Home Event THF Day Program

THF Day Program

by Dr.K.Subashini
0 comment

 

தமிழ் மரபு அறக்கட்டளை 8ஆம் ஆண்டு நிகழ்ச்சி பதிவுகள்:

 

வருகையாளர்கள் அறிமுகம்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/intro.mp3{/play}

 

நிகழ்ச்சி வரவேற்புரை,  மரபுச் செல்வர்கள் விருதளிப்பு

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/prog1.mp3{/play}

 

சிறப்புரை – பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/indra.mp3{/play}

 

எத்திராஜ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நித்யகல்யாணி

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/nithya.mp3{/play}

 

கடலோடி திரு.நரசய்யா – தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/narasiah.mp3{/play}

 

வாழ்த்துரை

முனைவர் நா.கண்ணன்:
{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/THF_vizha_nk.mp3{/play}
முனைவர்.க.சுபாஷிணி
{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/suba27082009.mp3{/play}

 

சிறப்புரை – பெ.சு.மணி

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/pesumani.mp3{/play}

 

பொன்னியின் செல்வன் குழுவினர் சிறப்பு விருந்தினர்களுக்கும் மரபுச் 

செல்வர் விருது பெறுவோருக்கும் சிறப்புச் செய்தல், டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்  – மின்னாக்கம் – செய்முறை விளக்கம்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/thiva.mp3{/play}

 

மின்னாக்கம் – கேள்வி பதில்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/qathiva.mp3{/play}

 

சிறப்புரை – திருப்பூர் கிருஷ்ணன்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/thiru.mp3{/play}

 

மின்பதிப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/final.mp3{/play}

 

வாழ்த்து – தமிழ்த்தேனீ

{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/thenee-msg.mp3{/play}


 

திரு. அண்ணாமலை சுகுமாரனின் விடுபட்ட உரை இங்கு:

 

தமிழ் மரபு அறக்கட்டளை  8  ஆம் ஆண்டு விழா   சென்னை   30/08/09

 

மின் செய்தி தயாரித்தல் —- ஏ சுகுமாரன்

பெரியோர்களே அன்பு நண்பர்களே ,
அனைவருக்கும் வணக்கம் .

தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
என நாமக்கல் கவிஞ்ர் புகழ்ச்சியாக பாடியுள்ளார்
ஒவ்வரு இனத்திற்கும் தனித்தனி குணமுண்டு

குணங்கள் அந்த  இனத்தின் பழக்க வழக்கங்களினால்  வருகிறது பழக்கவழக்கங்களை ,அந்த இனத்தின்  மரபுகள்  நிர்ணயிக்கின்றன
தங்கள்மரபுகளை ஒவ்வரு இனமும்  அவரவர் வழியில் மரபு செல்வங்களாக ,தொடர்ந்து வரும் தங்கள் சந்ததியினருக்கு முதுசெம்   ஆக விட்டு செல்கின்றனர்.  பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. நான்  கடந்த  ஒரு ஆண்டிற்கு  மேலாக மின் செய்தி மாலை என்ற பெயரிலே  , ஒரு செய்தி இழையை தொடர்ந்து  மின் தமிழ்  குழுமத்தில் எழுதிவருகிறேன்.

இங்கு வந்திருக்கும் பல புதிய பெரியவர்களுக்கும் ,நண்பர்களுக்கும்  அறிமுகம் செய்து   கொள்வதர்க்காகவே   இந்தத்தகவலை கூறுகிறேன் .

கடந்த ஓர்   ஆண்டிற்கு  மேல்   இதுதொடர்ந்து தடை படாமல்  வளர்ந்து வருகிறது.
சுமார்  20- 30  நாட்கள் தான் இதுவரை  மொத்தத்தில் விட்டுப்போகிருக்கிறது .
எனஇதை தொடர்ந்து படித்து அவ்வப்போது ஆலோசனைகூறிவரும் திரு தேவ் போன்றோர் கூறுகின்றனர். இதை    தொடர்ந்து   வாசிக்கும்   வாசகர்கள்  உண்டு .
இதை தொடாமல் போகும் பல பெரியவர்களும் உண்டு. ஆனாலும் நான் இதை தொடர்ந்து செய்துவருவதற்கு சில காரணங்களும் உண்டு ..

