2008 – உலக மொழிகள் ஆண்டின் தமிழ்மணிகள்

 

மணியாரம்

தினமணியில் அனைத்துலக மொழிகள் ஆண்டில் (2008), வாரந்தோறும் ஒலிக்கும் தமிழ்மணியில் கலைமணிகளான அறிஞர்கள் சிலர் எழுதிய கருத்து மணிகளை நம் நினைவில் சேர்த்து வைக்கும் ஒரு முயற்சியாகத் தான் இந்த முத்தாரம் – மணியாரம் அமைகிறது.

கடலிலும், மலையிலும் கடுமையான முயற்சிகள் செய்த பிறகு கிடைக்கும் முத்துக்களும், மணிகளும் போலத்தான் இந்தச் செய்தித்தொகுப்பு அமைகிறது. வாசிப்பதற்கும், யோசிப்பதற்கும் வழிகாட்டும் கருத்துக்கள் இத்தொகுப்பில் பதிந்துள்ளன. தொலைவிலிருந்து பார்க்கும்போது மலையின் மாட்சி நன்றாகத் தெரியும் என்பார்கள். காலடியில் கிடைக்கும் சிலம்பின் மதிப்பு பலருக்கு புலப்படாமல் போகும். தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் மின்தமிழ் அறிஞர்களும், கலைஞர்களும் சோர்விலாத தமிழ்ச்சுடர்களாக, இம்முயற்சிக்கு ஊக்கம் தந்தவண்ணமாக உள்ளனர்.

இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சிகள், இவ்வாண்டில் மட்டுமல்ல(2008), வரவிருக்கும் புதிய ஆண்டில்(2009) – வானளாவிய தொடர்சியாக, கோள்களின் பயிற்சி கொண்டு, அனைவரையும் தமிழ் மீது கவர்ச்சி பெற முயல்வோமாக.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்;
வாழிய புதுமை; வளர்க நல்லினிமை.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
29/11/2008
 
[இப்பகுதியில் பதிப்பிக்கப் பட்டுள்ள அனைத்து தினமணி(தமிழ்மணி) பதிப்பு கட்டுரைகளையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மின்னாக்கம் செய்தவர் டாக்டர். கண்ணன் நடராஜன், ஆஸ்திரேலியா.]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *