, ரத்தமும் சீழும் சேர்ந்து உறைந்து கட்டிக் கிடந்தது. ஆனால் அந்த பால  சந்நியாசிக்கு இதனால் எவ்விதத் துன்பமும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த நி?டையில்  அசையாது வீற்றிருந்தார்.  இந்தக் கா?¢யைக் கண்டோர் அனைவரும் பிரமித்துப் போயினர். பால  சந்நியாசியின் தவ வலிமையை நிதரிசனமாக உணர்ந்த சாதுக்கள் அதுமுதல் அவரை மிகவும்  மரியாதையாகக் கவனித்து வருவாராயினர். ஆயினும் பால யோகி அடிக்கடி இடம் மாறிக்கொண்டே  இருந்தார். , சுப்பிரமணியர் கோவிலருகே சில காலம் இருந்தார். அதன் பக்கத்திலிருந்த  பூந்தோட்டத்தில் சில நாட்கள்; இதன் பின் வாகன  மண்டபத்தில் சில நாட்கள்; கடைசியாக மங்கை  பிள்ளயார் கோவிலை அடைந்தார்.  பால சந்நியாசியின் மகிமையை உணர்ந்த உத்தண்டி நயினார் என்னும் சாது,  இச்சமயத்தில் சுவாமிகளையடுத்து உபதேசம் பெறவேண்டி அவருக்குத் தொண்டுசெய்யத்  தொடங்கினார். அப்போதும் கூட வி”மிகளின் தொந்தரவு நீங்கவில்லை. நயினார் இல்லாத  சமய்ங்களில் துஷ்டப் பிள்ளைகள் பல இடையூறுகள் செய்வதுண்டு. இதைக் கூட அவர்  பொருடள்படுத்துவதில்லை.

 

சுவாமிகளின் பெருமை நாளுக்கு நாள் எங்கும் பரவவே, பக்தர்கள்  தரிசனத்துக்கு வந்து போவாராயினர். இதனால் துஷ்டர்களின் கொடுமைகள் நின்றன. பக்தர்கள்  கூட்டம் பெருகியதால் தியானத்துக்கு இடைஞ்சல் ஏற்படவே சுவாமிகள் அதைவிட்டுப் புறப்பட்டுத்   திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தார். அங்கே ஒன்றரை ஆண்டு காலம்  சமாதி நிஷ்டையில் இருந்தார்.  இங்கே தான் முதன் முதலாக சுவாமிகளின் பூர்வோத்தரம் வெளியாயிற்று. கூட  இருந்த பக்தர் ஒருவர் ஒரு நாள் சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்.  ஆனால், ஆராதனைக்குச் சற்று முன், கரியால் எழுதப் பட்டிருந்த சில வார்தைகள் சுவற்றில்  காணப்பட்டன. “இதற்குத் தொண்டு இதுவே”  என்பது அவ்வாக்கியம். “இது” என்பது பக்தர்கள்  கொண்டுவரும் உணவைக் குறிப்பதாகும். இதைக் கண்டபின் ஆராதனை நின்றுவிட்டது என்று  சொல்லத் தேவையில்லை.  சுவாமிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் மூலம் தான் வெளியாயிற்று.  இதன் பின்னர் அவ்வூர் தாலுக்கா அலுவலக சிரஸ்தாராக இருந்த ஒரு பக்தர் விடாப் பிடியாக  சுவாமிகளின் பூர்வோத்தரத்தை அறிய முயன்றார். அதைத் தெரிவித்தால் ஒழிய, தாம் அவ்விடதைவிட்டு  நகருவதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்.

 

முடிவில் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு எழுதிக்  காட்டினார். “வேங்கடராமன்,திருச்சுழி” பக்தருக்கு இவ்வூர்ப் பெயர் புரியவில்லை. உடனே உவாமி பக்கத்திலிருந்த பெரிய  புராணப் புத்தகத்தை எடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்றதிருச்சுழி என்னும் திவ்ய  தலத்தின் பெயரைச்சுட்டிக் காட்டினார்.

ஸ்ரீரமண மகரிஷி–5

 

தநயன் நிலையை தாய் அறிவதுசுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது விரைவில் நாடெங்கிலும் பரவி மதுரைக்கும் எட்டிவிட்டது.ஆராதனை செய்ய முற்பட்ட பக்தரான திருவண்ணாமலைத் தம்பிரான் மதுரையிலுள்ள ஒரு மடத்தில் சுவாமிகளின் மகிமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்.இதைக்கேட்ட பையன் ஒருவன் உறவினர்களிடம் ஓடிப் போய்,” நமது வேங்கடராமன், திருவண்ணாமலையில், ஒரு சாமியாராய் இருக்கிறானாம்” என்று கூறினான்.  சுவாமிகளின் சிறிய தந்தையான நெல்லையப்பையர் உடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அப்போது ஒரு மாந்தோப்பில் சுவாமிகளின் வாசம்.

 

அந்நியர்களை அதிகமாக அங்கே அனுமதிப்பதில்லை. நெல்லையப்பரும் ஒரு சீட்டைக் கொடுத்தனுப்பினார். உள்ளே சென்றதும் அவர் கண்ட காட்சி அவர் மனத்தை உருக்கியது. பாலிய மைந்தனது மேனி அழுக்கடைந்து கிடந்தது. தலையிலே புதர் போல் மயிர்; கையில் வளர்ந்த நகங்கள்.  ஆனாலும் நெல்லையப்பர் மனத்தைத் தேற்றிகொண்டார். தங்கள் குடும்பத்தான் ஒருவன் இவ்வளவு உயர்ந்த ஞான நிலையை அடைந்ததைப் பற்றி அவருக்குத் திருப்திதான். ஆனாலும் ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் பக்கத்தில் இருக்குமாறு அவர் சுவாமிகளை வேண்டிக்கொண்டார்; சுவாமிகளுடைய சௌகரியங்களைக் குறைவில்லாது கவனிக்க அது ஏதுவாகும் என்றும் கூறினார்.

 

ஆனால் சுவாமிகளிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவரது அருட் பார்வையில் கூட எவ்வித மாறுதலும் தோன்றவில்லை. ஆளையாவது நேரில் பார்த்தோமே என்ற திருப்தி அவருக்கு. பையன் இனிமேல் ஊருக்குத் திரும்புவது கஷ்டம் என்று சுவாமியின் தாயாரான அழகம்மையிடம் அறிவித்தார்.

 

பெற்ற தாயின் மனம் அவ்வளவு எளிதில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா?  தாயின் வருகை  மூத்த பிள்ளை நாகசாமிக்கு லீவு கிடைத்தவுடன் தாயும் அண்ணனும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே பவழக் குன்றில் உள்ள ஒரு பாறையின் மீது சுவாமி படுத்திருந்தார். பார்வைக்கு எவ்வளவோ மாறுதல் அடைந்திருந்த போதிலும் தன் அருமைக் குழந்தையென்பது அன்னைக்கு உடனே  தெரிந்துவிட்டது.  நெல்லையப்பருக்குக் கிடைத்த பதில் தான் அன்னைஅழகம்மைக்கும் கிடைத்தது. நாள் தவறாமல் அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப் பிடியாக வேண்டினர்.

 

அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது.: அழுதார்;அரற்றினார்;வேண்டினார்; இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் நிச்சலமான ஒரு மௌனம்!