பொதுவாக
உங்கள் நண்பர்களைக் கூறுங்கள் உங்களைப்பற்றி கூறுகிறேன் என்று கூறுவார்கள்

வேறுவிதத்தில் கூறினால் உங்களுக்கு பிடித்த நடிகரைக்கூறினால் உங்களை கூறாலாம் எனகூறுவோரும்  உண்டு . சிவாஜி ரசிகர்களையும் ,எம்ஜியார் ரசிகர்களையும் இன்றும் இனம் பிரித்து கண்டுபிடித்து  விடலாம்
அவர்கள் வாழ்வில் கண்ட வெற்றி தோல்விகளுக்கு அவர்கள்  சித்த ,அவர்களை கவர்ந்த நடிகர்களும் நிச்சயம் ஒரு  காரணம்  ஆவார்கள்  அவ்வாறே நீங்கள் படிக்கும் பத்திரிக்கையைக் கொண்டும் உங்களை  இனம் பிரித்துவிடலாம் .
அன்றைய தினமணியின் ,எ என் சிவராமனின் கணக்கன் கட்டுரை என்ற  பொருளாதாரக் கட்டுரைகள் அரைக்குறை பாமரன்  என்ற பெயரில் வந்த விஞான கட்டுரைகல்லால்  விஞானியானவர்கள் இந்தக்கூட்டத்தில் நிச்சயம் இருப்பார் .

அவ்வாறே வேறு சில பத்திரிக்கைகளால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ,
கலாச்சார மாற்றம் முதலியன  நமது  காலத்திலேயே சாத்தியம் ஆகயுள்ளது .
இவை சரித்திரம் கூறும் உண்மைகள் , கடந்த  50  ஆண்டுகளாக நமது மனதிற்கு இடப்பட்டது வரும்  input  கள் தாம்  காணும்இன்றைய வளரும் சமுதாயம்  .
நிச்சயமாக தினமணி படிப்போர் ஒருவகை ,தினமலர் படிப்போர் ஒருவகை தினத்தந்தி படிப்போர் வகை .

HINDU  படிப்போர் குணம் வேறு ,  EXPRESS  படிப்போர் குணம் வேறு தான் !
நமது பத்திரிக்கைகள் அவர்களது வாசகர்களை வேறு எங்கும் தாவி விடாமல்
,தன்னிடமே தக்கவைத்துக்கொள்ள பல போராட்டங்களை டத்துகிறது .அதற்காக அதன் வாசகர்களின் ரசனை மாறிவிடக்கூடாதே ,தப்பித்தவறி  மேம்பட்டுவிடக்கூடாதே என பெரும் கவலை கொண்டு உழைத்து வருகின்றனன் .

இவ்வாறு வளரும் சமுதாயத்தைச் அவர்கள் படிக்கும் பத்திரிக்கையைக் கொண்டு ரகம் பிரிக்கலாம் .இதைக்கொண்டு அவர்களின் குணம் ,எதிர்காலம் எவ்வர்று இருக்கும் எனவும் ஓரளவு நிச்சயிக்கலாம் .

இது ஜோஷியம் சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் !

என்ன செய்தி தாள் படிக்கிறீர்கள் என்று சொன்னால் ,உங்கள் வருகாலத்தைப்
பற்றி  நானே கூறிக்விடுவேன் நிச்சயம்  10  வரி கூறலாம் . மின் தமிழ் என்பது ஒரு குழு ,    குழு எனும் போதே ஓரளவு ஒத்தக்கருத்துடயவர்களின் கும்பல் என்றுதான் பொருள் .குழுவுக்கு ஒரு ஒத்த கருத்து குறிக்கோள் இருக்கும் .உறுப்பினர்களில் கருத்தும் ,குழுவின் கருத்தும் ஒத்து[போவதாலேத்தான் ,இந்தக்குழுவில் இணைகின்றனர் .

நமது குழு மின் தமிழ் .இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு அங்கம் .
பெயரிலேயே தெரியும் மரபுகளை   காப்பத்து தான் நமது பணி ..

