Home resources 10th year Celebration

10th year Celebration

by Dr.K.Subashini
0 comment

இவ்வருடம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய வருடம்!

 

தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ்ச் சேவையில் 10 ஆண்டுகள் முடித்து 11வதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

 

ஆகஸ்டு மாதம்தான் நிறைவு ஆகிறது எனினும் இவ்வருடம் முழுவதும் 10ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கப் பல நிகழ்வுகளை  ஏற்பாடு செய்து வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை இப்பக்கத்தில் காணலாம்.

 

1. தென்தமிழகம் தாண்டி தென்கொரியாவை ஆண்ட செந்தமிழ்த் தொடர்புகள், சேர, சோழ பாண்டிய அரசுகளின்  தொடர்புகளால் தூரக் கிழக்கில் விளைந்த பண்பாட்டுப் பரப்பு வரலாறு பற்றிய உரை

 

தேதி: 9.2.2011

இடம்: குவாலாலம்பூர், மலேசியா

 

பிப்.9, 2011ம் தேதியன்று மலேசியாவின் கோலாம்பூர் நகரில் நடைபெற்ற  திரு.ஆதி.குமணன், அவர்களின் 61வது பிறந்த நாள் பொது நிகழ்வில் கொரியாவிலிருந்து இலத்திரன் வழியில் உரை நிகழ்த்தினார் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர்.நா.கண்ணன்.

 

தென்தமிழகம் தாண்டி தென்கொரியாவை ஆண்ட செந்தமிழ்த் தொடர்புகள், சேர, சோழ பாண்டிய அரசுகளின்  தொடர்புகளால் தூரக் கிழக்கில் விளைந்த பண்பாட்டுப் பரப்பு வரலாறு பற்றிய உரை இது.
இப்பதிவினை `நிகழ்கலை` வலைப்பதிவில் வலையேற்றியுள்ளோம்.இங்கே சென்று இவ்விழியப் பதிவைக் காணலாம்.http://video-thf.blogspot.com/2011/02/tamil-korea-relationship.html

 

குறிப்பு – இதுவொரு நகர்வுக்காட்சி (Slide show presentation). எனவே ஒவ்வொரு காட்சியின் ஒலிபரப்பும் முடிந்தவுடன் `இனி மேல் செல்வோம்` எனும் போது உங்கள் அடுத்த கட்ட நகர்வைச் (next slide move) செய்யவும். மொத்தம் 28 நகர்வுகள். குறைந்தது 1 மணி நேரமாவது கையில் வைத்துக்கொண்டு காட்சியைத் தொடங்கவும்.
 

முனைவர் நா. கண்ணன் இந்த ந்/இகய்வு தொடர்பான தனது கருத்துக்களை இப்படி பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றில் மீண்டுமோர் மைல்கல்.

 

இன்று தமிழ்க் கொரிய உறவுகள் பற்றிய மின்னலை எத்தடையுமின்றி மலேசியாவில் நடந்தேறியது.

 

எனது தொடக்க உரை விழியப்பேச்சாகவும் (video talk),  உரை முழுவதும் Share Screen வழியிலும் (நேரடி ஒலிபரப்பு), கேள்வி பதில் நேரம் மீண்டும் விழியப்பேச்சாகவும் முடிந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எனது மின்னுரையைப் பொறுமையுடன் கேட்டது மட்டுமின்றி, மிகப்புரிதலுடனான, ஆழமான கேள்விகளை மலேசிய மக்கள் கேட்டனர்.

 

கொரியாவின் அதிவேக இணையத்தொடர்பு இதைச் சாத்தியப்படுத்தியது.மலேசியர்களின் ஆவல் மிக்க ஆர்வம் இதை செயற்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன் இதே மண்ணில் இப்படியொரு உரை நிகழ்த்தியதின் விளைவுதான் இன்று நீங்கள் கலந்து அனுபவிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை.

 

தமிழ் மரபு அறக்கட்டளை நிதிச் சுற்றுலா ஒன்றை மலேசியாவில் ஏற்பாடு செய்ய நயனம் ஆசிரியர் திரு.ஆதி.ராஜகுமாரன் சபையில் வாக்களித்துள்ளார். மூன்று மாதங்கள் மலேசியாவில் உரைச்சுற்று செய்ய வேண்டிக்கொண்டுள்ளார். பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.

 

பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும் ஒரு பயனுள்ள அழகு இருப்பதை இன்று உணர்ந்தேன்.

நா.கண்ணன்

09.02.2011

 

2. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மரபு அறக்கட்டளயின் சுவடிப்பணியைப் பாராட்டும் ஒரு நிகழ்வு.

 

தேதி: 3.3.2011

இடம்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, தமிழகம். 

 

3. தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா.

 

தேதி: 13.3.2011

இடம்: சென்னை, தமிழகம். 

  

You may also like

Leave a Comment