அறிமுகம்

“Tamil Heritage Foundation is a non-profit, non-political, non-governmental organization to serve Tamil diaspora. It is engaged in the digital preservation of Indian Heritage Materials such as ancient palm leaf manuscripts and old books in electronic forms that are easily readable in CD ROM and in the internet”
 
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும். பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ் மொழி  மரபு, இலக்கியம், கலைகள் எனப் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இந்த மரபுச்செல்வங்கள் இன்று தமிழ் கூறும் நல்லுலகங்களான தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவை இன்று இருக்கிறது. முக்கியமாக ஓலைசுவடிகள் இன்று அழிவுறுகின்ற நிலையில், அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களைப் பாதுகாக்கவேண்டி ஒரு அவசியம் இன்று இருக்கிறது.

சமீபத்தைய கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சி அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை இலகுவாகப் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுக்கிறது. இந்தக் கணினித் தொழில்நுட்பங்கள் தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் என பல்வேறு வழிகளில் அவற்றை இலக்கப்பதிவாக்க உதவுகின்றன. அத்தோடு மட்டுமல்லால் அவற்றை நாம் இன்றுள்ள இணைய வசதிகள் துணை கொண்டு  இலகுவாக உலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியமாக இப்பணியில் ஈடுபட்டு வருவதோடு தமிழின் மரபை பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *