"நாடகக்கலைப் பிதாமகர்" பம்மல் சம்பந்த முதலியார் கலைமாமணி விக்கிரமன்   தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை.   முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது.   நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சிலRead More →

தேசத்தின் சொத்து ஜீவா கலைமாமணி விக்கிரமன்   வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.   நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.   பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.   ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.   அவர்கள் குல தெய்வம் அது.  Read More →

"பல்கலைச் செல்வர்" – கொத்தமங்கலம் சுப்பு கலைமாமணி விக்கிரமன் கொத்தமங்கலம் சுப்பு பிறவிக் கவிஞன்.   இரச பேதமும் இரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன்.   வாழ்க்கையை இன்பமும், இரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார்.   இந்தச் சிறுகதைகளை விலைமதிக்கRead More →

"கோதையர் திலகம்" வை.மு.கோதைநாயகி கலைமாமணி விக்கிரமன் "ஆணாதிக்கம்" என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை.பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம்.பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம்.   புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த வை.மு.கோதைநாயகி அம்மாள், என்.எஸ்.வேங்கடாச்சாரியார்Read More →

அறிஞர் பொ.திருகூடசுந்தரனார் கலைமாமணி விக்கிரமன்   இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டன.   தன்னலமற்ற நாட்டுப்பற்று மிக்க ஓர் அறிஞர், சென்னையில் புகழ்பெற்ற நூலகத்துக்குச் சில குறிப்புகள் எடுக்கச் செல்கிறார்.   கையிலே மடிக்கப்பட்ட குடை, இடுப்பில் கதர்வேட்டி, மேலே உடலை மறைக்கத் துண்டு. நுழைவாயிலில் நிறுத்தப்படுகிறார்.   வியப்படைந்த அந்த அறிஞர் காரணம் வினவ, "நாகரிகமாக" அவர் உடை அணியவில்லையாம்! மேலே உடலை மறைக்கத் துண்டு, நாலுமுழRead More →

  "மக்கள் எழுத்தாளர்" விந்தன் கலைமாமணி விக்கிரமன்   எழுத்துலகில் "விந்தன்" என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வேதாசலம் – ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.   அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம்.   சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார்.   சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும்Read More →

ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி! முனைவர். ப.சுப்பிரமணியன்   பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்; சுப்பிரமணிய பாரதியார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள்; பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம்Read More →

  எழுத்து வரிவடிவமும் திரிபுகளும் ச.பாலசுந்தரம்             இருதிணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களான் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களான் ஆக்கம் பெற்றதாகும். அது கொண்டு பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும். எழுத்துமொழிRead More →