வீரமா காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை.   சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!                            காராரு மேனிக் கருங்குயிலே! ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே! மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே! சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே! வீரமாகாளி அம்மையே! நினது தாமரைத் திருவடி என் சென்னியதே!     திருவருளம்மை காளியே கால சொரூபிணி. அவளுக்கு அன்னியமாகக் காலம் இல்லை. அவளே காலத்தின் அதிபதியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாற்றங்களைRead More →

  ஸ்ரீ சிவ – கிருஷ்ணன் கோவில் SRI SIVA – KRISHNAN KOVIL கிருஷ்ணன், சிங்கை.   காக்கும் கடவுளாக விளக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், திருவடியில் சேர்த்துக் கொள்ளும் கடவுளாக விளங்கும் பரமேசுவரனும் ஒரே திருமேனியில் சங்கரநாராயண அவதாரமாக ஸ்ரீ சிவகிருஷ்ணர் எனும் திருப்பெயரோடு சிங்கப்பூர் வாழ் அடியார் அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றனர்.   ஆலய வரலாறு முதன்முதலில் 1962 ம் ஆண்டு திரு.குஞ்சு கிருஷ்ணன்Read More →

  ஸ்ரீ   கிருஷ்ணன் ஆலயம் SRI KRISHNAN TEMPLE கிருஷ்ணன், சிங்கை.     ”கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறார் ஆண்டாள். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்னும் பரம்பொருளின் எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்தி அதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம்; பாரதப் போர் நிகழ்த்தவும், பூமியின் பாரம் தீர்க்கவும், கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுரைச் சிறையில் நாராயணன்Read More →

  ஸ்ரீ  அரச கேசரி சிவன் ஆலயம் SRI ARASA KESARI  SIVAN KOVIL கிருஷ்ணன், சிங்கை. அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச்கேசரி சிவன் என்றாகியது. ’அரசு’ என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளையும் குறிக்கும். ’கேசரி’ என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு  அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது.   நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாகRead More →

  ஸ்ரீ  முனீஸ்வரன் ஆலயம் Sri Muneeswaran Temple (Queens Town) முன்பொருகாலத்தில் உலகில் அறியாமை எங்கும் சூழ்ந்தது. பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர்,  சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென் திசை நோக்கிக் குருவாக அமர்ந்து அவர்களுக்கு ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும் தோன்றின.  சிவபெருமானின் ஞான வடிவம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.   முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்துRead More →

   ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம் Sir Manmatha Karuneshvarar Sivan Temple  கிருஷ்ணன், சிங்கை.   காசியப முனிவருக்கு மாயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான். கடுந்தவம் புரிந்து பரமேசுவரனிடம் அளப்பரிய வரங்களைப் பெற்ற சூரன், முவுலகையும் வென்றான். வானவர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தி வந்தான்.  இந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும், தேவமாதர்களும் சிறையில் அடைபட்டுத் துன்புற்றனர்.   சூரபத்மனின் கொடுமை தாங்காமல்  இந்திரன் மேருமலையில் பெருந்தவம்Read More →

  அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம்.  கிருஷ்ணன், சிங்கை.   செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வரருக்கும் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பலவிதங்களிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும். இக்கோயில் நவீனக் கட்டிட வடிவமைப்பின் பல உன்னதங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது; அதே வேளையில் தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்தின்Read More →

  புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்”  [ஈ சூன்] Yishun Bala Subramaniyar kovil கிருஷ்ணன், சிங்கை. ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும் ’தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆலயங்களில் அவ்வாறு தலவிருட்சங்கள் அமையாதிருப்பதற்கு  நகர அமைப்பும் ஒரு காரணமாகும். இடத்தின் விசேஷம், தீர்த்தத்தின் விசேஷம் இவற்றோடு ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்த இடம், அடியார்கள் சித்தி பெற்ற – இறையருள் பெற்ற இடம்; முனிவர்,Read More →

  ஸ்ரீ மகா மாரியம்மன்   [ஈ சூன்] கிருஷ்ணன், சிங்கை   சிங்கப்பூர்த் தீவு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வையில் இருந்த காலம் .’திரை கடலோடியும்  திரவியம் தேடு’ எனும் முதுமொழிக்கிணங்க, இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும், வேறு பிழைப்பை நாடியும் தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாகச் சிங்கை, மலேசியாவில் குடியேறிய காலம்.   ’கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இந்துக்களின் வாழ்வியலோடு ஒன்றிய எழுத்தில்Read More →

வைரவிட காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை     காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், பால ரூபிணி என்றும் பொருள். கருமையான நிறத்துடன் மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனாலும் அவள் கருணையே வடிவானவள் என்றும் கூறுகின்றன. எங்கும் வியாபித்து இருப்பவள் காளி. அவள் கருமை நீலம் கொண்டவள். கடலைப் பார்க்கும்போது அது நீல நிறமாய் காட்சியளிக்கும்.கடல் நீரைக் கையிலேந்தி பார்க்கும் போதுRead More →