பனைஓலைப்பாடி கல்வெட்டுகள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் திரு. ச.பாலமுருகன், முனைவர். சுதாகர் ஆகியோர் அண்மையில் செங்கம் வட்டம் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள புனரமைப்பில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளையும் நிலத்தில் உள்ள பலகைக்கல்வெட்டையும் ஆய்வு செய்தனர். இதில் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கோயிலில் கிடைத்த கல்வெட்டுகள் புனரமைப்பின் போது இடம்மாற்றி கட்டியதாலும், கற்களைபிரித்து வைத்ததாலும் கல்வெட்டுகளின் தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை. இக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டRead More →