Home Tamil MedicineHerbs சங்கு புஷ்பம் – Ternatea

சங்கு புஷ்பம் – Ternatea

by Dr.K.Subashini
0 comment

 

சங்கு புஷ்பம்  

திரு.அ.சுகுமாரன்

 

Nov 29, 2009
 

 

சங்கு போன்ற அமைப்பில் பூ  இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும்  இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில்  படரவிடப்படுகிறது .ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம்  சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது.  இது ஆசியாவில் தோன்றிய வகை தாவரமாக இருந்தாலும் அனைத்து ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. பிலிப்பின், இந்தோனேசியாவில் மலேசியாவில்
அதிகம் .  இதில் வெள்ளை பூ பூக்கும் விதமும் உண்டு 
 
தாவரப் பெயர்      Ternatea ternatea (L.)
குடும்பம்    FABACEAE, (PAPINONACEAE)
 
இதர இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு பெயர்கள்
 
Shankapushpi,
shankupushpam,
aparajit (Hindi),
aparajita (Bengali),
kakkattan (Tamil)
 
நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கரட்டான் என்றும் கூறுவார்கள் .
 
இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை .
 
காக்கரட்டான் விதைகள்  மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன்  இருக்கும்.
இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல் , , பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.

 நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

 
சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
 நீண்ட  நாள்  கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு   எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில்  நிவாரணம் கிடைக்கும்
 
காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த  நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர்
நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.பை நோய்கள் குணமாகும் .
மேலும் இந்த கொடியின்
 இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை   
வளர்க்கும் சக்தி கொண்டது  நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும் .
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தாலும் உண்டு .
இதன் இல்லை சாறு வயறு உப்புசத்தை போக்கும் .
தொண்டை புண்ணை ஆற்றும் .
 
 The juice of the root is mixed with cold milk and is drunk to remove phlegm and for chronic bronchitis (1).
 The roots are bitter, refrigerant, laxative, diuretic, anthelmintic and tonic and are useful in dementia, hemicrania, burning sensation, leprosy, inflammation, leucoderma, bronchitis, asthma, pulmonary tuberculosis, ascites and fever while the leaves are useful in otalgia and hepatopathy and the leaves, cathartic  . The plant is considered useful for eye infections, skin diseases, urinary troubles, ulcers and has antidotal properties  .
 
நான் முன்பே முந்தய கட்டுரையில் சொன்னபடி இதன் உறுப்பு வடிவில் இருக்கும்
 இதன் பூ . இருக்கும் வடிவு அனைத்து செக்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும் .
Owing to its similarity to a human body part, this plant was used traditionally to cure sexual ailments, like infertility, gonorrhea, to control menstrual discharge, as well as an aphrodisiac.
 
நமக்கு எளிதில கிடைப்பதால் இந்தன் அருமை நமக்கு புரிவதில்லை .தங்கத்தையே பஸ்மாக்கி சாப்பிடக்கூடிய  தன்மை கொண்டது இந்தக் கொடி சளியை அப்படியே அறுத்து கொண்டுவந்துவிடும் இதன் வேர் சாறு.

சங்குன்னா சும்மாவா ! இனி இந்தக் கொடியைப் பார்த்தால்   கொஞ்சம் மரியாதையோடு  அணுகுங்கள் !

You may also like

Leave a Comment