Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 3

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 3

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

2. ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு

இருபாலரும் இணைந்து விளையாடுகின்ற விளையாட்டு இது (8-14 வயது)
இரண்டு பேர் தங்கள் கைகளை உயர்த்தி சேர்த்துப் பிடித்து நின்று கொள்கின்றனர். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக பின்பக்கச் சட்டையைப் பிடித்துக்கொண்டு ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது’ எனப் பாடிக்கொண்டே இருவரையும் மாறிமாறிச் சுற்றி வருகின்றனர். ஒரு குடம், ரெண்டு குடம் என்று பாடிக் கொண்டே வந்து ‘பத்து குடம் தண்ணீ ஊத்தி பத்து பூ பூத்தது என்று கூறிய பிறகு ‘பத்தாவது வார குஞ்ச பட்டுனு புடிச்சுக்க’ என்று பாடி முடிக்கின்றனர். பாடலின் இறுதிவரி வருகின்றபோது கைகளுக்குள் அகப்படுகிற ஒருவரைப் பிடித்துக் கொள்கின்றனர். உடனே ஓடுபவர்களில் முதலாவதாக நிற்பவர் பிடித்துக்கொண்டிருப்பவர்களிடம் கீழ்க்கண்டவாறு உரையாடுகின்றார்.

ஓடுபவர் – ஏய்யா என் நெல்லத் திண்டுச்சு
பிடித்திருப்பவர்கள் – ஏன்யா என் நெல்லத் திண்டுச்சு
ஓடுபவர் – இந்தா நெல்லுக்கு நெல்லு

பின் ஓடுபவர்கள் அனைவருமாக வாவா சூத்தக்கா, போபோ சூத்தக்கா என்று பாடுகிறார்கள். பின் பிடித்துக் கொண்டிருக்கும் இருவரும் கைகளுக்குள் மாட்டியவரிடம்
பாய்சுத்து என்று கூற தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறார்.
புளியங்கா புடுங்கு என்று கூற புளியங்காய் பறிப்பது போல் பாவனை செய்கிறார்.
சோறாக்கு என்று கூற அவர்களிருவர் கைகளிலும் சோறாக்குவது போல் செய்கிறார். பிறகு ஒஞ் சோத்துல ஈ விழுந்துச்சா (அல்லது) எறும்பு விழுந்துச்சா? என்று கேட்டு எறும்பு விழுந்துச்சு என்று கூறுகிறார். பிறகு ஓம் முறைக்காரபேரு சொல்லு என்று கேட்டு அவர் கூறியவுடன் விட்டு விடுகிறார்கள்.

பிற

விளையாடியவர்கள் திருமண உறவுடைய முறைப்பெயர்கள்
அழகுராணி – ரமே~;
முத்துலட்சுமி – சின்னச்சாமி
லிங்கம்மாள் – பாண்டியன்
கண்ணன் – செல்லாயி
அழகுமயில் – ஆண்டிபட்டி
அழகு – சேரநசி
இவ்விளையாட்டு விளையாடுகின்றபோது விளையாடியவர்கள் தங்கள் திருமண உறவுடைய பெயர்களை எந்தவிதத் தயக்கமுமின்றிக் கூறினர். இதனைப் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

[பகுதி 4 க்குச் செல்க]

You may also like

Leave a Comment