Home inscription சிற்பி – கே.பி. உமாபதி ஆச்சார்யா

சிற்பி – கே.பி. உமாபதி ஆச்சார்யா

by Dr.K.Subashini
0 comment

 

சிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம்

பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் என்று ஏராளமான இடங்களை கூறலாம். இப்படி உலகோர் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகளின் வம்சத்தினர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு உள்ள பாரம்பரியம் மிக்கதொரு சிற்பிதான் நாம் இன்று காணப்போகும் திரு. கே.பி. உமாபதி ஆச்சார்யா.

இவருடைய தாத்தா பிரம்மஸ்ரீ வையாபுரி ஆச்சார்யா, இவருடைய தந்தை ஸ்ரீ பஞ்சாபகேசன் ஆச்சார்யா. இவர்கள் கோவில் வடிவமைத்தல், சிற்பங்கள் வடித்தல், தேர் வடிவமைத்தல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். இன்றும் பல ஆலய கட்டுமானத்தில், சிற்பங்கள் செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.

திரு. உமாபதி அவர்களும் அவரது சகோதரர் திரு. கே.பி. வீழிநாதன் அவர்களும் இணைந்து பல சிற்ப ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உருவாக்கிய ஆலயங்கள் மற்றும் சிற்பங்கள் இவர்களுடைய திறமையைப் பறைச் சாற்றும்.

1957-ல் பிறந்த திரு. கே.பி. உமாபதி தந்தையிடம் சிற்பக் கலையையும் சிற்ப சாஸ்திரத்தையும் கற்று, அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கும்பகோணத்தில் வாழ்ந்துவரும் இவர் தற்போது மும்பையிலுள்ள ஆசியாடிக் சொஸைட்டியுடன் இணைந்து மனஸா மற்றும் கஸயபாவில் உள்ள சிற்பங்கள் மற்றும் சிற்பக்கலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

திரு. உமாபதி ஆச்சார்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாரம்பரியக் கலை நிபுணர் விருதும், இந்தியக் கைவினைத்திறன் அமைப்பு சாந்தி பிரசாத் விருதும் அளித்து கவுரவித்துள்ளது.

இதோ அவருடன் ஒரு நேரடி சந்திப்பு, இதில் சிற்பசாஸ்திரம், சிற்பங்கள் செதுக்கும் முறை, சிற்பங்கள் செதுக்குவதற்கு முன் தயார் செய்யப்படும் ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை நம்முடன் பரிமாறிக்கொண்டார். கற்சிற்பங்கள் மட்டுமின்றி உலோகத்தில் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்கள் என்று அறிந்துகொண்டோம் இந்த சந்திப்பில். பார்த்து மகிழுங்கள், மேலும் தங்களுக்கு சிற்பக் கலையில் இருக்கும் சந்தேகங்களை தவறாமல் எங்களுக்கு அனுப்புங்கள். விஜய குமார்: [email protected] சதீஷ் குமார் E-mail :[email protected]

 


 

{wmv}upart1{/wmv}

 

 பேட்டி – பாகம் 1

 

 

 

 


 

{wmv}upart2{/wmv}

 பேட்டி – பாகம் 2


{wmv}upart3{/wmv}

 பேட்டி – பாகம் 3


{wmv}upart4{/wmv}

 பேட்டி – பாகம் 4

 


 

You may also like

Leave a Comment