மரபு என்பது வழிவழி வரும் சிறந்த பண்புகளில் தொகுப்பு . மரபுகளே  பழக்கவழக்கமாக உருவாகிறது . தமிழர் மரபு தான் தமிழர் பழக்க வழக்கமாக மாறுகிறது . நன்றி கூறும் நிகழ்ச்சிகளே  நாம் கொண்டாடும்  நமது பெரும்பாலான திருவிழாக்கள் . நாம்  சாப்பிடுவதில் கூட பெரும் மரபு  வழி கொண்டவர்கள் . நமதுமரபுவழி சாப்பிட்டால் பறவைக்கும் , மிருகங்களுக்கும்
வரும் வியாதிகளுக்கு நாம் மருந்து கண்டுபிடிக்க அலைய வேண்டி வராது .
பன்றிக்கய்ச்சளுக்கு மருந்து ,பன்றிகளின் பழக்கவழக்கத்தை கூர்ந்துகவனித்தால்  தெரிந்து விடும் .அந்த வியாதியை தீர்த்து கொள்ளும் வழியை நமக்கு மின்பே பிறந்து விட்ட பன்றிகள் இதுவரை காணாமலா இருக்கும் ?.

அவை இந்த நோய் வந்ததும் அதை போக்கும் வழி தெரிந்து இயற்க்கை முறையிலேயே போக்கிக் கொள்ளும் .

பூனை வணங்கி  என்று ஒருமூலிகை உண்டு, பூனை எலி முததலியவைகை
வேட்டையாடி கொன்று உண்ட பிறகு ,விஷ உணவு நோய் ,அதன் விஷத்தின்
பாதிப்பில் இருந்து விடுபட உடனே ஓடி ஒரு மூலிகையை தின்னும்
அந்த பூனை வணங்கி  என்பதுவேறு ஒன்றும் அல்ல அது நமது குப்பை மேனிதான்  அதற்குதான் பூனை வணங்கி என்று பெயர்.

வழிவழி வரும்   மரபு அறிவுதான் ,அந்த பூனைக்கு  அந்தஞானத்தை தருகிறது
நாம் தான் அந்த நோய் வந்ததும்அதை தாள முடிய ாமல்  தவித்து மாண்டு விடுகிறோம்  .பன்றிகாய்க்க்சளால் மாண்டு போகும் பன்றியப் பற்றி கேள்விப்பட்டுருக்கீர்களா  ? ஆனால் மனிதர்கள்  தான் மரபுகளை மறந்த்துவிட்டு ,
வழிவழிவரும் அனுபவ ஞானமாக மரபு தவறி சென்று புதிய புதிய
சிக்கலிலே மாட்டிகொள்கிறோம் .

நடந்து நடந்து தேய்ந்த பாதையே சென்றால் நடப்பதில் சிக்கல் வராது .ஆனால்
புதிய பாதையில் போகும் போதுதான்   புதிய பல அறிவு வருகிறது .ஆனால் இவை இரண்டும் சீரான விகித்தில் கலந்து இருக்கவேண்டும் .

மரபு மீறினாலும் சிக்கல் , முழுவதும் மரபு வழியில் இருந்தாலும் புதிய அறிவு வளர்ச்சி இராது . நமது தமிழகத்திற்கு என்று தனியே மரபு உண்டு!
அவை வாழும் நிலத்தில் ,தமிழர் வழிவழியாக வாழ்ந்த போது கிடைத்த அனுபவ ஞானத்தை அவர்களுக்கு பின் வரும் சமுதாயத்திற்காக பழக்கவழக்கங்களை ஒருமரபாக மாற்றி செல்வங்களாக விட்டுசென்றுள்ளனர்
ஒவ்வரு நிலப்பரப்பிற்கும் ஒருமரபு உண்டு.

நான்கு வகை நிலப்பரப்பு நமக்கு உண்டு
முல்லைக்கு ஒரு மரபு.
மருதத்திற்கு  ஒரு மரபு.
நெய்தலுக்கு ஒரு மரபு.
பாலைக்கு ஒரு மரபு.

