Home Event THF DAy News

THF DAy News

by Dr.K.Subashini
0 comment

மின்தமிழ் <
[email protected]>
date Thu, Aug 27, 2009 at 12:05 AM
தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப் பயணம் 8 ஆண்டுகளைக் கடந்து 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இது சிறப்பு மிக்க ஒரு நாள் அல்லவா? இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில மின்பதிப்புக்கள் இதோ..!
அ. தமிழ் மரபு அறக்கட்டளை செய்தி
முனைவர் நா.கண்ணன்:
{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/THF_vizha_nk.mp3{/play}
முனைவர்.க.சுபாஷிணி
{play}http://www.tamilheritage.org/kidangku/thfday/suba27082009.mp3{/play}
ஆ.ஒலிப்பதிவுகள்:
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை நிகழ்வுகள்:
பாகம் 1  :
{play}http://www.tamilheritage.org/kidangku/psday/psp1.mp3{/play}
பாகம் 2 :
{play}http://www.tamilheritage.org/kidangku/psday/psp2.mp3{/play}
ஒலிப்பதிவு செய்து மின்பதிப்பாக்கத்திற்காக வழங்கியவர் திரு.சந்திரசேகரன்.
இ.மின்னூல்கள்
1.
நூலின் பெயர்: பாஞ்சால  வீரன் பாதர் வெள்ளை சண்டை – கட்டபொம்மு கதை
நூல் ஆசிரியர்: டி.ஆர்.பாலகிருஷ்ண முதலியார்
வெளியீடு : கலைமகள் அச்சகம், காலாடிப்பேட்டை சென்னை
(நூல் எண்: 86)

மின்பதிப்பாக்கம் செய்தவர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்)

நூல் படி வழங்குநர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்)
2.
நூலின் பெயர்: விவேக சிந்தாமணி  மூலமும்
நூல் ஆசிரியர்: கிருஷ்ணசாமி முதலியார்
வெளியீடு : வித்பவசிரோன்மணி விலா

வெளியிடப்பட்ட ஆண்டு :1914
(நூல் எண்: 86)

பாக்கம் செய்தவர்: திரு. கிருஷ்ணமாச்சாரி (தமிழ்தேனீ)

நூல் படி வழங்குநர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்)
3.
நூலின் பெயர்: தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
நூல் ஆசிரியர்: திரு.வி.க
வெளியீடு : பாரி நிலையம், சென்னை

(நூல் எண்: 87)

