தமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை   "பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய்,  அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."   என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.   ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.   ஆசிரியரால்Read More →

தமிழ் மணி: வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார் இடைமருதூர் கி.மஞ்சுளா     தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன்Read More →

தமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர் பொன்னீலன்   இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த ஒரு முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்Read More →

நுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை கவிஞர் மு.சு.சங்கர் இன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை.   திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாண்டு கல்வி பயின்றார். வயக்காட்டில் அமைந்த பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளி இடைவேளையின் போது ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும் அதிலுள்ள தலையங்கங்களை ஒருமுறை பார்த்தவுடன் பாராமற்Read More →

  உரைவேந்தர் ஔவை. துரைசாமி பி.தயாளன் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் கண்டெடுத்தல் இதுபோன்ற செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக் கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்;     விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம்பிள்ளை – சந்திரமதி தம்பதிக்குRead More →

  "தமிழ்மாமணி" க.வெள்ளைவாரணனார்   "பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்" எனக் கலைமாமணி க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார்.      குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப் புலப்படுத்தும் அகன்ற நீறு பூசிய நெற்றி, பார்ப்போரை ஈர்க்கும் புன்னகை தவழும் முகம், எளிய தூய வெண்ணிற உடை உடுத்திய மேனி இவ்வாறு விளங்கியவரே வெள்ளைவாரணனார் ஆவார். பயனில சொல்லாப் பண்பும்,Read More →