நெய்தலில் வாழும்மீனவருக்கு தெரியும் கடல் பற்றிய அறிவும் அதன் மர்மங்களும் , கடலில் செல்லும் மன உறுத்யும் , பாலையில் வாழும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை  அதன்அதன் மரபு அறிவைப் பற்றி அறிய அங்கேதான் செல்லவேண்டும் நமது தமிழ் மரபு அறக்கட்டளை மரபுகளின் ஞானத்தை ,அதன் செல்வங்களை சேர்த்து வைகும்.   ஒரு சீரிய பெட்டகம்
மரபு செல்வம் எங்கிருந்தாலும்  அதை  பாதுகாத்து அதை அடுத்த ,வரும் சந்ததியனருக்கு சேர்த்து வைப்பது தான் நமது  குறிக்கோளாக கொண்டுள்ளோம் .

அனைத்து தமிழர் மரபும் இங்கே சேர்க்கப்படுகிறது. இதில் கடந்த கால மரபு செல்வங்களை ,அவை புத்தக வடிவில் உள்ளதையும் ,இன்னும் பதிப்பாத ஏடு வடிவில் உள்ளவைகளையும் தேடித்தேடி நாம் சேர்த்து வருகிறோம் .
அது குறித்து அறிஞர் கூறும் கருத்துக்களை சேர்த்து வருகிறோம்
.இவை அனைத்து கடந்த காலத்தை சேர்ந்தவை ,நமது முனோர் நமக்கு விட்டுச்சென்ற நமது செல்வங்கள் . ஆனால் நம்மைச் சுற்றி நாளும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து வருகிறது .எப்படி கடல் அலைகளுக்கும் நாம் விடும் மூச்சுக்கும் ஓய்வில்லையோ
அப்படியே ஒவ்வரு கணமும் செய்திகள் நம்மைச் சுற்றி உருவாகின்றன .
இன்றைய செயல்கள் ,நிகழ்வுகள் இன்னும் நூறு ஆண்டுகள் சென்று
நமது மரபு செல்வங்களாக ,நமது மரபு சரித்திரங்களாக பதிவு
செய்யப்படப்போகிறது . இன்றைய செய்திகளே நாளைய வரலாறு என்பார்கள்
செய்திகள் என்பது இன்றைய நிகழ்வுகள்
வரலாறு என்பது நேற்றைய செய்திகள்
செய்திகளுக்கு  முடிவே கிடையாது ,
மனிதன் என்னும் இனம் இருக்கும் வரை ஏதாவது நிகழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கும் .

இவை முடிவில்லாத சிந்துபாத கதை  நடை பெறும் அனைத்தும் செய்தி ஆகிவிடுமா ?

செய்தி என்பது புதியதாக இருக்கவேண்டும்
அது நடந்திருக்கவேண்டும்
News is what is new;   AND  it’s what’s happening.
காலை எழுந்தேன் காலை கடன்களை முடித்தேன் என்றால் அது நிகழ்வு !
காலையில் எழுந்தேன் காலைகடன்களை முடிக்கவில்லை என்றால் அது செய்தி. அதைத் தான் சொல்லமுடியும்
சார்  ! காலையில் இருந்து சரியாக இல்லை , என கூறமுடியும் .
எனவே பிறருடன் பகிர்த்து கொள்ளக்கூடிய ,வித்தியாசமான
நிகழ்வுகள் செய்திகள் எனக்கொள்ளலாம் ..
ஆனால் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் அறிந்து கொள்ளவேண்டுமா ?

வயற்றுக்கு தீனியை அளந்து , சுத்தமாக சுவையாக அக்கறையுடன் இடுவது போல் ,  மனத்திற்கும் இடும் தீனியில் சற்று கவனம் வேண்டாமா ?
காலையில் எழுந்ததும் கண்ட கண்ட விதமான செய்திகளால் ,நம் மனதை
நிரப்பினால் அன்று முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளும் அதை ஒட்டித்தானே
நடை பெறும் .

காலையில் படித்த செய்தியின் பாதிப்பு நாம் செய்யும் செயல்களில் நிச்சயம் இருக்கும் பண்டைய நாட்களில் செய்தியை வெளியிடும் உரிமை ஆளும் மன்னருக்கே  இருந்தது.