 

 

பக்கத்திலுள்ளவர்களுக்கு இது மிகவும் பரிதாபக் காட்சியாக இருந்தது. அன்னையின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது.பெறெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு கடிதத்தில் பின்வறுமாறு எழுதிக் கொடுத்தார்:  “அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று.”  இதற்கு மேல் தாய் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. நாகசாமியின் லீவு முடிந்ததும் இருவரும் மனவருத்தத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினர்.  இதன்பின் சுவாமிகள் மலைமேல் பலகுகைகளில் மாறி மாறித் தங்கிவந்தார். விருபாக்‌ஷிக் குகையிலிருந்தபோது அந்த மடத்துத் தலைவர் சுவாமியைப் பார்க்க வருபவர்களுக்கு டிக்கட் வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவே அதையும் விட்டுக் கிளம்பிப் பக்கதிலிருந்த ஒருவெளியிடத்தில் தங்கினார். அப்போதும் டிக்கட் நின்றபாடில்லை.

 

கடைசியில் அந்தப் பிரதேசத்தையே நீத்து தொலைவில் உள்ள மற்றோர் குகையை நாடிச் சென்றார். இதற்குள் டிக்கட்டு வைத்த பக்தர் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி மன்றாடவே சுவாமியும் கருணை கூர்ந்து திரும்பினார்.  ஆனால் கோடை காலத்தில் விருபா?க்‌ஷிகுகையில் வெயிலின் கொடுமை வெகு உக்கிரமாகத் தாக்கிற்று. ஆள் இருக்க முடியாதாபடி உருக்கிற்று. ஆகவே அதைவிட்டு நீங்கி முலைப் பால் திர்த்தத்திற்கு அருகேயுள்ள மாமரக்குகைக்கு மாறவேண்டியதாயிற்று.  விருபாக்‌ஷி  குகையிலிருந்த போது உள்ளம் மலர்ந்துதெய்வீக பக்தி ததும்பும்’ அருணசல அக்‌ஷரமாலை’ என்னும் திவ்விய பாடலை அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிக்‌ஷைக்காக ஊர்க்குள் செல்லும் போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வருவாராயினர்.

ஸ்ரீரமண மகரிஷி 6

இக்காலத்தில்தான் ஆங்கிலம் படித்த சிலரும் சுவாமிகளின் மகிமை  தெரிந்து அடிக்கடி தரிசனத்துக்கு வருவாராயினர். இவர்களுள் சிலர் சுவாமிகளைப்  பற்றியும் அவரது உபதேசங்களைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்திருக்கின்றனர்.

 

சேயர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில்  பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம். “விசார சங்கிரகம்” என்னும் நூல் இந்தக்  குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும்.  , சிவப் பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின்  உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஆத்ம  ஞானோபதேசம் சிறந்து விளங்கியதென்பதை அதில் உள்ள கீழ்கண்ட பாகங்கள்  நிதரிசனமாகக் காட்டுகின்றன:

 

“மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான  அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, ‘நான் யார்’  என்னும் விசாரமே முக்கிய சாதனம்.”  “நான் யார் ? சப்த தாதுக்களாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த,  ஸ்பரிச, ரூப, ர., கந்தம் என்னும் பஞ்ச வி”யங்களையும் தனித்தனியே அறிகின்ற  ஞானேந்திரியங்களும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்னம், ஆனந்தித்தல்  என்னும் ஐந்தொழில்களையும் செய்கின்ற கன்மேந்திரியங்களும் நானன்று. சுவாசாதி  ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. சர்வ  வி”யங்களும் சர்வ தொழில்களும் அற்று, வி”ய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி  யிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று  நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.

 

அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.”  “நானார் என்னும் விசாரணையிலேயே மனம் அடங்கும்; நானார்  என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில்  தானும் அழியும். (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்.” இதன் பின் மகரிஷிகளின் அருளுக்குப் பாத்திர மானவர்களுள்  முக்கியமானவர் , காவ்யகண்ட கணபதி சாஸ்த்ரிகள் ஆவர். இவரது வரவு பல  விதங்களில் விசேடம் வாய்ந்தது.  கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று பெயர் படைத்தவர்; பெரிய  கவி; வேதாந்தி. இவர் பன்னீரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றியும் கருதிய பலன்  ஒன்றும் கிட்டாமல் மனம் வருந்தி நின்றார். 1907-ஆம் ஆண்டு ஒருநாள்  திருவண்ணாமலைச் சுற்று வழியில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் இருந்தார்.  திடீரென்று, ” பகவான் அழைக்கிறார்” என்று அசரீரி ஒன்று அழைப்பது போல்  தோன்றியது.

 

உடனே இருக்கையை விட்டு எழுந்து கோவிலை நோக்கி நடந்தார்.  வழியிலே  அருணாசலேசுவரர் ஊர்வலம் வருகிறார். சாஷ்டாங்கமாக அஞ்சலி செய்தார்.  ஆனால் அசரீரியின் அழைப்புக்கு அர்த்தம் புலப்படவில்லை.

 

சஞ்சலமடைந்த மனத்துடன் இருந்த அவருக்கு மறுநாள்  மத்தியானம் மலைமீதுள்ள சுவாமிகளின் ஞாபகம் வந்தது. உக்கிரமான வெயிலையும்  கவனியாமல் உடனே மலைமீது ஏறிச் சென்றர்.  அன்று அதிர்ஷ்ட வசமாக விருபாக்‌ஷிக் குகையின் தாழ்வாரத்தில்  சுவாமிகள் தனியே அமர்ந்திருந்தார். கணபதி முனிவர் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து  தம் இரு கரங்களாலும் சுவாமிகளின் அடிகளைப் பற்றிக்கொண்டு சரண் புகுந்தார்.  ” கற்க வேண்டிய யாவையும் கற்றேன்; வேதாந்த சாஸ்த்திரங்கள்  யாவையும் பயின்றேன்; மனங்கொண்டமட்டும் மந்திரங்களைச் செபித்தாகி  விட்டது.ஆனாலும் தபஸ் என்பதின் தாத்பர்யம் தெரியவில்லை ஐயனே! உனது  அடியினைச் சரண் அடைந்தேன்.” என்று இறைஞ்சினார்.

 

சுவாமிகள் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை  கணபதி முனிவரைக் கருணையுடன் நிச்சலமாகக் கடாக்‌ஷித்து இங்ஙனம் திருவாய்  மலர்ந்து அருளினார்:  “நான், நான்” என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக்  கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ் ஒரு மந்திரத்தை செபம்  பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால்  மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ்.  இவ்வருள் வாக்கு, இத்திவ்ய உபதேச மொழிகள் கணபதி  முனிவரின் ஐயங்கள் யாவையும் தீர்த்துவிட்டன. குகையிலேயே அன்று இரவுவரை  தங்கினார். பக்கத்தில் உள்ளவரிடம், ரமண மகரிஷிகள் என்பதே சுவாமிக்குப்  பொருத்தமான  பெயர் என்று வெளியிட்டார். “மறுவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல்  மகரிஷி என்றே வணங்கிப் பணிக” என்று பாடி, “இனிமேல் பகவான் என்றே பக்தர்  யாவரும் மகரிஷிகளை அழைக்க வேண்டும்” என்று கூறினார். அன்று முதல்  இப்பெயர்கள் நிலைத்துவிட்டன.  மகரிஷிகளைச் சேர்வதற்கு முன்னமேயே காவ்யகண்டர்  பிரசித்திபெற்றவர். அவரைப் பின்பற்றும் பக்தர்கள் பலர் இருந்தனர்.

 

ஆகவே காவ்ய  கண்டரின் வருகைக்குப் பின் மகரிஷிகளின் தரிசனத்துக்கு வருபவர்களின் தொகை  அதிகரித்தது. இப்போது பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன. மகரிஷிகள்  அருளிய விடைகளின் முக்கியமான பாகங்களைத் தொகுத்துச் சுலோகங்களாக  அமைத்து “, ரமண கீதை” என்னும் நூலாக வெளியிட்டார், காவ்ய கண்டர்.  கணபதி முனிவர் சுவாமிகளிடம் நெருங்கிய அன்பு பூண்டவர்.  மகரிஷிகளிடம் அவர் கண்ட அற்புத சக்திகள் பல.  1906-ஆம் ஆண்டு காவ்யகண்டர் திருவொற்றியூரில் ஒரு  பிள்ளையார் கோயிலில் தவம் செய்துகொண்டிருந்தர். திடீரென்று ஓர் இடத்தில்  சந்தேகம் தோன்றியது. ” மகரிஷிகள் அருகிருந்தல் இந்தச் சந்தேகத்தைக் கேட்டுத்  தெரிந்து கொள்ளலாமே!” என்று மனதில் நினைத்தார். அக்கணமே மகரிஷிகள் உள்ளே  நுழைவதுபோல் தோன்றியது. சாஷ்டாங்கமாக வீழ்ந்து அடிபணிந்தார்.

 

மகரிஷி தமது  திருக்கரத்தால் அவர் தலையைத் தொட்டு அழுத்தினார். மின்சாரம் போன்றதோர் புதிய  சக்தி தன்னுள் பாய்வதுபோன்று முனிவர் உணர்ந்தார்.மகரிஷிகளின் திருக்கரத்தால்  ஹஸ்த தீட்சை பெற்றுவிட்டதை உணர்ந்த முனிவர் மகிழ்ந்தார்.  இதைப் பற்றிப் பின் மகரிஷிகள்கூறிய விவரமும் இதை ஒத்து  இருக்கிறது. பகவான் அருளியதாவது:  “ஒரு நாள் படுத்துக்கொண்டிருந்தது; சமாதியில் இல்லை.

 

திடீரென்று சரீரம் ஆகாயத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. சுற்றும் உள்ள  பொருட்கள் யாவும் மறைந்தன.எங்கும் ஒரே வெண்§f¡தி. பிறகு சரீரம் ஓர் இடத்தில்  இறங்கியதும் பொருள்கள் புலப்பட்டன.திருவொற்றியூரில் இருப்பதாக ஓர் எண்ணம்  உதித்தது. ஒரு பெரிய ரஸ்தாவைப் பின்பற்றிச் செல்லுகையில், கொஞ்ச தூரம் தள்ளி ஒரு  கணபதி கோயில் காணப்பட்டதும் உள்ளே சென்றது. அங்கே பேசியது உண்டு; என்ன  பேசியது; என்ன செய்தது என்பது நினைப்பில் இல்லை. திடீரென்று விழித்த போது  விரூபாக்‌ஷிகுகையில் படுத்திருந்தது. இப்படித் தான் சித்தர்களும் உலாவுவார்கள் என்று  தெரிந்தது.”  இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மகரிஷிகள்  திருவொற்றியூருக்குச் சென்றதே இல்லை. ஆனால் மகரிஷிகள் சொன்ன  அடையாளங்கள் யாவும் காவ்யகண்டர் அச்சமயத்தில் வசித்துவந்த கோயிலுக்குப்  பொருத்தமாகவே இருந்தன.

 

காவ்யகண்டர் மகா மேதாவி; பண்டித சிரோமணி; அறிவிற் சிறந்த  கவி. பல மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற புலவர்.ஆனாலும் மகரிஷிகளிடம் உள்ள  அபார பக்தியினால் தனது சிறப்பனைத்துக்கும் காரணம் தமது குருதேவரான  மகரிஷியின் அருளே என்று கூறுவார். அற்புதமான யோக அநுபவங்கள் பல இவருக்கு  நேர்ந்தன. 1922-ஆம் ஆண்டில் மாமரக் குகையிலிருந்து யோகம் செய்த போது கணபதி  முனிவருக்கு ஒரு நாள் கபாலம் வெடித்து தழும்பும் ஏற்பட்டது.

 

அந்தோ! உன்னத குறிக்கொள்களைக் கொண்ட இப்பெரியார்,  சிறந்த தபஸ்வி, சீரிய அறிஞர், வெகுநாள்வாழ்ந்திருக்க இந்நாடு பாக்கியம்  பெறிருக்கவில்லை. 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று  கல்கத்தாவை அடுத்த கரக்பூருக்கு அருகில், நிம்புரா என்னும் இடத்தில் உள்ள  ஆசிரமத்தில் இவர் பூத உடலை நீத்தார்.

 

 

இதர பக்தர்கள் – பாகம் 7

 

அக்காலத்து பக்தர்களுள் திருவண்ணாமலையில் சூபர்வைசராக இருந்த திரு இராமசாமி ஐயர் என்பவரும் ஒருவர். பகவானது சந்நிதானத்துக்கு வந்த இரண்டாம் முறையே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. வணங்கி  வீழ்ந்து வேண்டுவாராயினர், “சுவாமி ஏசுநாதர் போன்ற மகான்கள் பாவிகளைக் கரையேற்றவே இவ்வுலகில் தோன்றினர். எளியேனுக்குக் கடைத்தேற வழியில்லையா? உய்வில்லையா?”

“ஆமாம் உய்வுண்டு, வழி உண்டு” என்றுஆங்கிலத்திலேயே விடை கிடைத்தது.

மற்றோர் ரசமான சம்பவத்தைப் பற்றி, ஐயர் தமது ‘டைரி’யில் பின் வறுமாறு குறிப்பிடுகிறார்: ” வெகு நாட்களாக நான் வயிற்று வலிக்காரன். உணவு சீரணம் ஆவதில்லை; தூக்கமும் இல்லை. இதைப் பற்றியே சதா கவலை. ஒரு நாள் சுவாமிகள் விசாரிக்கவே என் உடம்பைப் பற்றிச் சொன்னேன். அச்சமயம் தலையெல்லாம் சூட்டால் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர் விசாரித்த ஒரு நிமிடத்துக்குள் கொதிப்பெல்லாம் பறந்துவிட்டது. மூளை குளிர்ச்சி அடைந்தது.”

“அன்று சௌமிய ஆண்டு ஆடி 18-ஆம் தேதி. அன்னமும் தோசையும் கொண்டு ஒரு பெண்மணி பகவானுக்கு
விருந்தளித்தாள். எனக்குக் கஞ்சி தான் அப்போது ஆகாரம்; வேறு எதுவும் சீரணம் ஆவதில்லை. எல்லோரும் என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். ‘என்னால் சீரணிக்க முடியாது’ என்று மறுத்தேன். ஆனால் சுவாமியும் வற்புறுத்தவே நன்றாகச் சாப்பிட்டேன். என்ன ஆச்சர்யம்! அன்றிரவுதான் அயர்ந்த, சுகமான நித்திரை.

 

சுவாமிகளிடம் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. முதலில் நான் சுவாமிகளிடம் போவதை விரும்பாத என் குடும்பத்தினர் என் பிணி நீங்கியதைக் கண்டதும் பகவான் சந்நிதானத்துக்கே தினந்தோறும் அன்னம் அனுப்பஆரம்பித்தனர். ‘அடடா!’ எத்தனையோ மருந்துகளுக்கு எவ்வளவோ ரூபாய் செலவழித்தோமே! முன்னமேயே இவரது பெருமையை  உணராமல் போனோமே’ என்று தோன்றியது.

எச்சம்மாள் என்று ரமணாசிரமத்தில் அழைக்கப்பட்டுவந்த ஓர் அம்மணி இருந்தாள். அவருடைய அநுபவங்கள் இதைவிட ஆச்சரியமானவை. மிகவும் பரிதாபமான நிலையில் இவ்வம்மை ஆசீரமத்தை அடைந்தார். அருமைக் கணவனைப் பறிகொடுத்த துயரம் ஆறும் முன்னரே புதல்வர் இருவரும் ஆவி துறந்தனர். எச்சம்மாளின் துயரம் சொல்லும் தரமன்று.

 

வீட்டில் வசிக்க மனம் சகிக்கவில்லை. வீட்டைத் துறந்து, தீர்த்த யாத்திரையாகக் கோகர்ணத்துக்குச் சென்றார். வடநாட்டிலேயே பல சாதுக்களை அடுத்து சேவை செய்தார். ஆனால் மனத் துயரம் சிறிதும் ஆறவில்லை.

இதன் பின் சுவாமிகளைக் கேள்வியுற்று திருவண்ணாமலையை அடைந்தார். மலை மீதிருந்த சுவாமிகளைத்
தரிசித்தார். அவர் அசையாது வீற்றிருந்தார். எச்சம்மாளும் நின்ற இடத்திலேயே ஒருமணி நேரம் நின்றிருந்தார்.  வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இம் மௌன தரிசனம் அவரது எண்ணங்களில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றார். பொழுது போய்க் கொண்டிருந்தது.

 

மாலையும் வந்தது. பிறகு சற்று சமாளித்துக் கொண்டு பிரியாமல் பிரிந்து சென்றார். சுவாமிகளின் அருளால் தம் துயர் எல்லாம் மறைந்துவிட்டதாகக் கூடவந்த தோழியிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்.

அன்று முதல் எச்சம்மாள் திருவண்ணாமலையிலேயே வசித்து வந்தார். தாம் இருந்தவரைக்கும் முப்பது வருடங்களுக்கு மேலாக, முதலில் சுவாமிகளுக்கு அன்னம் படைக்காமல் இவ்வம்மை சாப்பிட்டதில்லை. இவ்வம்மையின்  செல்வமெல்லாம் கைங்கரியத்திலேயே செலவாயிற்று. சுவாமிகள் மலைமேல் வசித்துவந்த காலத்தில் எச்சம்மாளின் வீடு ரமண பக்தர்கள் தங்கும் ஒரு சத்திரமாகவே விளங்கியது. ஞான  ராக்கியத்திலே எச்சம்மாள் மிகுந்த முன்னேற்றம் அடைந்தவர். அனேகமாக எப்போதும் தியானத்திலேயே ஆழ்ந்திருப்பார்.

முதல் மேல் நாட்டு பக்தர் – பாகம் 8

ஐரோப்பியர்களில்முதல் முதலாக சுவாமிகளை நாடி வந்தவர்  எப்.எச்.கம்ப்ரீஸ்(Hambris) என்பவரே. 1911-ஆம் ஆண்டு முதல் போலீசு சூப்ரெண்டாக  வேலை பார்த்த போதிலும் மிகுந்த மதப்பற்றுள்ளவர். பூர்வப் பிறவியில் தான் ஒரு சித்தர்  குழுவில் இருந்ததாக அவருக்கு ஒரு நம்பிக்கை. திரு கம்ப்ரீசு மும்முறை சுவாமிகளைச்  சந்தித்து,  நடந்த உரையாடல்களை எழுதி இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவருக்கு  அனுப்பினார்.

 

‘இண்டர்நேசணல் சைக்கிக் கெசட்’ என்ற பதிரிக்கையில் பிரசுரமாயின.  இதன் பிறகு திரு கம்ப்ரீசு தன் வேலையை உதறிவிட்டு கதோலிக்க சந்நியாசி  ஆகிவிட்டார். இவர்களின் உரையாடல்களில் சில பாகங்களைக் கீழே காணலாம்:

கம்ப்ரீசு: உலகுக்கு நான் ஏதாவது உதவி செய்யக் கூடுமா?   சுவாமி: முதலில் நீ உனக்கு உதவி செய்து கொள்; அதன் மூலம் உலகுக்கே உதவி  உண்டு கம்ப்ரீசு: உலகுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன்; செய்யலாம் அல்லவா?

சுவாமி:ஆகா, செய்யலாம்; உனக்கு உதவி செய்வதன் மூலம் உலகுக்கே உதவி  செய்தவன் ஆகிறாய். நீ இருப்பது உலகில் தானே? நீ தான் உலகம்;  உலகத்தினின்றும் நீ வேறல்ல; உலகமும் உன்னிலிருந்து வேறுபட்டது  அன்று.

கம்ப்ரீசு: பெரியோய்! பூர்வம், கிருட்டினன், ஏசு போன்றோர், பல அற்புதங்களைச்  செய்தனர். என்னாலும் அவ்வாறுசெய்ய முடியாதா?

சுவாமி: அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்போது இவர்களுள் யாராவது இயற்கைக்கு  மாறுபட்ட ஆச்சரியங்களைச் செய்கிறோம் என்று உணர்ந்தா செய்தார்கள்?

கம்ப்ரீசு: (சிறிது யோசனை செய்த பின்னர் ) இல்லை.  இதன் பின் சித்து விளையாட்டுச் சக்திகளை அடைவதில் ஆசை கொண்டு  மோசம் போகாமல் ஆத்ம விசாரத்தின் மூலம் முக்தியடையும் மார்க்கத்தைத் தேடுமாறு அவருக்கு உபதேசித்தருளினார்.

ரமண மகரிஷி – பாகம் 9

முதல் தடவையிலேயே சுவாமிகள் தமது அன்னையிடம் குடும்ப பாசம் அற்றுவிட்டது   என்று அறிவித்திட்ட போதிலும் அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து   போய்க் கொண்டிருந்தார். 1914-ஆம் ஆண்டு ஒரு தடவை அன்னை உடல் நலம் குன்றி   இரண்டு மூன்று வாரம் படுத்த படுக்கையாய் இருந்தார். அப்போது சுவாமிகள்   விருபாட்சக் குகையில் வாசம். வியாதியுற்ற அன்னையை அவர்கள் வெகு அன்புடன்   பராமரித்து பணிவிடைகள் செய்தார். குணப்பட்டவுடன் அன்னை மானாமதுரைக்குத்   திரும்பிச்சென்றார்.    ஆனால் வெகு சீக்கிரத்தில் திருவண்ணாமலைக்குத் திரும்பி   வரும்படி நேரிட்டது.

 

1900-ஆம் ஆண்டு அன்னையின் மூத்த புதல்வன் மரனமடைந்தார்.   மைத்துனரும் காலம் சென்றார். பிரிவினையாகாத ஏழைக்குடும்பம் வறுமையில்   சிக்கியது. பின்னர் நாக சுந்தரத்தின் இளமனைவியும் ஓர் ஆண் மகவை விட்டுவிட்டுப்   பரகதி அடைந்தாள். இப்படிப்பட்ட பெரும் வியாகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படவே   அன்னையின் மனம் மாறிற்று; வீட்டைத் துறந்து இரண்டாவது புதல்வன் மீது மனம்   சென்றது; 1916-ல் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.    கொஞ்ச காலத்திற்குப் பிறகு சுவாமிகள் கந்தாசிரமத்தில்  வசிக்கலானார். அது சற்று விசாலமான இடம். இங்கே வந்த பின்னர் அன்னை   சமையல் கைங்கரியத்தைத் தாமே மேற்கொண்டு தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கும்   அன்னமிடலானார்.    அதிதிகள் அனைவருக்கும் அன்னம் படைக்கும் வழக்கம் இதன்   பின்னரே ஆசிரமத்தில் ஏற்பட்டது.

நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகரித்துக்   கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடைபெற்று   வருகிறது.

சில நாளைக்கெல்லாம் அன்னையின் விருப்பத்திற்கிணங்க, கடைசிக்   குமரனும் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.   அழகம்மையார் 1916- ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் சாசுவதமாகத்   தங்குவதற்கு வந்ததும் பக்தர்கள் பலர் கலக்கம் அடைந்தனர். சுவாமிகளுக்கு இது   பிடிக்காமல் போய் திடீரென்று எங்காவது வேறு இடத்திற்கு நடந்துவிடப் போகிறாரே!   என்று அஞ்சினர்.

