Home village_deities படாளம்மன்

படாளம்மன்

by Dr.K.Subashini
0 comment

படாளம்மன்

திருமதி.கீதா சாம்பசிவம்

 

 

மதுரையிலிருந்து தேனீ செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது என் அப்பாவின் ஊரான மேல்மங்கலம்.  அங்கே சிவன் கோயில், விஷ்ணு கோயில் இருந்தாலும், வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள படாளம்மன் தான் அப்பா வீட்டின் குலதெய்வம். 

 

அங்கே அம்மனுக்கு அபிஷேஹம் செய்து, அம்மனின் தளபதியான கறுப்பருக்கு உருமால் சார்த்துவது வழக்கம்.  அப்பா வீட்டில் குல தெய்வம் என்பதால் வருடா வருடம் குடும்பத்தினர் அனைவரும் போவாங்க. நான் கல்யாணமாகி வந்ததில் இருந்து போகவே முடியலை.  இங்கே மாமனார் வீட்டில் மாரியம்மன் என்பதால் கும்பகோணம் பக்கம் இருக்கும் கிராமத்துக்கே போய் வருவோம்.  சில வருடங்கள் முன்னர் குடும்பத்தில் ஒருத்தருக்குச் சில குழப்பங்கள் ஏற்பட ஜோசியம் பார்த்ததில் உங்க குடும்பத்தினர் அனைவரும், ஆண், பெண் அவங்க குடும்பம் உட்பட படாளம்மனுக்கு அபிஷேஹம் செய்து, கறுப்பருக்கு உருமால் சார்த்தும்படி சொன்னாங்க. 

 

கருப்பர் சாமி

 

அதன்படி எங்க பொண்ணு, அவள் கணவர், மாமியாரோடு போய் வந்துட்டா.  வழக்கம்போல் நாங்க தாமதம். 

 

கடைசியில் 2007-ல் டிசம்பரில் தான் போக முடிந்தது.  கறுப்புக்குச் சார்த்தி இருக்கும் உருமாலும், நிலைமாலையும் நாங்க பிரார்த்தனைக்குச் செலுத்தியது. நிலைமாலையைப் பழநியில் கட்டித் தரச் சொல்லி இரண்டு மணி நேரம் காத்திருந்து வாங்கி வந்தோம்.  உருமால் கோயில் பூசாரியே வாங்கி விட்டார்.  தலையில் கட்டி இருக்கும் உருமாலைப் பின்னர் திருமணம் போன்ற விசேஷங்களில், பழம், பாக்கு மாற்றுவது என்ற ஒரு சம்பிரதாயம் உண்டு.  திருமணப்பத்திரிகை அடித்து வந்ததும், முதல் பத்திரிகையைப் பிள்ளையாருக்கு எடுத்து வைத்துவிட்டு அடுத்துக் குலதெய்வம் கோயிலுக்கு வைப்பார்கள்.  அந்தப் பத்திரிகையோடு வெற்றிலை, பாக்கு, பழவரிசைகள் வைத்துக்கறுப்புக்குச் சமர்ப்பிப்பார்கள்.  பத்திரிகையை அம்மன் காலடியிலும், கறுப்பண்ணசாமி காலடியிலும் வைத்துவிட்டு உருமாலை எடுத்துப் பத்திரிகை வைக்க வந்தவர்களுக்குக் கழுத்தில் போடுவார்கள்.  பிரசாதமாக அதை வைத்துக்கொள்வதுண்டு. இதற்குப் பழம், பாக்கு மாற்றுவது என்று சொல்வார்கள்.

 

அடுத்துப் படாளம்மனின் சேனை தர்பார்க் காட்சி.
 

 

 

You may also like

Leave a Comment