Home Tamil MedicineHerbs அத்தி – FICUS GLOMERATA

அத்தி – FICUS GLOMERATA

by Dr.K.Subashini
0 comment

அத்தி 

திரு.அ.சுகுமாரன்

 

Oct 28, 2009

 
நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும்  கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது  ஆகும்
அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும் போயதேல்லாம் அத்திப்பழம் சாப்பிடுவதாக வரும் ,.அத்தி பழம் மிக சுவையுடையது போல் பேசப்படும் .

அது அப்போதே என்னக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும் அத்திப்பழ்தை இப்படி ருசித்து சாப்பிடுகிறார்களே .நமது நாட்டில் இங்ஙனம் அதற்க்கு அத்தனை மதிப்பு இல்லையே என நினைப்பேன்.  அத்தி அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக  இருந்து வந்திருக்கிறது.

அத்தியைப்பற்றி பைபிளில் குறிப்பு இருக்கிறது குரானில் குறிப்பு இருக்கிறது. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.   நமது மெய்யியல்   அத்தி வலராற்றில் கலந்துள்ளது.

அத்தி. நவக்கிரகங்களில் வெள்ளிக்கிரகத்திற்காக வணங்கப்படும் மரம். அத்தியைப்பற்றி சில சொலவடையும் உண்டு. அத்தி பூத்தாப்போல , அத்திபழத்தை பிட்டுப்பார்த்த்தார்போலா  முதலியவை வழக்கில் இருக்கிறது . 

நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.  நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு நம்பிக்ககை நிலவி வருகிறது.

அத்தி மரத்தை தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள் உண்டு.

திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

அத்தி மரம் பல வகைப் பட்டது ..  நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும்  இருக்கிறது .
 

 

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

 
 இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர்.
உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு – கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.

“அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க” என் நற்றிணையில் காணலாம்.

அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும்  குறுந்தொகை கூறுகிறது.

 

அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது.
அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.
 இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

 உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக  பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

 
விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.

கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.இவ்வாறு மூலிகை வைத்தியர் அப்துல் கௌஸர் கூறுகிறார்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.   தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

 

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
 இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அது என்னமோ நமது இந்து மதத்தில் கடவுளர் ரூபங்கள் செய்து வழிபட அத்தி மரம் பெரிதும் பயன் படுகிறது .

உடுப்பியில் கூட கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற ஊரில் மீனவ  கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக செய்யப்பட்டு வழிபடப் படுகிறது .இதன் வருடாந்திர திருவிழக்கம் பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றவை .பெரும் கூட்டத்தை ஈர்ப்பவை .

நகரேஷி காஞ்சி  எனப்படும் கோவில் நகரமான காஞ்சியில் பெருமாள் கோவிலான வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் அத்திமரத்தால் ஆன வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே வழங்குவர். அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காண திமிலோகப்படும். பெருமானின் உடல் உஷ்ணத்தைக் காக்கவே நீருக்கு அடியில் உள்ளார் என்றும், அவர் அத்திமரத்தினால் ஆன சிலா ரூபம் சூடுதாங்க முடியாது, அதனால்தான் அவர் நீருக்கடியில் இருக்கிறார் என்றும் கூறுவர்.

அதேபோல் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம் கோழிகுத்தி. இங்கு அத்திமரமே பெருமாளாக விஸ்வரூபக் காட்சியளிக்கும் ஒரே ஆலயம் வானமுட்டிப் பெருமாள் ஆலயம். பேருக்கு ஏற்றாற் போல் எம்பெருமான் விஸ்வரூபமாக சுமார் 14 அடி உயர அத்திமரக் காட்சி பார்க்கப் பார்க்கப் பரவசம். இக்கிராமத்தின் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பதே ஆகும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி பழம் ஒரு டானிக் மாதிரி ,உடன்பு தேற உடனடி சக்திகள் அதில் ஏராளம் !
 
 

You may also like

Leave a Comment