திருவண்ணாமலை மாவட்டம்

 

திருவண்ணாமலை மாவட்டம்

 
தமிழ் மரபு அறக்கட்டளையின் தூதுவராகச் சென்று ஸ்ரீமதி சீதாலட்சுமி (சீதாம்மா) அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களை மேற்கண்ட பேட்டி இன்று வெளியிடப்படுகின்றது. இப்பேட்டியின் நீளம் 36 நிமிடங்கள்.

 

பதிவு 1

 

ஒலிப்பதிவு: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/THF-ThiruvannamalaiCollectorInterview01.mp3{/play}
 

 

 

இப்பேட்டியில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றிய குறிப்புக்கள் கீழ் வருமாறு:

 
1.முனைவர் பட்ட ஆய்வு தொடர்பான சில செய்திகள்
டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு திருக்குறள் தொடர்பில் அமைந்தமைப் பற்றிய சில செய்திகள்.
திருக்குறளில் பொருளியலில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டதன் காரணம்..
திருக்குறளில் ஏறக்குறைய 190 குறள்களில் சட்டம் பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன என்றும் எவ்வாறு சட்டம் எனும் பொருள் அனுகப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

 
2.நடைமுறை பணிகள்
தனது பணியில் உள்ள நடைமுறை விஷயங்கள், பொது மக்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
ஜவ்வாது மலைப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்குவது. 
ஜவ்வாது மலையில் ஆட்சியர்  அவர்களின் பணி..
ஜவ்வாது மலையில் ஏறக்குறைய 70,000 மலைவாசி மக்கள் இருக்கின்றார்கள். தற்சமயம் சாலைவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மக்கள் வெளி உலகத்திலிருந்து தனித்து இருப்பதால் வெளி உலக வாழ்க்கை நிலை அறியாவர்களக இருக்கின்ற சூழல் இருக்கின்றது. இவர்களுக்கு முடிந்தவரை எஸ்.சி. சான்றிதழ்கள் வழங்க அரசு உதவுவதால் மலைப்பகுதியிலிருந்து வெளிவந்து இம்மக்கள் ஏனைய தொழில்களில் ஈடுப்ட வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே பெண் கல்வியறிவு குறைவான நிலையில் உள்ள பகுதி ஜவ்வாது மலை.

 
3.ஜவ்வாது மலை மலைவாழ் மக்கள் வாழ்க்கை முறை
இவர்களின் குழுவைச் சாராத வெளி ஆட்களை இவர்கள் பகுதியில் அனுமதிப்பதில்லை.
திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்தால் தான் நடைபெறும் என்ற வகையில் அமைந்துள்ளது. சாதிப்பிரிவும் கட்டுப்பாடும் இம்மக்களிடயே இல்லை.
பண்டமாற்று முறையாக ஒரு பொருளை பெற இன்னொரு பொறுளைத் தரும் முறை இன்னமும் வழக்கத்தில் உள்ளது. விலைக்குக் கேட்டாலும் கொடுக்க மாட்டார்களாம்..
திருமண் சடங்குகள் அந்த மக்களுக்குள்ளேயே நிகழும். ப்ரோகிதர்களை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் இவர்களிடையே இல்லை.
இம்மக்கள் இயற்கை விவசாயத்தை செய்கின்றனர். மாறிவிட்ட சமுதாயத்தில் உள்ள மாற்றங்கள் இவர்களைப் பாதிக்காததால் இயற்கை வாழ்க்கை முறை விவசாயம் இன்னமும் இவர்களின்புழக்கத்தில் இருக்கின்றது.

 

 
4.தலித் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏறக்குறைய 22% மக்கள் தலித் சமூகத்தச் சேர்ந்தவர்கள். மிகக் குறைவான சம்பளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கலுக்கான பற்பல மேம்பாட்டு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன.

5. ஆலயத் திருப்பணிகள்
திருவண்ணாமலையில் சிதைந்த நிலையில் உள்ள கோயில்களைச் சீரமைத்துப் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இச்சீரமக்கும் பணியை ஆட்சியர் தொடங்கியிருக்கின்றார்கள்.