மின்னாக்கம் செய்தவர்: முனைவர்.க.சுபாஷிணி

நூல் படி வழங்குநர்: முனைவர்.க.சுபாஷிணி
இந்தத் திருநாளை சிறப்பிக்கும் கட்டுரை கதைகள், கதைதகளை, செய்திகளை  நீங்கள் இன்று வழங்கலாம்.  அனைவரும்ந்த்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Narayanan Kannan <[email protected]>
to  [email protected]
date  Aug 27, 2009 3:58 AM
மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மரபுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
வழக்குகள் என்பவை நாம் உருவாக்குவதே!
தமிழ் அன்பகலா டாக்டர் கண்ணன் நடராஜன் தமிழ் மரபு அறக்கட்டளை உருவான நாளை “தமிழ் மரபுப் பெருநாள்” எனக் கொண்டாட மின்மடலிட்டார்.
மின்தமிழ் அன்பர்களுக்கு அது உவப்பாக இருந்ததால் இன்றிலிருந்து ஒரு புதிய
வழக்கு (சம்பிரதாயம்) உருவாகிறது. எமது 8வது ஆண்டு நிறைவு விழாவை சென்னை மரபுச்செல்வங்கள் வருகின்ற ஞாயிறு அன்று நடத்த உள்ளனர்.
நம் வலைக்குரு (webmaster) சுபா சொல்லியபடி இன்றிலிருந்து ஞாயிறு வரை
இடைப்பட்ட நாளில் தமிழ் மரபு காப்பிற்கு நாம் நம்மால் முடிந்த அளவு என்ன
செய்கிறோம் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுதுளிதானே பேராற்று
வெள்ளம். உங்கள் சிறு, சிறு செய்கைகளைக் கூட மின் தமிழ் மதிக்கிறது.
சரஸ்வதி பூஜை என்பது வேறு என்ன?
இவ்வாண்டு தொடக்கம் தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ் வளம் மின்னுலகில் நிலைபெற உதவும் தமிழர்களை இனம் கண்டு கௌரவிக்க உள்ளது. அவ்வகையில் மூவர் இவ்வாண்டில் சிறப்புப் பெருகின்றனர்.
1. தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் ‘கடலோடி’ நரசய்யா
பெரும்பாலும்வயது ஆகும் போது சக்தி குறையும் என்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதற்கு எதிர்மாறு 😉 நான் முதலில் இவரை சந்தித்த போது கணினி மூலம் தமிழை எவ்வளவு சிக்கலான முறையில் தட்டச்சு செய்யமுடியுமோ அவ்வளவு சிக்கலான முறையில், ஆனால் வெகு லகுவாகச் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்ப்பின் மூலகுறியீட்டு முறையில் (பைனரி) அந்த எண்ணை மின்னேற்றம் செய்து கொண்டிருந்தார். அசந்துவிட்டேன். இந்த வயதில் தவழும் பிள்ளை போல் அவர் மின்னுலகில் தளிர் நடை பயில்வது மகிழ்வாக உள்ளது. உண்மையில் நரசய்யாவை வயதானவர் என்று சொல்லக்கூடாது, அவர் மாமா, சிட்டி சுந்தர ராஜன், 90 வயது. அவரை மின்னுலகப் பிரவேசம் செய்ய வைத்திருக்கிறார் பாருங்கள். அது சரித்திரம். சிட்டியாரின் முதல் வலைப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்று நடத்தியது மிக மகிழ்வான செயல். அன்னாரின் உதவியுடன் தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் (1875) வலையேறி இருக்கிறது.
சிட்டி மாமாவை நான் கடைசியில் சென்னையில் பார்த்த போது ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விஜாரித்தார்.
அதற்குப்பெயர்தான் தமிழ் அக்கறை என்பது! இந்த அக்கறை 90+ பெரியவருக்கு
இருந்தது. அது நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்.
Chitti recollects – http://chitti.blogspot.com/
ஆதியூர் அவதானி சரிதம் (1875) – தமிழின் முதல் புதினம் (நாவல்) –
http://bharani.dli.ernet.in/thf/text/etext/etext.html
அது மட்டுமில்லை, நரசய்யா எனது களப்பணியில் என்னுடன் துணை நின்றார்.
உ.வே.சா நூலகத்தொடர்பை உருவாக்கி (நன்றி ஆண்டோ பீட்டர்)  உதவினார். அதன் பின் தொடர்ந்து எம் மரபுக்காப்பிற்கு உதவி வருகிறார். இ-சுவடி
மட்டுறுத்தர்களுள் ஒருவர். மின்தமிழ் ஆர்வலர். இவருக்கு ‘மரபுச் செல்வர்’
எனும் பட்டமளிக்கிறோம். ஞாயிறன்று நடைபெறும் விழாவில் அவர்
கௌரவிக்கப்படுவார்.
2. டெக்சாஸ் முனைவர் நா.கணேசன்!
மின்தமிழ் (மின்னுலகம்) நன்கறிந்த தமிழ் அறிஞர். மின்னுலகம் உருவாகி,
அதில் தமிழ் நிலை பெற்ற காலத்திலேயே காலூன்றி தமிழ்ச் சேவை செய்து
வருபவர். தமிழ் ஒருங்குறி கட்டமைப்பில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்துடன்
இணைந்து 90களிலேயே தமிழ் மின்னுலகில் நிலைபெற ராஜபாட்டை போட்டவர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகத்தை
வைத்திருப்பவர். பல அரிய சேகரங்கள் இவரிடமுண்டு, 10,000 மேல்!
தமிழ் மரபு அறக்கட்டளை உருவான காலத்திலிருந்து எம்முடன் துணை நிற்பவர்.
இப்போது நம்மையெல்லாம் இணைக்கும் வலைப்பதிவு மன்றம் ‘தமிழ்மணம்’
நிர்வாகஸ்தர்களில் ஒருவர். பல்பரிமாண பொறியியல் வல்லுநர் அவர். அவர்
நம்முடன் துணை நிற்பது நமக்கு பலம். இப்பெரியவரையும் 30 தேதி ‘மரபுச்
செல்வர்’ பட்டமளித்து கௌரவிக்க உள்ளோம்.
3. ‘விஜயவாடா’ திவாகர்.
மின்தமிழ் அன்பர்கள் அறிந்த பெயர். தமிழ் மரபின் கூறுகளை புதினமாக்கி இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ் வரலாற்றுச் சிற்பி. மின்தமிழின் பரந்துபட்ட மின்னாக்க நோக்கை முதலிலேயே இனம் கண்டு, சிற்பக்கலை ஆர்வமுள்ள சிங்கப்பூர் விஜய் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆர்வலர் பேரவையுடனான நமது உறவை பலப்படுத்துபவர். மின்னாடற்குழுக்களுக்குள் பாலமைக்கும் வல்லுநர். நம் திவாகரை, ‘மரபுச் செல்வர்’ எனச் செல்லமாக அழைக்கிறோம். தமிழகத்தின் அயலகச் சூழலில் தமிழ் காப்பது அரிதான செயல்.
விஜயவாடாவில் தமிழ் மன்றம் காத்து, நம்மாவாழ்வாருக்கு விழாவெடுத்து
தமிழ்ப்பணி ஆற்றுகிறார். இவரது அனுபவமும், உந்துதலும் த.ம.அக்கு வளம்
சேர்க்கும்.
இன்னும் வரும்…

