வ. உ.சிதம்பரனார் பிறந்த இல்லம்   எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள்.  அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கடிதத்தை இங்கே காணலாம்.    இது 30.11.1933ல் எழுதப்பட்டதாக திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.      ஒட்டப்பிடாரம் சிறுRead More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  ! —  ௧௪  (14 )   இப்போது  ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர்  முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண.  பின்  அதுவே புதூர் என மாறி ,  ஸ்ரீமத்  ராமானுஜர் அவதரித்ததினால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. அத்தகைய  புண்ணிய பூமியான ஸ்ரீபெரும் புதூரில் இரு இடங்களில் சுவடிகளைப் பெற்று பின் அதன் அருகில் இருக்கும் சில இடங்களையும் பார்த்துவிட்டுRead More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  – ௧௩   (13 ) களப்பணி   அறிக்கை ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம். இது எங்களின்   தினசரி வாடிக்கை ஆனது; உடல் களைத்து இருப்பினும் ‘திரும்பி வந்தோமா?  உணவுண்டு படுத்தோமா?’ என்று இருக்காமல்,  பிறகு இணைய இணைப்பு  எங்கே கிடைக்கும் என்று அங்கே அலைவதும், அதற்கு மேல்  அடுத்த நாளைய Read More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  ௧௨ – ( 12 ) களப்பணி   அறிக்கை   சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும்  22 / 02/ 10  அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம்.  இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக் காக நாங்கள் தங்குவதற்குச் செங்கல்பட்டைத் தெரிவு செய்தோம்.     மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாகRead More →

May 30 கிராமத்தில் காளை மாடுகள்   அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். ஆக புறப்பட்டு சற்று தூரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சூழலில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றே தோன்றியது. ஒரு பெரிய மரம். அதன் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு  எங்களுக்காக ஜெயந்தி கொடுத்து அனுப்பியிருந்த உணவை சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.   இட்லி அதற்கு மிளகாய்பொடியை நல்லெண்ணை விட்டு  தயாராக வைத்திருந்தார். கீதாவும்Read More →

May 27, 2010   பகுதி 11   வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள்   நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா.  அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி ‘பேச நேரம் இருக்கின்றதா’ என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.   வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டRead More →

May 26   பாஞ்சாலங்குறிச்சி: வீரஜக்கம்மாள்   எங்களுக்கு முன் வந்து நின்ற அந்த மனிதர் கட்டபொம்மனின் வாரிசு என்று எங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். அவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது இது ஒரு ஏமாற்றுத்தனமா என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்குமா?  எனக்கு தெரிந்த  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்படி அவருக்கு குழந்தைகள் இல்லை. அப்படித்தான் என்னுடன் வந்திருந்த மற்றவர்களுக்கும்Read More →

May 24, 2010   பாஞ்சாலங்குறிச்சி:  வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்    இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை.  அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டுRead More →

May 22, 2010   பாஞ்சாலங்குறிச்சி: கதை சொல்லும் சித்திரங்கள்   வாகனத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தின் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு நினைவு மண்டபத்திற்குள் சென்றோம்.   இந்தக் கட்டடம் உள்ளேயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தூய்மையாக உள்ளன. சுவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைச் சித்திரமாகRead More →

ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  – ௯ (9 )  ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல்  (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) – ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள்    (cataloque ) போன்றவற்றில்  இருந்து  பெறுதல்Read More →