Home Event 10ம் ஆண்டு விழா

10ம் ஆண்டு விழா

by Dr.K.Subashini
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா

தேதி: 13.3.2011

இடம்: சென்னை, தமிழகம்.

 

 

 கடவுள் வாழ்த்து

மரபூர் சந்திரசேகரன்

{flv}prayer{/flv}

வாழ்த்துரை

முனைவர் தி.க.திருவேங்கடமணி

செயற்குழு உறுப்பினர், தமிழ் மரபு அறக்கட்டளை

{flv}Thiruvengadamani{/flv}

அறிமுகவுரை

முனைவர்.க.சுபாஷிணி

தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

{flv}subashini{/flv}

சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்

{flv}honouring{/flv}

திருமதி சீதாலட்சுமி

{flv}seethamma1{/flv}

விழாவில் வழங்கபப்ட்ட சொற்பொழிவுகள்:

1. வாழ்த்துரை: திரு. K.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி

 {play}http://www.tamilheritage.org/kidangku/10thyear/Dinamani_Editor_Vaithiyanathan.mp3{/play}

2. சிறப்பு சொற்பொழிவு 1: திரு.ராமச்சந்திரன்

18ம் நூற்றாண்டின் தமிழ் சமூகம் – ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய சில பிரச்சனைகள்.

 {play}http://www.tamilheritage.org/kidangku/10thyear/Mr_Ramachandran.mp3{/play}

3. சிறப்பு சொற்பொழிவு 2: முனைவர்.செல்வகுமார்

கீழை காவிரி பள்ளத்தாக்கில் புத்த சமயமும் தேவார பாடல் பெற்ற தலங்களும்

{play}http://www.tamilheritage.org/kidangku/10thyear/Dr_Selvakumar.mp3{/play}

(To view the Power Point Presentation, please click Here! )

4. சிறப்பு சொற்பொழிவு 3: முனைவர்.ராஜவேலு

சங்க கால முருகன் கோயில் – அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு

{play}http://www.tamilheritage.org/kidangku/10thyear/Dr.Rajavelu.mp3{/play}

 

5. தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்கள்: திரு.ஆண்டோ பீட்டர், செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.

 {play}http://www.tamilheritage.org/kidangku/10thyear/AntoPeter.mp3{/play}

 

நிகழ்வின் படங்கள்

திரு.சந்திரசேகரன், திரு.வினோத் ராஜன், திரு.செல்வமுரளி, திரு.ராஜசங்கர்

திரு.மோகனரங்கன், திரு.ஸ்ரீதர், திருமதி.சீதாலட்சுமி, முனைவர்.பத்மாவதி, முனைவர்.க.சுபாஷிணி, திரு.ஆண்டோ பீட்டர்

விழாவில் வாசிக்கப்பட்ட வரவேற்புரை

தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழா : வரவேற்புரை
முனைவர் தி.க.திருவேங்கட மணி

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடிகளின்
சொல்லும் பொருளும் சுவைமிகு மரபும்
என்றும் அழியா திருந்திடக் காக்கும்

தன்னார்வ அமைப்பாய்த் தரணியிலுதித்த
தமிழ் மரபறக் கட்டளை யதனின்
பத்தாம் ஆண்டுப் பணிநிறை வதனைப்
பாங்குடன் போற்றப் பரிவுடன் வந்த

எம்அரும் பெரும வணக்கம் வருக !
உம்முரை யெமக்கு ஊக்கம் தருக !

எங்கள் மரபறக் கட்டளை யதனைத்
திட்டம் தீட்டித் திறம்பட நடத்தும்
தங்கத் தலைவி துடிப்புடை முனைவர்.க.சுபாஷிணி அவர்களே வாழ்க வருக

தமிழ்க் கணித்துறையில் காலம் பலவாய்
அமிழ்தினும் இனிய புதுமைகள் செய்யும்
தமிழ்மரபு இயக்கத் தரமிகுச் செயலர்
ஆண்ட்டோ பீட்டர் அறிஞரே வருக

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
நெறியாய்க் கொண்ட நேரிய நாளிதழ்
தினமணி யதனின் தனிமுதல் ஆசான்
பரம கல்யாணி கல்லூரி யதனில்
படிக்கும் போதே பலதிறன் படைத்து
நூலகம் தம்மைச் செம்மை செய்ய
கல்வியாளர்கள் கருத்தினில் ஏற்றி
வெற்றியும் கண்ட வித்தகர் எங்கள்
நூலகர் அன்பர் நூல்களின் பிரியர்
வாழ்த்துரை வழங்கும் வைத்தியநாதன்
ஐயா அவர்களே வருக வருக

கீழைக் காவிரி பள்ளத்தாக்கில்
பொளத்த சமயம் படர்ந்தது மற்றும்
தேவாரப் பாடல் பெறுதிரு தலங்களை
ஆதாரத்துடன் அலசிட வந்த
முனைவர் செல்வக்குமாரரே வருக

தமிழகத் தலங்களின் ஆய்வு குறித்து
தரணித் தமிழர்க்குத் தன்னுரை மூலம்
விளக்கிட வந்த வித்கர் முனைவர்
ராஜவேலரே வருக வருக

பதினெட்டாம் நூற்றாண்டின் பழந்தமிழ்ச் சமூகம்
ஆய்வுசெய வேண்டிய அவசியப் பிரச்சனை
அனைத்தையும் ஆழ்ந்து அறிவுறுத்திட வந்த
முனைவர் ராமச்சந்திரரே வருக

கௌரவங்களையே கவுரவித்து மகிழுதல்
தமிழ்மரபுக் கட்டளையின் மரபாய் ஆனது
அந்த வரிசையில் சுவடிச்செல்வர்
அண்ணாமலையாரைத் தஞ்சையில் வாழ்த்தினோம்
இன்றோ இங்கு மகளிர் இருவரை
இனிதே வாழ்த்தி கௌரவம் செய்வோம்
கல்வெட்டு ஆய்வில் களம்பல கண்டு
சரித்திரம் பலவும் சரியாய் ஆய்ந்த
முனைவர் பத்மாவதி  அம்மையர் ஒருவர்
சமூக நலனைத் தம் வாழ்நாள் முழுதும்
தவமாய்க் கொண்ட தமிழ்த் தவச்செல்வி
திருமதி சீதா லட்சுமி மற்றவர்
கௌரவ விருதைக் கைக்கொள வந்த
இந்த மகளிர் இருவரும் வருக

நன்றியுரைதனை நவின்றிட வந்த
திருமிகு டி.கே.வி. ராஜனே வருக
இவ்விழா சிறக்க எல்லாமும் செய்த
பொன்னியின் செல்வர் பரத்வாசர் வருக

மேடையிலிருக்கும் இவர்களைத் தவிர
கூட்டத்திலிருக்கும் செயற்குழு அன்பர்
சென்னைக் குழுவின் செயல்மிகு வீரர்
பத்திரிகையாளர் தொலைக்காட்சி நண்பர்
இன்னபிறரும் இனிதுடன் வருக

விருந்தினர் இல்லையேல்
விழா சிறப்புறுமா ?

எங்கள் அழைப்பினை அன்புடன் ஏற்று
தங்கள் ஞாயிறைத் தள்ளிவைத்திட்டு
விழாவிற்கு வந்த விருந்தினர் அனைவரும்
வருக வருக வளம்பல பெருக !

நன்றி ! வணக்கம் !
முனைவர்.க.திருவேங்கடமணி

 

 

You may also like

Leave a Comment