"வாழும் தமிழே"! –  முனைவர் ச.வே.சுப்பிரமணியன் கலாரசிகன் "வாழும் தமிழே" என்று அழைப்பதற்கான அனைத்துத் தகுதியும் பெற்ற தமிழர் யார் என்று என்னைக் கேட்டால், சற்றும் தயங்காமல் என்னிடமிருந்து வரும் பதில் "ஐயா" முனைவர் ச.வே.சுப்பிரமணியன்தான் என்பதாகத்தான் இருக்கும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெருமகனார், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வொழிவின்றி தமிழ்ப்பணியைத் தொடர்கிறார் என்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது.   தொல்காப்பியத்துக்கு தெளிவுரை எழுதிய கையோடு சங்கRead More →

அறிவுப் புதையல் அ.ச.ஞா! ஜெயநந்தனன்   தளர்ந்துபோய், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே கட்டிக்காத்து வந்த தமிழ், மீண்டும் தழைத்து வளர்ந்த காலம் 20ம் நூற்றாண்டு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு அந்த மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும், திருவாவடுதுறை ஆதீனம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம் போன்றவை ஆதரித்த தமிழறிஞர்களும், அந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தனர். நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும்,Read More →

நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார் முனைவர் ப.சுப்பிரமணியன்   சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் – தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார்.Read More →

  பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முனைவர் மு.வள்ளியம்மை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.  Read More →

  மணியாரம் தினமணியில் அனைத்துலக மொழிகள் ஆண்டில் (2008), வாரந்தோறும் ஒலிக்கும் தமிழ்மணியில் கலைமணிகளான அறிஞர்கள் சிலர் எழுதிய கருத்து மணிகளை நம் நினைவில் சேர்த்து வைக்கும் ஒரு முயற்சியாகத் தான் இந்த முத்தாரம் – மணியாரம் அமைகிறது. கடலிலும், மலையிலும் கடுமையான முயற்சிகள் செய்த பிறகு கிடைக்கும் முத்துக்களும், மணிகளும் போலத்தான் இந்தச் செய்தித்தொகுப்பு அமைகிறது. வாசிப்பதற்கும், யோசிப்பதற்கும் வழிகாட்டும் கருத்துக்கள் இத்தொகுப்பில் பதிந்துள்ளன. தொலைவிலிருந்து பார்க்கும்போது மலையின்Read More →

  ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி!  முனைவர். ப.சுப்பிரமணியன்   பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்; சுப்பிரமணிய பாரதியார் பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள்; பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாராRead More →