ஆனால் நல்ல வேளையாக இம்மாதிரியான முடிவு ஒன்றும்   ஏற்படவில்லை.    ஆயினும், கொஞ்ச நாள்வரைக்கும் அன்னைக்கு இடம் பழக   வில்லை.

சுவாமிகளின் போக்கு அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. பக்தர்களிடம்   சுவாமிகள் சகசமாகப் பேசுவார்; ஆனால், தாயிடம் பேசுவதில்லை. அன்னைக்கு   இதனால் மனத்தாங்கல் ஏற்பட்டது இயற்கையே.

ஆனால் வெகு சீக்கிரத்திலேயே   இதன் அர்தத்தை அழகம்மையார் உணர்ந்து கொண்டார். “ஆசிரமத்திலுள்ள   எத்தனையோ பேரில் அன்னையும் ஒருவர், அவ்வளவுதான். அவரின் அன்னை   என்பதற்காகத் தனி உரிமைகள் ஒன்றும் அவருக்கு இல்லை” என்ற உண்மை   புலப்பட்டது.

இப்படிப் பட்ட சிறு சம்பவங்களைக் கொண்டே தனது மாதாவின்   மனத்தைப் பக்குவப்படுத்தி, முழு முக்தியான சமாதி நிலைக்குத் தயாராக்கினார். தனது   பேச்சு, மௌனம், நடத்தை ஆகியவை மூலம் தாயின் ஞான வாழ்வைச் செம்மையுறச்   செய்தார். அரிய உபதேசங்கள் புரிவார். உண்மை நிறைந்த கதைகளைச் சொல்லுவார்.

லௌகீக வாழ்வில் நீடித்த வழக்கத்தினால் ஏற்பட்ட வைதீக ஆசாரங்களில் உள்ள மூட   நம்பிக்கைகளைச் சிறிது சிறிதாக மாற்றவும் முற்பட்டார். ஆனால் கட்டாயப்படுத்துவது   மட்டும் இல்லை. சிரிய சிரிப்புச் செய்கைகளினாலேயே இவற்றை விலக்கி வெற்றி   பெற்றார்.

“அடடா, உன் புடவையை யாரோ தொட்டுவிட்டார்களே! ஐயையோ,   தீட்டு தீட்டு! மடி கெட்டுப் போச்சே! போச்சு ஆசாரம்; போச்சு பக்தியெல்லாம்;   மோட்சத்துக்கு குறுக்கே நிற்பதெல்லாம் இதுதான்” என்று சிரிப்பார்.

அழகம்மாளின் அந்திய காலத்தின் ஆறு வருடங்கள் இவ்வாறாகக்   கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் முனிவரிடம் பூரண நம்பிக்கை   வைத்து, அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், முனிவரின் பக்கத்திலிருந்து   அவருக்குப் பூரணமான ஞானத்தைப் புகட்டமுடிந்தது.

 

அன்னையின் மகா சமாதி – பாகம் 10

1922- ஆம் ஆண்டு மே திங்கள் 10-ம்நாளன்று அன்னையின் ஆவி முடிவுற்ற தினம். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. அன்னையின் மார்பில் வலக் கையையும் தலையில்  இடக்கையையும் வைத்துக்கொண்டு மகரிஷிகள் நாள் முழுவதும் கண் கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின்
பிராணன் இதயத்தில் ஒடுங்கிப் புனிதமான அருட்ஜோதி ஆனந்தத்தில் கலந்தது.

அன்றுதான் அன்னையின் கடைசி நாள் என்று தெரிந்ததும் பக்தர்கள் பலர் மத்தியானமே சாப்பிடவில்லை. இரவு மறுபடியும் சமையல் ஆயிற்று. ஆனால் மகரிஷிகள் சாப்பிடக்கூட எழுந்திருக்கவில்லை. மூச்சு அடங்கி அன்னை மகா சமாதி அடைந்த பின்னரே எழுந்தார். அவர் குரலில் எந்தவிதமான கவலையோ, தழுதழுப்போ இல்லை.

“இனி நாம் சாப்பிடலாம், சாப்பிட வாருங்கள். தீட்டும் இல்லை, ஒன்றும் இல்லை.” என்று அழைத்து எப்போதும் போல் பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தனர்.

மறுநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. உறவினர் வந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். சுவாமியும் அவர்களுள் ஒருவரைப் போலவே தோன்றினார். உடற் கோயிலை அலங்கரித்து மலைக்கு அப்பாலுள்ள பாலி தீர்த்தம் என்னும் இடத்துக்கு எடுத்துச் சென்றனர்.

 

ரஸ்தாவுக்கு அப்பால் ஒரு குகை செய்து, பூ மேனியை இருத்தி உட்காரவைத்து, ஏராளமாக விபூதி, கற்பூரம், உப்பு  முதலியவற்றைக் கொட்டினர். அதன் மேல் சமாதி கட்டி ஒரு லிங்கம் ஸ்தாபித்தனர்.

மாத்ருபூதேஸ்வரர் என்றபெயருடன்  இன்றைக்கும் அதற்குத் தூப தீப நைவேத்தியங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கிருஷ்ணபட்சம் நவமி திதியில் மாத்ருபூதேஸ்வர மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

மகா பூஜையின் உட்கருத்து பின்வருவனவற்றால் நன்கு விளங்கும்: சில நாள் சென்றபின் அன்னை போய்விட்டதைப் பற்றி ஒருவர் பிரஸ்தாபித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் குறுக்கிட்டு, “இல்லை போய்விட்டாளாவது? …. கலந்துகொண்டாள்……. அவ்வளவுதான்.”  என்றுகூறினார்.

மற்றொருமுறை மகரிஷிகள் கூறியதாவது: ” ஆமாம்! அவளிடம் இதுபலித்தது. இதற்கு முன் வேறு ஒருவருக்கு- முடிவு நெருங்கியபோது– இதே முறையைக் கையாண்டேன்; ஆனால் காரியம் சித்திக்கவில்லை. கண்ணைத் திறந்து ஒருமுறை விழித்தார். பிராணன் போய்விட்டது.”

அன்னையின் உச்சிக் கமலத்திலும், இருதயகமலத்திலும் கரங்களை வைத்துக் கொண்டிருந்த அந்த பத்துப் பன்னீரண்டு மணி நேரத்தில் நேர்ந்த சம்பவங்களைக் குறித்து மகரிஷிகள் சொல்லியிருப்பதாவது:

” இயற்கையாக அமைந்த எண்ணங்களும் பூர்வ ¦ஜன்ம அநுபவங்களும் வெகு துரிதமாக வேலை செய்தன. வெளி உலகத்தின் அறிவு மங்கிவிட்டதால் சூக்ஷம நிலையிலே ஒவ்வொரு  காட்சியும் அவள் முன்பு அடுத்தடுத்துத் தோன்றி மறைந்தது. அந்த ஆத்மா எத்தனையோ விதமான அநுபவங்களில் ஆழ்ந்து  வெகு வேகமாகக் கடைத்தேறிச் சென்றது.”

அச்சமயத்தில் பகவான்தமது திருக்கரங்களை அன்னையின் சிரத்திலும், மார்பிலும் பதித்து, ஜீவனை இருதயத்தில் ஒடுங்கச் செய்யாதிருந்தால் அது எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கவேண்டிஇருந்திருக்கும்.

கடைசியாக ஆத்மாவானது பல பல சூக்‌ஷ்ம சரீரங்களைக் களைந்தெறிந்து அஞ்ஞான நிலையை முடிவாகக்
கடந்து, நித்தியானந்த நிர்வாண நிலையாகிய மீளாப் பதவியை அடைந்தது.