நடை பெறும் நிகழ்வுகளை  மன்னர்  விரும்பிய  வண்ணம் வெளிப்படுத்திய செய்திகளே ,அன்றைய கல்வெட்டுகள் .

அவ்வப்போது ஆண்ட அரசர்கள் அவர்கள் பெற்ற வெற்றிகளையும் ,தந்த கொடையையும் , பலரும்  வந்து போகும் அந்த நாளைய  COMMUNIITY CENTRE ஆன ஆலயங்களில் கல்வெட்டுகளாக செய்து பலரும் படிக்க செய்தனர் .
பிறகு அவைகளே சரித்திர குறிப்பு ஆக விளங்கப்போகிறது என்பது அவர்கள்
எதிர்பாராதது . சினாவில் சீன நெடுன்சுவரில்  செய்திகளை எழுதி வைக்கும் வழக்கம் இருந்து வந்தது .

ஆனந்த ரங்கம் பிள்ளையில் நாட்க்குறிப்பு கூட அன்றன்றைய நிகழ்வுகளை எழுதிய குறிப்புதான் .ஆனால் அவையே அந்த நாளைய செய்திகளை கூறும் மரபு செல்வங்களாக மாறிவிட்டது மேலும் பிற்காலத்தில்  சென்ற  நூற்றாண்டில் , செய்திகள் சிந்துபாடுதல் என்ற பெயரில்., தேசிங்கு ராஜன் கதை   ,அரியலூர் ரயில்விபத்து சிந்து  சென்னை  ஹை   கோர்ட் சிந்து என்றபெயரில் ,மற்றும்பல சிந்து இயற்றப்பட்டு  நாடுமுழுவதும் பரவி இருந்தன .

மன்னர்களின் வீரத்தை  தீரத்தை போற்றி நாடங்களும்  கூத்தும்  நடத்தப்பட்டன
மக்களின்  மறக்கமுடியாத சோகத்தைப் பற்றி பழையனூர் நீலி நல்லத்தங்காள்
போன்ற மக்களின் உணர்வு வெளிப்பாடும் நாடங்களாக ,தெருக்கூதுகளாக
செய்தி வெளியீடாக வந்ததுவே எனவே  இன்றைய  நிகழ்வுகளைப்  பற்றிய செய்திகள் என்பது வருங்காலத்தில் வரலாறு என அழைக்கப் படலாம் ,
அவைகளில் சில மரபு செல்வங்கள் என போற்றி    , மரபு செய்திகள்  என்ற பெயரில் பிற்காலத்தில் சேமிக்கப்படலாம்.

எனவே செல்வங்களைக்காப்பதர்க்காக ஏற்ப்பட்ட தமிழ மரபு அறக்கட்டளையின் அங்கமாக மின்தமிழ் மடலாடல் குழுவில் ,அந்த குழுவின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒரு செய்தித் தொகுப்பு இருப்பது அவசியமானாதாகிறது

நிச்சயமாக அந்த செய்திமரபுகளைவளர்ப்பதாக , மரபுகளை ஒட்டியச்செய்திகளாக , மரபுகளுக்கு எதிர்ப்பான செய்திகளாக இராமல் இருக்கவேண்டும் ஒவ்வரு  நல்லசெய்ய்தியாலருக்கும் சில சுய கட்டுப்பாடு கள் தேவை அவர்களுக்குஒரு கொள்கைபிடிப்புதேவை நல்ல செய்தியாளர்   கடை பிடிக்டிக்கவேண்டிய  .விதி சில

