ஆலவாய் நூல்

ஆலவாய் – நரசய்யா

வணக்கம்.
திரு.நரசய்யாவின் 45 நிமிட பேட்டி ஒன்று ஒலிப்பதிவாக இன்றைய மண்ணின் குரலில் இடம்பெறுகின்றது.
 • நூல் எழுத ஆரம்பித்த நாட்களில் ஐராவதம் மகாதேவனிடம் தமிழ் பிராமி எழுத்து வாசிக்க கற்றது
 • சங்கப்பாடல்களில் மதுரை
 • மதுரையில் சமணர் தடையங்கள்
 • சமணர் வாழ்வியல்
 • மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள சமணர் பள்ளிகள் – குறிப்பாக ஆனைமலை, மாங்குளம்,மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில்,  போன்ற இடங்கள்.
 • மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் கல்வெட்டுக்கள்
 • சமணர் கழுவேற்றம் பற்றிய தகவல்கள்
 • ஜேஷ்டா தேவி
 • பிலெடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ள மதுரை கோயில் மண்டபம்
 • இஸ்லாமிய படையெடுப்பில் நிகழ்ந்த கொடுமைகள்
 • வள்ளால மகாராஜாவுக்கு நிகழ்ந்த கொடுமை
இப்பேட்டியில் ஆலவாய் நூல் பற்றியும் இன்னூலை எழுத தாம் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார் திரு.நரசய்யா.
மதுரை தமிழகத்தின் முக்கிய கலாச்சார மையமாக பல நூற்றாண்டுகள் திகழ்ந்திருக்கின்றது. இந்நகரைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இந்தநூல் பெரிதும் உதவுகின்றது.
பேட்டியைக் கேட்க: {play}http://www.tamilheritage.org/kidangku/alavai/narasiah_alavai.mp3{/play}
குறிப்பு: ஆலவாய் பற்றிய மேலும் ஒரு மின் தமிழ் பதிவு இங்கே உள்ளது.
பேட்டி பதிவு: முனைவர்.க.சுபாஷிணி 10 ஜனவரி 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *