Home Games பூப்பறிக்க வருகிறோம்..

பூப்பறிக்க வருகிறோம்..

by Dr.K.Subashini
0 comment

இன்றும் நம் கிராமங்களில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு…

இரண்டு அணிகளாக பிரிந்துகொள்வார்கள்.. ஒவ்வொறு அணியிலும் குறைந்தது ஐந்துபேர்.. அநேகமாய் பெண் பிள்ளைகளே இருப்பார்கள்..

தரையின் நடுவே நீளமாய் கோடு ஒன்று வரையப்படும்…

கோட்டின் இருபுறமும் பத்தடி தூரத்தில் இரு அணிகளும் அணிவகுப்பர்.. ஒருவரின் ஒருவர் இடுப்புகளை தங்களின் கரத்தால் இணைத்துக் கொள்வார்கள்..

ஆட்டம் ஆரம்பிக்கும்… முதல் அணியினர் ஒரே மாதிரியாக கிழிக்கப்பட்ட கோட்டை நோக்கி அழகாக நடந்து வருவார்கள்.. அவ்வாறு வரும்போது பாடல்
பாடிக்கொண்டே வருவார்கள்.. கோடு வரை அவர்கள் எல்லை..

*பூபப்பறிக்க வருகிறோம்.. பூப்பறிக்க வருகிறோம்.*

இவ்வாறு பாடிக்கொண்டே கோடு வரை வந்து, பின்னோக்கிச் செல்வார்கள்..

அதே நேரத்தில் இரண்டாம் அணியினர் கோட்டை நோக்கி நகர்வைத் துவக்குவார்கள்.. பாடல் இப்படி வரும்..

*யாரை பறிக்க வருகிறீர்கள்.. யாரை பறிக்க வருகிறீர்கள்*

இப்போ முதல் அணி, எதிர் அணியில் உள்ள ஒரு பிள்ளையின் பெயரைச் சொல்லும்.. பாடலாகவே..
அதே அசைவுடன் நடந்து கொண்டே..

*லட்சுமியைp பறிக்கிறோம்.. லட்சுமியைப் பறிக்கிறோம்.*

இப்போ எதிர் அணி.. பாட்டாகவே .. அதே அசைவுடன்
நடந்து கொண்டே…

யாரு வரப்போகிறார்.. யாரு வரப்போகிறார்..

இப்போ முதல் அணி தங்களுக்குள் கலந்து ஆலோசித்து தங்கள் அணியில் உள்ள ஒருவரின் பெயரைச் சொல்லும்.

*மீனா வரப் போகிறா.. மீனா வரப்போகிறா*..

இலட்சுமியும், மீனாவும் கோட்டின் இருபக்கமும் நிற்பார்கள்.. ஒருவரின் கையை ஒருவர் இழுக்க..
யார் கோட்டைத் தாண்டுகிறாரோ அவர் அவுட்…

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்..

எந்த அணி.. எதிர் அணியில் இருப்பவர்கள் அனைவரையும் கோட்டைத் தாண்டி இழுத்து அவுட் செய்கிதோ அந்த அணி வெற்றி பெரும்..

( குழந்தைகளின் ஆளுமை.. யாரை அனுப்பினால் சரியாக இருக்கும் என்னும் கணிப்பு.. விடாமுயற்சி..
குழந்தைகளின் மனோதிடம் அதிகரித்தல் என்பது இவ்விளையாட்டின் சிறப்பாகும்.. இவ்விளையாட்டை பார்ப்பதே பரவசமூட்டும் ஒரு அனுபவமாகும்.)

-திரு.மாரிராஜன்

You may also like

Leave a Comment