 
6.சோழர்கள்
இவ்வுரையாடல் தொடர்ந்து தமிழக வரலாற்றையும் தொட்டுச் செல்கின்றது.

 
திருவண்ணாமலையார் கோயிலில் 7ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கூட உள்ளன. இக்கோயிலின் தலவிருட்சம் மகிழ மரம். இதன் அருகில்  ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் அவரது மெய்கீர்த்தி அதாவது தனது அளப்பெரிய வெற்றியான கங்கை கொண்டது,  கட்டாரத்தை வென்ற செய்தி, கடல் பயணங்கள் என்று தனது மெய்கீர்த்தியை தானே சொல்லும் வகையில் அமைந்த கல்வெட்டினை அடையாளம் காணும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. அந்தச் செய்தியையும் இப்ப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

 
ராஜேந்திர சோழனின் தனது வாழ் நாளின் கடைசி 3 ஆண்டுகள் இங்கே இருந்திருக்கின்ரார்.
இம்மன்னர் அரச பதவிக்கு வந்த போது அவருக்கு 47 வயதுக்கு மேல். 1014ல் முழு ஆட்சியாளராக பட்டமேற்கின்றார். இறுதியில் தனது மகனிடம் ஆட்சியை ஒப்படத்து விட்டு திருவண்ணாமலைப் பகுதியில் வந்து தங்கி இருந்த செய்தி, அப்போது கூல மந்தையில் ராஜேந்திர சோழ கோயில் கட்டிய செய்தி,  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசத்தில் இம்மன்னனுக்கு பள்ளிப்படை கோயில் அமைந்துள்ள செய்தி ஆகியன பர்றி விவரிக்கின்றார்.

  
திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ் சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

 

பதிவு 2

 

ஒலிப்பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/THF-ThiruvannamalaiCollectorInterview02.mp3{/play}
 

கண்ணகி கோயில் – ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கின்றார் முனைவர்.மா.ராஜேந்திரன். இப்பதிவில்:

 

  • கண்ணகி அறக்கட்டளை மேற்பார்வையில் நடைபெறும் பணிகள்
  • கேரளா அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கமும் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளமை
  • கோயில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ள செய்திகள்
  • சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் இங்கு வழிபாடு நடைபெறுகின்றது என்ர தகவல்
  • தமிழகத்தின் பல இடங்களிலிருந்து இந்த தினத்தன்று ஆண்களும் பெண்களும் பச்சை மஞ்சள் நிறத்தில்  ஆடையணிந்து வந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்திருக்கும் செய்திகள்

என் கண்ணகி கோயில் பற்றிய பல செய்திகள் கலந்துரையாடப்படுகின்றன.

 

அதுமட்டுமின்றி, கோயில் சோழர் கால கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ள செய்தி ராஜராஜ சோழன் அங்கு வந்தமையை கூறும் வகையில் உள்ள ஒரு கல்வெட்டு பற்றிய தகவல்களும் வருகின்றன.

 

பதிவு 3

 

ஒலிப்பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/THF-ThiruvannamalaiCollectorInterview03.mp3{/play}
 

 

அறிமுகப் பகுதி – இதில் முனைவர்.மா.ராஜேந்திரன் தன்னைப் பற்றியும் தனது பணிகள் பற்றிய சில தகவல்களை வழங்குகின்றார்.  தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு. துரை, திரு.செல்வமுரளி, திரு.ப்ரகாஷ், திரு.உதயன் ஆகியோர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்கின்றார்கள்.

 

 

அமர்ந்திருப்பவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி. அருகில் திருமதி புனிதவதி, திருமதி ருக்மணி, திரு.வேணு்

பின்வரிசையில் திரு.உதயன், திரு.துரை, திரு.செல்வமுரளி

 

 

திரு.துரை, திரு.ப்ரகாஷ் சுகுமாரன், திரு.செல்வமுரளி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *