கீதா.சாம்பசிவம்   தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும். சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு. சக்திபீடம்Read More →

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் ஆனைமலை, பொள்ளாச்சி. திருமதி.பவளசங்கரி திருநாவுக்கரசு                                                                        மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணிRead More →

ப்ரம்மா காயத்ரி   ” ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹிரண்ய கர்பாய தீமஹி தன்னோ ப்ரஹ்ம ப்ரசோதயாத்” அருள் மிகுபிரம்மபுரீஸ்வரர் ஆலைய தலவரலாறும் சிறப்பும், தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர் பிரும்மா. ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வரும் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பட்டூர் என அழைக்கப்படும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ப்ரம்ம சம்பத் கௌரீ சமேத ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர் ஆலையத்தில் குடிகொண்டுள்ள ப்ரம்மா தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்திRead More →

படாளம்மன் திருமதி.கீதா சாம்பசிவம்     மதுரையிலிருந்து தேனீ செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது என் அப்பாவின் ஊரான மேல்மங்கலம்.  அங்கே சிவன் கோயில், விஷ்ணு கோயில் இருந்தாலும், வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள படாளம்மன் தான் அப்பா வீட்டின் குலதெய்வம்.    அங்கே அம்மனுக்கு அபிஷேஹம் செய்து, அம்மனின் தளபதியான கறுப்பருக்கு உருமால் சார்த்துவது வழக்கம்.  அப்பா வீட்டில் குல தெய்வம் என்பதால் வருடா வருடம்Read More →

மாவிளக்கு திருமதி.கீதா சாம்பசிவம்     மாரியம்மன் என்றாலே ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. மாவிளக்குப் போடாத தமிழ்ப் பெண்களைத் தேடித்தான் பிடிக்கணும்.  அம்மன் என்றாலே மாவிளக்கும், பானகமும், துள்ளு மாவும், காப்பரிசியும் கூடவே வரும். எங்க அம்மா வீட்டிலேயும் அந்த வழக்கம் இருந்து வந்தது.  அம்மா வீட்டிலேயே மீனாக்ஷி படத்திற்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி வைப்பார். யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால்Read More →

முனைவர் கி, காளைராசன்   அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான்.  பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர்.  பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.  இவ்வாறாகத் தெய்வங்களின்  தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.     கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.    ஆனால் ஐயனார்Read More →

  கோயில் அமைந்திருக்கும் இடம்:  பெரம்பலூர் அருகே –  சாலையோரத்தில் ! படங்கள்: டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன்                                        Read More →

    குருக்களஞ்சி – மந்திரமூர்த்தி ஆலயம் அமைந்திருக்கும் இடம்:  எட்டயபுரம் படங்கள் + ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி     இந்த குருக்களஞ்சி மந்திரமூர்த்தி பற்றி விளக்குகின்றார் திரு.கருணாகர பாண்டியன் (விரிவுரையாளர், மதுரை பல்கலைக் கழகம்)  {play}http://www.tamilheritage.org/kidangku/villagedeities/pdari/kurukalanchi.mp3{/play}    Read More →

  ஆலயம் அமைந்திருக்கும் இடம்: திருவெற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நாக தெய்வம். படங்கள் ஒலி/ஒளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி இப்பதிவு 07.12.2009 அன்று காலை பதிவு செய்யப்பட்டது.  பதிவில் விளக்கம் தருபவர் திரு.அ.சுகுமாரன். {wmv}nagar{/wmv} அரசமரம், அதன் கீழ் நாக வடிவச் சிலைகள் வெவ்வேறு விதமான நாக தெய்வச் சிலைகள் சிவலிங்கம் நாகத்திற்குள் அமைந்திருப்பது போன்ற சிலை பெண்கள் தேங்காய், மஞ்சள், பூக்கள், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.    Read More →