Narayanan Kannan <[email protected]>
to  [email protected]

date  Aug 27, 2009 12:55 PM

 

இன்னும் சில சிந்தனைகள்….

 

ஏன் இத்தனை வருடம் சும்மா இருந்துவிட்டு இப்போது விழா? கேட்கலாம்!

எங்க ஊரிலே தேர் இருக்கும். சும்மாவே கிடக்கும். திடீர்ன்னு ஒரு வருஷம்
ஊர் சேர்ந்து தேர் இழுக்க ஏற்பாடு செய்வார்கள். அப்போது எல்லோருக்கும்
குஷி. எல்லோருக்கும் பங்கேற்க முடிகிறது. ஏதோ சேர்ந்து செய்தோம் எனும் மன நிறைவு.

 

அது போல் தான் இதுவும். ஏதோ இத்தனை நாள் நாங்கள் பாட்டுக்கு ஏதோ செய்து கொண்டு இருந்தோம். இவ்வருடம் `நீங்கள்` விழாவெடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள். பாருங்கள் இப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சி.

 

இது வாணி தொழில் அல்லவோ. எனவே எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணும் போது ஒரு புதிய உற்சாகம், உத்வேகம்.

 

முதுசொம் என்றால் என்ன?

 

பரனூர் பெரியவர் ஒரு கதை சொல்லுவார். சிறு குடிசை. இவன் கட்டிய
குடிசைக்குக் கீழ் இவன் மூதாதையர் சேர்ந்து வைத்த சொத்து எல்லாம்
புதையுண்டு கிடக்கிறது. அந்த பொக்கிஷத்திற்கு மேல் இவன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு தரித்திரனாய் பரிதவிக்கின்றான். இவன் செய்ய வேண்டியது எல்லாம் மண்ணைத் தோண்டி பொன்னை எடுக்க வேண்டியதுதான்!

நம் பொக்கிஷம் நம் முன்னோர் பன்னெடும் காலமாய் சேர்த்து வைத்திருக்கும்
அறிவு, அனுபவம், கலை. ஆனால், அது கவனிப்பாரற்று நம் மண்ணிலேயே புதையுண்டு கிடக்கிறது. அந்த முதுசொம் நாம் கண்டு கொண்டால் நாம் வளமானோர்!

 

பூமிக்குக் கீழே சொத்து இருக்குன்னு யாராவது காட்டணும்ல்ல?

 

அதைத்தான் இத்தனை நாள் தமிழ் மரபு அறக்கட்டளை செய்து வருகிறது. The
single most important contribution of Tamil Heritage Foundation is the creation of this awareness!