தெய்வீகமணம் கமழும் ஆசிரமத்தின் புனிதமான காட்சியையும் அன்னையின் சமாதியின் மேல் பகவான் கொண்டுள்ள பக்தியையும் உணர்ந்தோருக்கு இந்த வார்த்தைகளின்  அர்த்தம் புரியும்.

மாத்ருபூதேஸ்வர மகா சந்நிதானம்.

அன்னையின் சமாதியின் மேல் சாஸ்திர லட்சணம் பொருந்திய ஓர் ஆலயம் அமைக்கப்பெற்றுள்ளது. பகவான் அதைத் தம் அநுக்கிரகத்தால் பிரதிஷட்டை செய்து பக்தர்கள் தம் தம் அபீஷடங்களை அடைய உதவி செய்துள்ளார்.

ஸ்ரீ ரமணாசிரமம் – பாகம் 11

முதலில் கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பெற்றிருந்த அன்னையின் சமாதிக்கு ஸ்ரீ ரமண பகவான்
ஸ்கந்தாசிரமத்திலிருந்து அடிக்கடி வந்து போவதுண்டு. 1922- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பகவான் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். நாளடைவில் பக்தர்களும் அங்கேயே வந்து கூடித் தங்கிப் பகவானைத் தரிசிக்க ஆரம்பித்தனர். அதனால் இச்சந்நிதி வரவர பற்பல அழகிய கட்டிடங்களாக வளர்ச்சியுற்று, தற்போதுள்ள ‘ஸ்ரீ ரமணாச்சிரமம்’ ஆயிற்று.

பரிபூரண சமத்துவமே பகவானின் தினசரி வாழ்வாயிற்று. நம் நாட்டின் பரம ஏழை ஒருவன் தனது உடலின்
தேவையாக எவ்வளவு உடுத்தியிருப்பானோ அதைவிடக் குறைவான உடையையே-ஒற்றைக் கௌபீனத்தையே – அவர் தமது இறுதி நாள் வரை உடுத்திவந்தார். உணவிலும் அப்படியே. அனைவருடனும் சமமாக அமர்ந்தே அவர் உண்பார்.

 

அனைவருக்கும் எது பரிமாறப்படுகிறதோ அதை மட்டுமே, அதிலும் குறைந்த அளவிலேயே, தாம் ஏற்றுக்கொள்வார். அவர் சந்நிதியில் யார் எதைக் கொண்டுவந்து சமர்ப்பித்தாலும் அது அவ்வப்போதே அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டு வினியோகிக்கப்படும். பசு, நாய், குரங்கு, அணில், மயில் முதலிய சகல ஜந்துக்களுக்கும் அங்கு அத்தகைய சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட்டு வந்தன. ‘பசு லக்ஷிமி’ ஆசிரமத்தின் செல்வ மகள் போல் வாழ்ந்து இறுதியில் பகவானது ஹஸ்த தீக்ஷையுடன் 18-06-1948 இல் முக்தியடைந்தாள்.

பகலும் இரவும் பகவான் வாழ்ந்துவந்த அறையின் கதவுகள் திறந்தே இருக்கும். அகண்ட சிதாகாச வெற்ற வெளியாக விளங்கிய அவருடைய வாழ்வில் மறைவேது? மறைந்திருக்க அவசியம் ஏது? நடு நிசியிலும் கூட அன்பர்கள் சென்று அவரைத் தரிசிக்கலாம். “நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவிலா உள்ளத்தவர்” என்பது ஆன்றோர் வாக்கன்றோ? அவரது தரிசனம் சகலர்க்கும் சதாகாலமும் நிபந்தனையற்ற பாக்கியமாக இருந்தது.

 

 

ஆசிரமத்தின் ஆதிக்காலத்தில் கள்வர் சிலர் நடுநிசியில் வந்தபோதுங்கூட,பகவான், ” உள்ளேவந்து வேண்டியதை எடுத்துப்போகலாமே ” என்று வரவேற்பளித்தனரென்றால், அவரது வெற்ற வெளி வாழ்வுக்கு வேறென்ன சான்று வேண்டும்?

 

கள்வருக்கும் கருணை -பாகம் 12

 

1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளே
அப்பொழுது இருந்த ரமணாசிரமம். ஆனால், இது பணம் பெருத்த திருமடம் என்றெண்ணிய சில திருடர்கள் அங்கு வந்து புகுந்து ஜன்னல்களை நொறுக்கி அட்டகாசம் செய்தனர். பகவான் ஸ்ரீ ரமணர் படுத்திருந்த அறையில் கூடவே சில அடியார்களும் இருந்தனர். பகவான் திருடர்களை உள்ளே வரச் சொல்லி, அவர்களுக்கு வேண்டியதை இருளில் பார்த்து எடுத்துக் கொள்வதற்காக ஹரிக்கேன் விளக்கு ஒன்றை ஏற்றித்தரச்செய்தார். ” உன் பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?” என்று உறுமினர் கள்வர்கள். ” நாங்கள் பிட்சை எடுத்து உண்ணும் சாதுக்கள்; எங்களிடம்பணம் இல்லை; இங்கே உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லுங்கள்; நாங்கள் வெளியேறி விடுகிறோம்.” என்று  பகவான் கூறி அடியார்களுடன் வெளியில் வந்து உட்கார்ந்தார். வெளியேறும் போது ஒவ்வொருவரையும் திருடர்கள் அடித்தனர். ஸ்ரீ பகவானுக்கும் இடது தொடையில் ஓர் அடி விழுந்தது! “அப்பா! உனக்கு திருப்தியாகாவிட்டால் மற்றொரு தொடையிலும் அடி” என்று பரிந்து கூறினார் பகவான்!

கள்வர்க்கும் காட்டிய கருணை அம்மட்டோ! எதிர்த்துத் திருடரைத் தாக்கக் கிளம்பிய இளஞ்சீடர் ஒருவரைப் பகவான் தடுத்து,” அவர்கள் தர்மத்தை அவர்கள் செய்யட்டும்; நாம் சாதுக்கள்; நம் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது; எதிர்ப்பதால் சம்பவிக்கும் விளைவுக்கு நாளை உலகம் நம்மையே குறை கூறும். நம் பற்கள் நம்நாக்கைக் கடித்துவிட்டால் பற்களை உடைத்தா எறிந்துவிடுகிறோம்?” என்று சாந்தோபதேசம் செய்தனர்.

“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று”

-குறள் 157.

சில நாட்களில் அத் திருடர்களை காவல் துறையினர் பிடித்துக் கொண்டுவந்து ஸ்ரீ பகவான் முன்னிலையில்
நிறுத்தினர்.. “பகவானே, இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்! ” என்று அவர்கள் வேண்டினர். ” நான்  யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ அவன் தான் என்னை அடித்தான்! அவனை நீர் கண்டுபிடியும்!! ” என்று கூறி நகைத்தனரே தவிர அக்குற்றவாளியைக் காட்டியே கொடுக்கவில்லை.

“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்
தகுதியான் வென்று விடல்.” 

குறள் 158

“இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.” 

குறள் 314
உலகங்கவர்ந்த உத்தமர் – பாகம் 13

பைபிளுங் குறளும் பகவத் கீதையும் உபநிஷத்தும் உடல்தாங்கி உலவிய உருவமே பகவான் ரமணர் என்ற உண்மையைக் கொஞ்சங் கொஞ்சமாக உலகின் எல்லா நாட்டு மக்களும் அறிந்து கவர்ந் திழுக்கப்படலாயினர்.

