ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !- ௮ (8 ) கரிவலம் வந்த நல்லூரில்   வரகுணபாண்டியருடைய  ஏட்டுச் சுவடிகள் எல்லாம்  ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் . "வரகுணபாண்டியர் வைத்திருந்த  ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் இருக்கின்றனவாமே ?"   "அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழையRead More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !   ௭  – (7 )   ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத்  தேடுதல்  ! கோயில்களுக்கு அடுத்தபடியாக  எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடிச்சென்று பார்த்தோம். ஆனால்  நாடி ஜோதிடர்கள் யாரும்  நாங்கள் அவர்களை   நாடியபோதும்  திறந்த மனத்துடன் எங்களை வரவேற்க வில்லை; எங்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். . ஒருRead More →

களப்பணி – ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  –  ௬ (6 )   திருநாரையூரே   அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை.  இருக்காதா பின்னே?  மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம்  செய்ய உள்ளார்; அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை அருந்தும் அற்புதத்தை, நாடெங்கும்Read More →

  ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  ! –  ௧௧  (11 ) களப்பணி   அறிக்கை ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப்  போய்விட்டுத்   திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். "எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில் இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய் விட்டன. இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனனRead More →

ஓலைச் சுவடிகளைத   தேடிய  படலம் – 10   சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் . இங்ஙனம் சுவடி படிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால்  அக்ஷராப்பியாசத்தை "மையாடல் விழா" என்றுRead More →

 May 18, 2010 பாஞ்சாலங்குறிச்சி: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை   வீரபாண்டிய கட்டபொம்மனின்  நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து  வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.       இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.       இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்றRead More →

May 17   காய்கறிகள் வாங்கிய அனுபவம்   கயத்தாறிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் பாதை கொள்ளை அழகு. சாலைகள் விரிவாக இல்லாவிட்டாலும் வாகனம் பயனிக்க அதிகம் பிரச்சனையில்லாமல் செல்ல முடிகின்றது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக சற்று மெதுவாகத் தான் பயணம் செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலையில் வாகனங்களும் குறைவு. அவ்வப்போது சாலையில் மாட்டு வண்டிகள் செல்வதையும் ஏதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்களையும் பார்க்க முடிந்தது.Read More →

May 16   வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799]   கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்.  ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே  வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை கட்டி அதில் நடுவே உயர்ந்த சிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.   வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்    நாங்கள் சென்ற சமயம் இந்த நினைவு மண்டபம் திறக்கப்படவில்லை. ஆகRead More →

May 12   பசுமை நிறைந்த நெல்லை   சற்று தாமதமாக, காலை 7:30  மணி  வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம். இரயிலிலிருந்து இறங்கிப் பார்த்த போது திரு.மாலனின் அதே முகச் சாயலோடு ஆனால் சற்று இளையவராக முகம் நிறைந்த புன்னகையுடன் திரு.ஜெயேந்திரன் நின்று கொண்டிருந்தார்.  ஒருவாறு உடனே என்னையும்Read More →