• Journalism’s first obligation is to the truth.
• Its first loyalty is to citizens.
• Its essence is a discipline of verification.
• Its practitioners must maintain an independence from those they cover.
• Journalism must serve as an independent monitor of power.
• It must provide a forum for public criticism and compromise.
• It must strive to make the significant interesting and relevant.
• It must keep the news comprehensive and proportional.
• Its practitioners must be allowed to exercise their personal conscience.
எனவே மின்   செய்தி மாலை ஒவ்வருநாளும் நமது மரபுகளை சிதைக்காத ,மனதிற்கு மாசு   பரவ விடாதா செய்திகளாக  உலக செய்தி ,தேசியசெய்தி , நம்ம ஊர் செய்தி ,நமது மரபு அறிவி தரும் ஆரோகிய வழி ,  வணிக வளர்ச்சிபற்றிய செய்தி பொருளாதார செய்தி   மனதிற்கு வளர்சியளிக்கும்  மரபு  செல்வங்களாக விளங்கும் ஒரு ஆலயம் பற்றிய செய்தி . இவைகளை பல இடங்களில்  இருந்து சேகரித்து ,அழகுற வடிவமைத்து சில சமயங்களில் புகைப்படங்களுடன் தரப்பாடுகிறது .

செய்திகளின் நம்பக தன்மைக்காகவும் ,மூலம் வேண்டியும் பிற பத்திரிக்கைகளில் வருபவை எடுத்தாளப் படுகிறது .
அதே சமயம் தலைப்புகள் மட்டும் புதியவை .
உள்ளடக்கமும்  சிறிய மாறுதளுக்குட்படுவதுண்டு .
கோயில்களின் விபரங்களும் பல வலை தளங்களில் இருந்து சிறந்தவை தெரிந்தெடுத்து வெளியிடப்படுகிறது .
தினமும் செய்திகளுக்காக  , நாமே போய் நேரே  சென்று  செய்தி  சேகரித்து படம் எடுத்து எழுத நமக்குதற்ப்போது  .இயலாது .எனவே  பிறப்பத்திரிக்கைகளில்
வரும் செய்திகளை கவனமுடன் தெரிவு செய்து,சிறந்த முறையில் சிரத்தையுடன் வெளிவர ஆவன செய்கிறோம்.

ஆனால் இதை தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று
எழுதும் ஆர்வமும் எண்ணமும் உண்டு .இறைவன் சித்தன் அருள் இருப்பின் அதுவும் நடைபெறும் .

இது ஒரு நீண்ட இழையாக ஒரே பெயருடன்  விளங்கிவருகிறது .
விரைவில் அது ஒரு சாதனை  கூடஆகலாம் .

இந்த செய்தி மாலை தயாரிப்பதற்காக நான் காலை  6  மணிக்கு முன் தவறாமல் எழுகிறேன் .தொடர்ந்து வேலை செய்து  8 மணிக்கு முன் செய்தி மாலை வெளிவருகிறது .  எனக்கு   காலையில்இரண்டு மணி நேர வேலை  தினமும் . இதனால காலையில் செல்லும் கடறக்கரை உலா கூடுவதில்லை .எனினும்  இதில் நான் ஒரு இன்பம  காண்கிறேன் .
இனிய மரபு சார்ந்த செய்திளை வாசித்து காலைப் பொழுதை ,
இன்பமுடன் பலர் ஆரமிக்க நான் உதவியாக இருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசம் .

நாளைய வரலாறுக்கு ஒரு சேமிப்பு மின் செய்தி மாலை வழியே தயார் ஆக்கி வருகிறது .anti online என்பது தான் இது வரை நீண்ட இழை  கொண்ட  தொடர்  என  GOOGLE தெரிவிக்கிறது அது இதுவரை  1000 இழைகளை தாண்டிவிட்டது .
எனது இந்த இழை 500 தாண்டிவிட்டது   ,அனேகமாக  தமிழில்  நீண்ட இழை
இதை-  வெள்யிட வாய்ப்பு அளித்து வரும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு
இந்தத் தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன் .
இந்த அறிஞர்கள் கூடும் பெறும் சபையில் எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்கு
மீண்டும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன் .

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்த சித்தன் ,தேவ் ,இன்னம்பூரன் ஐயா அவர்கள் போன்றோருக்கும் எனது நன்றி .
இந்த விழாவிலே மரபு செல்வர் என விருது பெறும் உயர்திரு நரசையா அவர்களுக்கும் , முனைவர் நா .கணேசன் அவர்களுக்கும் ,
திவாகர் அவர்களுக்கும் எனது பாராட்டையும் ,பணிவான வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

இதுவரை பொறுமை காத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.
வணக்கம் .

You may also like

Leave a Comment