"இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில், தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த் தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும். காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர்Read More →

செந்தமிழ்க் களஞ்சியம் "மே.வீ.வே."  டாக்டர் ப.சரவணன் "இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர். மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியைRead More →

அக்டோபர் 10 – நம்மைவிட்டு அகலாத தமிழ் விளக்கு – பேராசிரியப் பெருந்தகை மு.வ.!  சு. அனந்தராமன் "ஆசிரியர் வரதராசனாரை யான் நீண்டகாலமாக அறிவேன். அவரை யான் முதல் முதல் பார்த்த போது அவர் தம் மலர்ந்த விழியும், கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன,"என்று தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரால் புகழ்ந்து பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவர்தான் டாக்டர்.மு.வரதராசனார். மு.வரதராசனார் மு.வ. என்று அனைவராலும்Read More →

"வாழும் தமிழே"! –  முனைவர் ச.வே.சுப்பிரமணியன் கலாரசிகன் "வாழும் தமிழே" என்று அழைப்பதற்கான அனைத்துத் தகுதியும் பெற்ற தமிழர் யார் என்று என்னைக் கேட்டால், சற்றும் தயங்காமல் என்னிடமிருந்து வரும் பதில் "ஐயா" முனைவர் ச.வே.சுப்பிரமணியன்தான் என்பதாகத்தான் இருக்கும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெருமகனார், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வொழிவின்றி தமிழ்ப்பணியைத் தொடர்கிறார் என்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது.   தொல்காப்பியத்துக்கு தெளிவுரை எழுதிய கையோடு சங்கRead More →

அறிவுப் புதையல் அ.ச.ஞா! ஜெயநந்தனன்   தளர்ந்துபோய், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே கட்டிக்காத்து வந்த தமிழ், மீண்டும் தழைத்து வளர்ந்த காலம் 20ம் நூற்றாண்டு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு அந்த மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும், திருவாவடுதுறை ஆதீனம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம் போன்றவை ஆதரித்த தமிழறிஞர்களும், அந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தனர். நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும்,Read More →

நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார் முனைவர் ப.சுப்பிரமணியன்   சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் – தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார்.Read More →