 

இப்போது எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. வாழ்த்துக்கள். அதற்கெல்லாம்
விதை போட்டவர்கள் நாங்கள். பசுமையாய் நினைவிருக்கிறது. சிங்கப்பூர் இணைய நாடு. அடுத்த வருடம் மலேசியா யோசித்துக் கொண்டிருக்கிறது. நான் ஓலைச் சுவடிகளின் அழகிய படங்களை வருடி ஒரு poster செய்திருந்தேன். அந்த மாநாட்டில் பேசும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஒரு பொழுதில் முரசு முத்து நெடுமாறன், அவர்கள் அமைச்சர் டத்தொஸ்ரீ சாமிவேலுவுடன் என் poster காண அழைத்து வருகிறார். அப்போதுதான் நான் டத்தோவிற்கு அறிமுகமாகிறேன்.  சில நிமிடங்கள்தான். (கோலாலம்பூரில் பின் என்ன நடந்தது என்று சொல்லிவிட்டேன்)

 

சிங்கப்பூர் மாநாட்டில் எனது பாசுர மடல்களுக்காக கவனம் பெற்றேன். சிங்கை
பழனி `பாசுரமடல்` கண்ணன் என்றுதான் என்னை அறிமுகப்படுத்தினார். அது மாலை நேர நிகழ்வில்.

 

அப்போதெல்லாம் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து பாதுகாக்க முடியும்
என்று யாருக்கும் தெரியாது. அது பற்றி நாம் தொடர்ந்து பேசினோம். எல்லா
மாநாடுகளிலும் பேசினோம்.

 

சான்பிரான்ஸ்ஸிகோ மாநாட்டில் ஜியார்க் ஹார்ட் வானாரப்புகழ்ந்தார்.

 

சென்னை தமிழினி 2000 மாநாட்டில் இணையமும், இலக்கியமும் எனும் ஒரு
அமர்வையே எனக்காகத் தந்தனர். எங்களுக்கோர் புதிய உலகைக் காட்டினீர்கள்
கண்ணன்! என்ற சுந்தர ராமசாமி என் கையைப் பிடித்து உலுக்கினார்.

 

கணையாழி ஜெகந்நாதன் கையோடு என்னை அழைத்துப் போய் ஐராவதம் மகாதேவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

சுஜாதா, சென்னை இலக்கியச் சிந்தனை வட்டத்தில் என்னைப் பேசச்சொன்னார்.
அப்போதுதான் திருப்பூர் கிருஷ்ணன் போன்ற பல இலக்கியத் தொடர்பு எனக்குக்
கிடைத்தது.

 

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் அமைந்தது டாக்டர் அப்துல் கலாமை சந்தித்து முதுசொம் பாதுகாப்பு பற்றி எடுத்துச் சொன்னது! நானும் சுபாவும் சில மணி நேரங்கள் அவருக்கு எல்லாவற்றையும் காட்டி எடுத்துச் சொன்னோம். அதன் பலன்? ஐயா டெல்லி போனவுடன் உடனே ஓலைச்சுவடி பாதுகாப்பை அமுல் படுத்தினார். இந்தியாவெங்கும் விழிப்புணர்வு பரவியது!

 

எட்டுத்திக்கும் இச்சேதி பரவ வேண்டும். உரிய காலத்தில் பரவ வேண்டும்.
உரிய தளத்தில் பேசப்பட வேண்டும். உரிய முறையில் சொல்லப்பட வேண்டும்.

இதை எல்லாம் செவ்வனே செய்திருக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை. அதுவே
திருப்தி. 4000 புத்தகம் சேர்த்து வைத்திருக்கும் இடத்தில் நாங்களும் 40
புத்தகம் வைத்திருக்கிறோம் என்று போட்டி போட வரவில்லை. ஆயின் இந்த
எண்ணத்தை தோற்றுவித்து, வலுப்படுத்தி, வளர்த்து, தொடர்ந்து தரமான
முதுசொம் பாதுகாப்பில் செயல்படுகிறோம் என்பதே எம் சாதனை.

 

இவ்வருட விழாவின் மிக முக்கிய சிறப்பாக நான் கருதுவது, முதுசொம் கொண்டோர் அதை வழங்க, முதுசொம் ஆர்வலர் அதை மின்னாக்க, முதுசொம் விழிப்புணர்வோர் அதற்கு விழா எடுப்பதுதான்.

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என் முதுசொம் பணியில் முதல் தோழர். என்னை
கிழக்காசிய ஓலையகத்திற்கு இட்டுச்சென்று வருட உதவியவர். பின் ரகஸ்யமாக, தயங்கித் தயங்கி (தேனீ சார், காப்பி சாப்பிட்ட கதை நினைவிற்கு வருகிறதா? ;_) தனது பூகோளபகோள விஷயத்தைக் காட்டினார். அவ்வளவுதான் அவரை சிக்கென அன்று பிடித்தவன்தான். இன்றுவரை எம் பிடியிலிருந்து நழுவ முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார். பாவம்!

 

டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் சும்மா வேடிக்கை பார்க்க மின்தமிழுக்கு
வந்து முதுசொம் பணியின் கீர்த்தியறிந்து தன் முழுமுயற்சியையும் காட்டி
இன்று எம் எல்லோருக்கும் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இவரை நான்
என்ன புகழ்ந்துவிட முடியும்? அன்னை சரஸ்வதியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்!
அவள் பணி. அவளுக்கு நெருக்கமானவர். அவ்வளவுதான்.
நாம் பார்த்து ஒரு கும்பிடு போடலாம்!

 

தேனீயின் உற்சாகம் தேனீ போலத்தான். மின்தமிழுக்கு வந்ததிலிருந்து தன்னை
`மரபு அணில்` என்று அழைத்துக்கொண்டு அவர் உழைக்கும் உழைப்பு! அடடா!

இன்னம்புரான்!  எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை
யாம் பெறவே என்ன தவம் செய்தோம்? இவர்களுக்கெல்லாம் வயது ஒரு பொருட்டே இல்லை போலும்! என்ன ஆர்வம்! என்ன உற்சாகம்!

 

யுகமாயினி சித்தனின் பங்கு வித்தியாசமானது. பத்திரிக்கை ஆசிரியராய்
இருக்கும் அவருக்கு தமிழ் இலக்கியப் பரிட்சயம், இலக்கிய உணர்வு என்பது
ரத்தத்தில் ஊறியது. அந்த தொழில்திறனுடன் அவர் எங்களுடன் கைகோர்த்து
`கூடல் திணை` அமைப்பது தமிழுக்குப் புதிது.

 

தேவ்! வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை கொண்டு எங்களுக்கு
வழிகாட்டியாய் இருக்கிறார். முதுசொம் இருந்தால் மட்டும் போதாது. அதைப்
புரிந்து கொள்ள வேண்டும். டாவின்சி கடவு போன்றது. அவர்தான்
ரகஸ்யார்த்தங்களை புரிய வைப்பவர். அவர் ஒரு பதிப்பாளர். மொழி
பெயர்ப்பாளர். இவர்களெல்லாம் சேர்ந்து செய்வதால்தான் இந்நிகழ்வு
சிறப்புப் பெறுகிறது.

 

அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி செய்தார். அது போல் நம் ஆலயங்கள் சிறக்க
தம்மை அர்பணித்துக் கொண்டவர் சந்திரசேகரன். இவரது சுறு, சுறுப்பு super
active வகை. இவர் இருந்தால்தான் உலகம் காண முடியும். ஆம், இவர் போட்டோ
எடுத்தால்தான் எனக்கே சென்னையில் என்ன நடக்கிறது என்று தெரியும். இவர்
ஒலிப்பதிவு செய்தால்தான் நாம் கேட்கமுடியும். இவர் காணொளி காட்டினால்
நாம் காண்போம்.

 

இத்தனை ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதுவே இவ்வருட
விழாவின் சிறப்பு.

 

முத்தாய்பாய் மின்தமிழ் அரங்கம் தாரகைகளால் ஜொலிக்கிறது. என்ன பாக்கியம்!

என்ன பாக்கியம்! எந்தரோ மகாபாவனு! உங்கள் திசை நோக்கி என் வந்தனங்கள்.

 

நம் கதையின் இன்னும் சில பக்கங்களை சுபா வாசிக்கிறார். அவர் பேச்சைக்
கேட்டீர்களோ? இல்லையெனில் கீழே சொடுக்குக:

http://www.tamilheritage.org/kidangku/thfday/suba27082009.mp3

 

மேலும் வரும்…

 


Narayanan Kannan <[email protected]>
to  [email protected]
Aug 28, 2009 9:08 AM

சரி..இதுவரை வந்த வழி சொல்லியாச்சு. இனி போகும் வழி பார்ப்போம்.

 

திட்டம் 1

 

ஆங்கில மடலாடற்குழு துவங்குவது. கூகுள் தளத்தில் துவங்கலாம். அழகு
இருக்கிறது. ஆயினும் மட்டுறுத்தல் அனுமதிகள் யாகூவில் அதிகம். அங்கு
வேண்டாத பின்னொட்டை நீக்கமுடியும். கூகுளில் முடியாது. இது போல்.


Aug 28, 2009 10:19 AM

திட்டம் 2

 

இன்னம்புரானுக்கு பிடித்த விஷயத்தைப் பேசுவோம்.

மதுரைத்திட்டம் உருவான பின் எங்களுக்குத் தோன்றியது, தமிழ் மரபு
அறக்கட்டளை என்பது நிதி உதவியுடன் தன் காலில் நிற்கும் ஒரு
அறக்கட்டளையாகத் திகழ வேண்டும் என்பது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து
கொண்டு இதை நடத்தும் போது களப்பணிக்கு ஆகும் பயணச் செலவு அதிகம். முதல் சில பயணங்களுக்குப் பிறகு இதை முழுக்க முழுக்க எங்கள் சொந்தச் செலவில் செய்து கொண்டு இருக்கிறோம். அது ஒரு புறம்.

 

இந்தியாவில் செயல்படும் மரபு அணில்களுக்கான பயணச் செலவைக்கூட இப்போது வழங்க முடியாத நிலை. இன்னம்புரான் சொல்வது சரிதான்.

 

இதன் சிக்கல் அறிந்துதான் மதுரைத்திட்டம் 100% தன்னார்வ செயற்பாடாக
இருக்கிறது. ஆனால் த ம அ அப்படி இருக்க முடியாது. இது நிதி பெற்று
ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு. சுபா தனது பேச்சில் இதுவரை எம் திட்டங்கள்
எங்கெங்கு நிதி பெற்று நடந்துள்ளன என விவரித்து உள்ளார்.

 

ஒரு காப்பு நிதி நமக்கு வேண்டுமெனில் சிலவற்றை யோசிக்கலாம். இது அரசு
பதிவுற்ற நிருவனம். வரி விலக்கு பெற்ற நிருவனம். எமக்கென்று கணக்கர்
(auditor), பொருளாதாரர் உண்டு. எனவே,

  1. ஆர்வமுள்ள நம்மில் பலர் வருடச் சந்தாவென்று ரூ 500 – 1000 மோ தரலாம்.
  2. நமக்குத்தெரிந்த தொழில் அதிபர், பெரியோரிடம் நிதி கேட்கலாம்.
  3. இசை நிகழ்ச்சிகள் (charity concerts) நடத்தி நிதி சேர்க்கலாம்.
  4. இந்திய பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இந்திய தேசிய திட்டங்களிலிருந்து நிதி பெறலாம்.
  5. இதே பொன்ற சர்வ தேச நிதி அமைப்புகளிடமிருந்தும் நிதி பெறலாம்.

 

வேறு யோசனைகள் இருந்தால் சொல்லவும்.

 

உடனே கையில் செக்கை வைத்திருப்போருக்கு இரண்டு யோசனைகள்!

நேரடித்தொகை அனுப்ப எம் வங்கி விவரம்:
http://www.tamilheritage.org/uk/bl_thf/thfdonar.html
Paypal மூலம் பணம் அனுப்ப:
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html (இது இப்போதைக்கு
என் மின்னஞ்சல் முகவரியில் உள்ளது. எனவே அனுப்புவோர் அனுப்பியவுடன்
இப்பொது மன்றத்தில் அதன் விவரங்களைச் சொல்லலாம். நான் அதை நம்
வங்கிக்கணக்கிற்கு மாற்றலாம்).

 

இதையெல்லாம் விட முக்கியமான உளவியல் ஒன்றுண்டு. மதுரைத்திட்டம் இதுவரை சிக்கலில்லாமல் நடைபெறுவதற்கான ஒரே காரணம் அங்கு காசை எதிர்பார்த்து யாரும் செய்வதில்லை. காசு காரியத்தைக் கெடுக்கும் என்பது எங்கள் அனுபவம்.

நல்ல மனிதர்கள் கூட காசு காமித்தவுடன் அல்பமாய் போன அனுபவமுண்டு. இதை நிர்வகிக்கும் சட்டாம்பிள்ளைத்தனம் என்னிடம் இல்லை. இச்சபையில்
இதையெல்லாம் நிவகிக்கும் மானேஜர்கள் இருந்தால் அது நமக்கு உதவும்.
இந்தியாவில் காரியம் சாதிப்பது என்பது குதிரைக் கொம்பு. லண்டன்
பொரோஜெக்ட் செய்த போது 10/20 மடங்கு அதிக விலை கொடுத்துச் செய்தோம். ஆனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. தொழில் நாகரீகம் என்பதும் ஒரு கலை. அது கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் வளர்ந்த அளவிற்கு இந்தியாவில் வளரவில்லை. நாம் தர்மமாகப் பெற்று. தர்மம் செய்து பழகியவர்கள். ஒன்றுமே கேட்காமல் செய்யும் தொழில் பல நேரங்களில் சுத்தமாக இருக்கும். இதுவொரு அதிசய நாடு!

யோசியுங்கள்…

இன்னும் வரும்.


Sat, Aug 29, 2009 at 8:56 AM

திட்டம் 3

 

உத்தமம் கருத்தரங்கிற்கு வந்து குவிந்திருக்கும் கட்டுரைகளை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது எழுந்த எண்ணங்கள்.

தமிழ் கூறும் நல்லுலகம் கணினி வளர்ச்சியில் உஷாராகத்தன் உள்ளது. தேவையான
வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்முறைச் சோதனையில் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளை எண்ணிப் பார்க்கும் போதும், கணினிக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதும் வடிகால் முறையிலேனும் (நெல்லுக்கு பாயும் வெள்ளம் புல்லுக்குப் பாய்தல் போல்) தமிழ் வளர்ச்சிக்கு உரம் சேருவது திண்ணம். மேலும், தமிழ் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு பண்ணிய திட்டங்கள் நிதி வழங்கும் போது
கூடுதல் வளர்ச்சி காணும்.

 

அப்போதுதான் நமது சேகரங்களின் மதிப்பு உலகிற்குத் தெரியவரும்.

 

உதாரணமாக, நான் களப்பணிக்கு தஞ்சைப் பல்கலைக்கழகம் போயிருந்த போது அங்கிருந்த ஓலைச்சுவடிகளை வாசிக்கும் OCR ஒன்றை சென்னை மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்று தயாரித்து ஆங்கிலேயர் காலத்தில் வரி, வசூல் எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள். நாம் புத்தகத்தில் இருக்கும் எழுத்தை வாசிக்க தடவிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் ஓலையை வாசித்து விட்டனர்! எனவே தமிழ்நாடு நினைத்தால் எதையும் சாதித்துவிடும். அச்சமயத்தில் நல்ல, நல்ல நூல்களை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.

 

எனவே இவ்வருட முக்கியத்துவம் நாம் ஓலைச் சுவடிகளுக்கும் தர வேண்டும். நீங்கள் அறிந்த பெரியவர்கள் நல்ல நூல்களை ஓலை வடிவில் வைத்திருந்தால் அது திராவிட மொழி எதிலிருந்தாலும் (இதில் கிரந்தமும் சேர்த்தி என உணர்க) நாம் பாதுகாக்க வேண்டும். சர்வ தேச நிதி பெற தென்னாசிய கலாச்சாரத்தில் நமக்கு அக்கறை என்று காட்டிக்கொள்வது நலம். சர்வக்ஞருக்கு சிலை வேண்டாம். நாலு நல்ல கன்னட கிரந்தம் நம் சேகரத்தில் இருந்தால் போதும். சிலை செய்வதை விட இது எளிது 😉

சரி..யோசியுங்கள்!

You may also like

Leave a Comment