Home HistoryEtayapuram 20. பாரதி பிறந்த இல்லம்

20. பாரதி பிறந்த இல்லம்

by Dr.K.Subashini
0 comment

 

20. பாரதி பிறந்த இல்லம்
 
பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது. 
 
காலை ஏறக்குறைய  10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற போது.  ஒரு அதிகாரி ஒருவரும் ஒரு சில பார்வையாளர்களும் இந்த இல்லத்தில் இருந்தனர்.
 

 

பாரதியார் பிறந்த இல்லம்

 

 

நுழை வாசலிலேயே  வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. இங்கே வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றோம். அங்கே பாரதியார் வரலாற்றைக் கூறும் பாரதியின் தனிப்படங்கள், குடும்பத்தார் படங்கள், நண்பர்களின் படங்கள், சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் சில சுவற்றில் மாட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
 
 

 

 பாரதியார் குடும்பப் படம். (புதுவை 1917)

 

 

அதோடு பாரதியின் பத்திரிக்கைகள், அவர் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் சிலவும் உள்ளன. அதற்கு பக்கத்தில் வாசலுக்கு அருகில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு ஆண்டு வாரியாகக் குறிக்கப்பட்டு ஒரு பலகையில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

 

பாரதியாரின் பத்திரிகை இந்தியா (1907) 

 

 

பாரதி பிரசுராலய நிறுவனர்களில் ஒருவரான பாரதியின் இளைய மாப்பிள்ளை நடராசன்.

 

செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்" நூலைப் பற்றி..

 

பாரதி குடும்பத்தினர் படம்: சகோதரர் விஸ்வநாதய்யர், பேத்தி, புதல்வி ஸ்ரீமதி சகுந்தலை, பேரன், புதல்வி ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி, பேத்தி

 

 

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ரா.கனகலிங்கம்

 

சென்னையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் பழைய தோற்றம்.

 

 

தனிமை இரக்கம் பாடலை (1904) அச்சில் முலாவதாக வெளியிட்ட விவேகபானு மு.ரா.கந்தசாமி கவிராயர்.

 

 

காரைக்குடியில் பாரதியார் (1919)

 

 

 

பாரதியாரின் துணைவியார் செல்லம்மா

 

 

ஸ்வதேச கீதங்கள் (1907) சிறு நூலை வெளியிட்ட வி.கிருஷ்ணசாமி ஐயர்

 

 

சென்னையில் மகாகவி பாரதியார் (1920)

 

வாழ்க்கைக் குறிப்பு

 

 

இவற்றோடு பாரதியின் கையெழுத்தின் பதிவுகள் இங்கு உள்ளன. அதோடு இந்த பாரதி பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிமுகப்படுத்தி, அரசுடமைப்படுத்தி திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் திறப்பு விழா செய்தியும் உள்ளது.

 
 

 

திறப்பு விழா

 

 

 

பாரதியார் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள்.

 

 

காந்தியடிகளின் வாழ்த்து

 

 

பாரதியார் கையெழுத்து

 

 

 

 

 இவற்றை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் முனைவர்.கருணாகர் பாண்டியனிடம் பாரதி இல்லத்தைப் பற்றியும் அது எவ்வாறு அரசுடமையாக்கப்பட்டது என்ற செய்தியையும் கேட்டுப் பதிவு செய்து கொண்டேன். அவர் கூறியதிலிருந்து சில தகவல்கள் தெரியவந்தன.
 
பாரதியார் இந்தத் தெருவில் தான் பிறந்து வளர்ந்திருக்கின்றார் என்பது உறுதி. பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர் பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். அவருடைய உறவினர்கள் சிலர் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். திரு.கருணாகர பாண்டியனின் அண்ணன் திரு.துரைராஜ் ஆசிரியர் எட்டயபுரத்தில் தமிழாசிரியராகவும் கல்லூரி ஆசிரியராகவும் இருந்தவர்.
 
அவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973 வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் இன்றைய தமிழ்க முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம் இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர்  ஒப்படைத்து விட்டனர்.
 
இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் பாதுகாக்கப்படுகின்றது.
 
திரு.கருணாகர பாண்டியன் இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒலிப்பதிவினை கேட்க :
 
{play}http://www.tamilheritage.org/kidangku/etayapuram/bharathi_Illam.mp3{/play}
 
அன்புடன்
சுபா
 

 

 

You may also like

Leave a Comment