 

இந்தியர்-வெள்ளையர், என்ற இன வேறுபட்டையும்,இந்து-கிறிஸ்தவர்-முகம்மதியர்-பௌத்தர்-ஜைனர்-சீக்கியர் என்ற மதவேறுபாட்டையும் மறந்து, மக்கள் பலரும் வெகு தொலைவிலிருந்தும் வந்து, இந்த ஞான  வள்ளலையடுத்துத் தத்தமது மத குருஇவரே என்று போற்றிப் பணியலாயினர். அவர்களுள்ள்ளும் உத்தமப் பக்குவிகளான எத்தனையோ பேர் ஸ்ரீ ரமண தரிசன மாத்திரத்தாலும், அவரது சந்நிதி விசேடத்தாலும், அருகிலிருந்து தொண்டாற்றியும், உபதேசங்களைக் கடைப்பிடித் தொழுகியும் மெய்யறிவு விளக்கமுற்றனர்.

பாரதத்தின் முன்னாள் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் 1938-ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜியின்
ஆஸ்ரமத்திற்குச் சென்று,” பாபுஜி, சாந்தியை நாடித் தங்கள் ஆசிரமத்திற்கு வந்துள்ளேன்” என்றார். சாந்தியின்
நிலைக்களம் காந்திஜி அறிந்ததே. அதனால் மகாத்மாஜி,” சாந்தியை நீவிர் விரும்பு வீராயின் ரமணாசிரமம்
போம்; அங்குச்சென்று ஸ்ரீ ரமண மகரிஷிகளின் சந்நிதியிற் கேள்வி, பேச்சுக்களற்றுக் கொஞ்ச நாள் இருந்துவாரும்”  என்று கூறி அனுப்பி வைத்தார். அதன்படி ராஜன் பாபு 14-08-1938-ல் ரமணாசிரமத்திற்கு வந்தார். உடன் வந்தவர்கள் பகவானிடம் ஏதேதோ ஆன்மீக விஷயங்களை வினவியும் , பகவான் தவமிருந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தும் வந்தனரேனும், ராஜன் பாபுமட்டும் ஸ்ரீ ரமண சந்நிதியை விட்டு நகரவே யில்லை! மேலும், காந்திஜியின் அறிவுரைப்படியே யாதொரு பேச்சும் கேள்வியும் எழுப்பாமலேயே ஒரு வாரம் முழுவதுங் கழித்தார்!

 

அவர் விடை பெறும் போது பகவானை அணுகி, ” பகவன், காந்திஜியே என்னை இங்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நான் தங்களிடமிருந்து கொண்டுசெல்ல ஏதேனும் செய்தி யுளதோ?” என்று வினயமாய் வேண்டி நின்றார்.

“எந்த சக்தி இங்கே நடத்திக் கொண்டிருக்கிறதோ, அதுவேதான் அங்கேயும் நடத்தி வருகின்றது! இதயம்
இதயத்தோடு பேச வாய்ச்சொல் எதற்கு?” என்றனர் பகவான். எங்கு நிறைந்த பரம் பொருளின் ஏகத்துவ இரகசியத்தை விளக்கும் ஞான மொழிகளே இவை யன்றோ? இங்ஙனம், ரமண பகவானது காலத்தில் வாழ்ந்த புவியரசர்கள், கவியரசர்கள், அறிஞர் திலகங்கள், அரசியல் தலைவர்கள், வேதாந்திகள், துறவிகளாகிய பெரியோர் அனைவரும் பகவானின் ஞான மகிமையைப் போற்றி வந்தனர்.

உபதேசங்கள்: குறிக்கோளும் வழியும் -பாகம் 14

பரிபூர்ண சுகத்தை யடைவதையே பகவான் ஸ்ரீ ரமணர் மனித சமூகத்தின் குறிக்கோளாகக் காட்டிக் கொடுக்கின்றனர். சுகத்தை விரும்பாத ஜீவர் யாரு மில்லை. சகல ஜீவர்களும் தத்தம் சகலவித முயற்சியாலும் நாடுவது சுகத்தையே அல்லவா? ஆகையால், பகவானது குறிக்கோளை மறுப்பவர் யாருமிலர். இக் காரணத்தாலேயே ரமணோபதேசங்கள் யாதொரு தனிப்பட்ட மதக் கொள்கையு மாகாமல், சகல உயிர்கட்கும் புகலளிக்கும் பொதுப் பெரு நெறியாக விளங்குகிறது. அதனால் தான் உலகின் எந் நாட்டினரும் எம் மதத்தினரும் ஸ்ரீ ரமணோ பதேசங்களை மிக்க விருப்புடன் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.

சுகம் என்பது யாது? இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால் தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக்கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை- ஆன்மாவை-அறிவதொன்றே போதும்.

“நாம் சுகமடைய முயல்வது சுயநலமல்லவா? ” என்று சிலர் கேட்பதுண்டு. ‘சுயம்’ என்ற பதத்தின் சரியான
பொருளைத் தெரிந்து கொள்ளாததால்தான் இக்கேள்வி பல நன் மக்களிடமும் எழுகின்றது. ‘சுயம்’ என்பது ஆன்மாவே.

 

தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, ‘இவ்வுடலே நான்’ என்று கருதுவதால் தான் ‘சுய நலம்’ என்ற சொல் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. “சகல  உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்” என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில்’சுய நலம்’ என்பது சகல உயிர்களின் நலமே ஆகிறதல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும்.

உலகப் பொருளைத் தேடிக் குவித்துப் பஞ்சேந்திரியங்களின் மூலம் அவற்றை அனுபவித்தடையும் சுகம் மிக அற்பமும் அநித்தியமும் மாகின்றது. இவ்வாறு அற்ப சுகானுபவியாக நாம் ஆகாமல், பரிபூரண சுகானுபவியாவதே நமக்கு ஸ்ரீ ரமணபகவான் காட்டித்தரும் குறிக்கோள்.இக்குறிக்கோளை யடைய ஸ்ரீ பகவான் வகுத்தளித்துள்ள வழிகள் இரண்டு.

  1. தன்னை ‘நான் யார்?’ என்று விசாரித்து அறியும் ஆன்ம விசாரம்.
  2. (இறைவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்புவித்திடும் ஆன்ம சமர்ப்பணம். முந்தியது அறிவு நெறி(ஞானமார்க்கம்), பிந்தியது அன்பு நெறி(பக்தி மார்க்கம்.)

ஆன்மவிசாரம் – பாகம் 15

 

நாம் எதை அறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னையறிய விரும்புவோர் தன்னையே  நாடவேண்டும்.

ஆயின் உலகிற் காணப்படும் ஆராய்ச்சிகள் முழுவதும் தன்னை விட்டு முன்னிலை, படர்க்கைப் பொருளாகிய உலகையும் கடவுளையும் ஆராய்வதே யாகு மல்லவா? உலகம், கடவுள் இவைகளை ஆராயும் அறிவாகிய மனிதன் தன்னை யாரென்று சரியாக இன்னும் அறியவில்லை. ‘நான் மனிதன்’ என்கிறோம். இது அறியாமையே தவிர, தன்மையின் உண்மையான அறிவல்ல. ஏனெனில் நமது உடைமையாகிய உடம்பையே நாம் என்று தவறாக எண்னுவதால்தான் ‘நான் மனிதன்’ என்கிறோம். உடையவனாகிய நான் யாரென்று உடம்பினின்றும் நம்மைப் பகுத்து அறியும் அறிவே சரியான பகுத்தறிவு. தேகமே நானென் றுணரும் அறிவு (அகங்காரம்) போலித் தன்மையுணர்வே. அகண்ட ஆன்மாவாகத் தன்னை யறிவதே மெய்யான தன்மை யறிவு அல்லது ஆன்ம ஞானம்.

உறக்கத்திலிருந்து உணர்வு எழும்போது, ‘நான் இவ்வுடல்’ என்ற வடிவில் நம்மை உணர்கிறோம். ஆனால் உறக்கத்தில் உடல், உலக உணர்வுகள் இல்லை. ‘நான் இருக்கிறேன்’ என்ற சுத்தவுணர்வு உறக்கத்திலுள்ளது.

 

விழிப்பில் இத் தன்னுணர்வு “நான் உடலாக இருக்கிறேன்; நான் மனிதனாக இருக்கிறேன்; நான் இன்னாராக இருக்கிறேன்” என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவ போதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம்.

 

இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உருவாகின்றன. முன்னிலை படர்க்கைகளை நாட நாட மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக் கொண்டே போகும். தன்மை உணர்வாகிய ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற அகந்தை வடிவத்தை இதன் இருப்பு எத்தகையது என்று நாட வேண்டும்.

விதேக கைவல்யம்.

பகவான் ஸ்ரீ ரமணரின் தேக வாழ்வின் இறுதிக்காலம் பிரம்மஞானி ஒருவரின் மகிமை எப்படிப்பட்ட தென்பதைக் கையிற் கனியாய்க் காட்ட வல்லதா யிருந்தது. தாம் அருணாசலத்தில் அடி வைத்த நாள் முதலாய் அரை விநாடி கூட அவர் எங்கும் செல்லாமல் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்திருந்தார். 1949-ஆம் ஆண்டு அவரது இடது புஜத்தின் கீழ்பாகத்தில் ‘சர்கோமா’ எனப்படும் ஒரு விதப் புற்று நோய்க் கட்டி புறப்பட்டது.

 

ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன. 19-12-’49 இல் நான்காவது முறையாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்துங் கூட நோய் தணியவில்லை. அவ் வறுவைச் சிகிச்சையின் போது மயக்க மருந்து கூடக் கொடுக்க  வேண்டாம் என்று பகவான் தடுத்துவிட்டார். “வலி இல்லையா? ” என்று பக்தர் ஒருவர் பகவானிடமே கேட்டார். அதற்கு விடையாக “வலியும் நமக்கு அன்னியமல்லவே” என்றார் பகவான். நாக்கைக் கடிக்கும் பற்கள் எப்படி நமக்கு அன்னிய மல்லவோ, ரமணரை அடித்த கள்வர்கள் எப்படி அவருக்கு அன்னியராகத் தோன்றவில்லையோ, அப்படியே உடலை உழற்றும் நோயும் வலியும் கூட ‘நானே’ என்ற அனன்னிய ஆத்ம பாவமே அவரது அதிசயிக்கத் தக்க ஞான நிலையாக யிருந்தது.

கொடிய வலிதரும் நோயின் இடையிலும் நகைச் சுவை ததும்பும் ஞான மொழிகளால் பகவான் தம்பொருட்டு வருந்தும் பக்தர்களின் வாட்டத்தை அடிக்கடி போக்கி வந்தனர். ” இவ்வுடம்பே நமக்கு ஒரு நோய்; அந்நோய்க்கு ஒரு நோய் வந்தால் நல்லது தானே நமக்கு” என்பார். ஒரு பக்தரிடம், “சுவாமி போய்விடப் போகிறாறே என்று  வருந்துகிறீர்களா? எங்கே போவது? எப்படிப் போவது? போக்கு வரவு எதற்கு? தேகத்திற்கே! நம்மக்கேது!”  என்றார் பகவான். மற்றொரு முறை, “கொம்பிற் சுற்றப்பட்ட மாலையொன்று நழுவியதையோ அன்றி இருப்பதையோ அறியாத பசுவைப் போலவும், தன் உடல் மேலிருந்து ஆடை போயிற்றா, இருக்கிறதா என்றறியாத ஒரு குடிவெறியனைப் போலவும், ஞானியொருவன் தனக்குச் சரீரம் என்று ஒன்று இருக்கிறதா, போயிற்றாஎன்பதை அறிவதே யில்லை!” என்றும் விளக்கி யருளினார்.

இறுதி வரையிலும் மக்கள் தன்னை தரிசிப்பதை யாரும் தடை செய்யக் கூடாது என்று பகவான் திட்டப் படுத்தினார்.

 

1950-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, இரவு மணி 8-47க்கு, உடல் பத்மாசனம்
இட்டவாறே அமர்ந்திருக்க, ஒவ்வொரு மூச்சும் சீராகச் சென்று முடிவில் உள்ளே இதயத்தில் ஒடுங்கிற்று. பகவான் ஸ்ரீ ரமணர் தமது நர வேடத்தைக் களைந்து, தமது யதார்த்த சொரூபமான போக்கும் வரவும் இலாப் பொது அருள் வெளியாய், ஏதும் மறைப்பின்றி என்றும் பரிபூரணமாய்ப் பிரகாசித்தார்.

விக்கிருதி சித்திரை மேவுங் கிருட்டிணப்
பக்கத் திரயோ தசிதிதியிற்-சுக்கிர
வாரம்பூ ரட்டாதி மாவிதேக கைவல்யம்
சீரமண னுற்ற தினம்.

அச்சமயம் மாத்ரு பூதேசுர ராலய முன்றிலில் அமர்ந்திருந்த பக்தர்கள் சிலர், பகவான் இருந்த அறையின்
வாயிலில், ஓர் பேரொளி தோன்றி அவ் வறையையும் சுற்றுப் புறத்தையும் வியாபித்துப் பரவியதைக் கண்டனர். இது ஏதேனும் புகைப் படம் எடுக்கும் வெள்ளொளி யாயிருக்கலாமோ வென ஐயுறு முன்பே அதே சமயத்தில், அருகில் வெட்ட வெளியிற் கூடியிருந்த மக்கள் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, “இதோ ஜோதி; ஜோதி போகின்றது!” என்று கூவினர். வான வீதியில் அவ் வெண் ஜோதி தோன்றி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்று, ஸ்ரீ  அருணாசலத்தின் உச்சிக்குப் பின் மறைந்தது! ஸ்ரீ ரமணமா ஜோதி வாழ்க!
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் திரு மேனியை ரமணாசிரமத்தில் அப்பெருமான் வாழ்ந்திருந்த அறைக்கும்,  அன்னையின் ஆலயத்திற்கும் இடையிற் சமாதி செய்வித்து ஸ்ரீ ரமண லிங்க மூர்த்தியைப் பிரதிஷ்ட்டை செய்வித்தனர்.

 

அதன்மேல் அழகிய மணி மண்டபாலயம் ஒன்று நிருமாணிக்கப்பெற்று 18-06-’67 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அச் சந்நிதியின் முன் பாகத்தில் உற்சவாதிகள் நடை பெறுவதற்கான ஒரு பெரிய சபா மண்டபமும் அமைக்கப்பட்டது.”தான் இவ்வுடலல்ல; உள்ள பரம் பொருளே தான்” என்ற மகானுபவியான பகவான் ஸ்ரீ  அருணாசல் ரமணரது அருட் சந்நிதி, ஞான தாகமெடுத்த உலகிற்கு மோனமாக என்றென்றும்அருளமுதம் ஊட்டி வருகின்றது.

வாழிஸ்ரீ ரமண ஜோதி வள்ளலே வாழி வாழி
வாழிநீ கால மூன்றின் வரையறை கடந்தோய் வாழி
வாழிநீ புவனகோடி வடிவெலா நிறைந்தோய் வாழி
வாழிநீ யூழி வெள்ள மதிற்கெடா வங்கம் வாழி!

வாழிஸ்ரீ ரமண ஞான வாரிதி வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண நாம மந்திரம் வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண மூர்த்தி வாழியென் பார்நீ டூழி
வாழிநீ எம்மைக் காக்கு மகாகுரு ரமண வாழி!

 


ஸ்ரீ ரமண சரித சுருக்கம் நிறைவு பெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *