வீரமா காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை.   சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!                            காராரு மேனிக் கருங்குயிலே! ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே! மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே! சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே! வீரமாகாளி அம்மையே! நினது தாமரைத் திருவடி என் சென்னியதே!     திருவருளம்மை காளியே கால சொரூபிணி. அவளுக்கு அன்னியமாகக் காலம் இல்லை. அவளே காலத்தின் அதிபதியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாற்றங்களைRead More →