Home Tamil MedicineHerbs துளசி – Ocimum sanctum

துளசி – Ocimum sanctum

by Dr.K.Subashini
0 comment

துளசி – Ocimum sanctum

திரு.அ.சுகுமாரன்

 

Oct 08, 2009
 

 

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே!
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே!
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே!
அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே !

 

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
கிரகஸ்தர்கள்பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
முமுக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் கொடுப்பேன்

 

துளசி என்றால் தெரியாதவர் யார் ? அதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.
அதற்கு ஆன்மீக மகத்துவமும் ஏராளம்.   துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.

துளசியால் ஸ்ரீ விஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.

புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசீ தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.

துளசியை சிரஸில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அனேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன !

 

இதன் வேறு பெயர்கள்:
துழாய், திவ்யா, பிரியா, துளவம்,  மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, 
இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

 

தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family) OCIMUM SANCTUM LINN.
Botanical name : Ocimum sanctum
Family : Lamiaceae
Vernacular names :
Hindi, Gujarati, Bengali : Tulsi
Marathi : Tulasa
Tamil : Thulasi
Telugu : Tulasi
Malayalam : Trittavu
 

Chemical composition
Volatile oil 0.4-0.8% containing chiefly eugenol app. 21% & B-caryophyllene 37% (eugenol content reaches maximum in spring & minimum in autumm). A no. of sesquiterpenes & monoterpenes viz., bornyl acetate, ß -elemene, methyleugenol, neral, ß-pinene, camphene, a-pinene etc. : ursolic acid, campesterol, cholesterol, stigmasterol, ß-sitosterol and methyl esters of common fatty acids.
 
வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !
 என்ன செய்வது ?  அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை !
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு,  தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.!

தெரியுதா பெருமாள் கோவிலுக்கு போனால் தீர்த்தம் வாங்க மறக்காதீர்கள் !இன்னும் பாருங்கள் !

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே அச்சப்படும் !

 

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால்  உடல் நாற்றமா நாற்றமா உங்களிடமா ?  போயே  போச்சு !

சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள்.  தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.  சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம்.

 

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான பன்றிக் காய்ச்சலை துளசி பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன .
 
 மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.

இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.

டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும்.

20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.

இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.

நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல்.

துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை.

துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.!

 நான் சொன்னால் சொன்னால் நம்பமாடீர்கள் நம் தாஜ்மகாலை பாதுகாக்க 10 லட்சம் துளசி செடிகள் உதவுகின்றன  !

சிறந்த மருத்துவ குணங் கள் கொண்டதுளசி செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச் சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசிக்கு உள்ளது. தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார்.

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும், இது, காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும். காற்றை சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ் மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்’ என்றார். 

 இத்தனை மதிப்பு வாய்ந்த துளசியை இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்,
பாவித்தவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவிதன் அருளால்.!

புவியன்பு கொண்டோர் அனைவரும் வீட்டுக்கு ஒரு துளசியும் சில மூலிகைகளும்
வீட்டில் வளர்த்தால் வீடு நலம்பெறும் .புவியும் வாழ்த்தும் .

You may also like

Leave a Comment