Home History சரஸ்வதி

சரஸ்வதி

by Dr.K.Subashini
0 comment

பாயும் சரஸ்வதிக் கரையினிலே

 

அறிமுகம்

டாக்டர் திரு கல்யாணராமன் ஏஷியன் டெவலப்மண்ட் வங்கியில் பெரும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவர். ரெயில்வேயில் கம்யூட்டராக்கம் சம்பந்தமாக முக்கியப் பணிகள் ஆற்றியவர். கன்னடம், தெலுங்கு, தமிழ், சம்ஸ்க்ருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நன்கு தெரிந்தவர்.

1939 ஆம் ஆண்டு தஞ்சை மண்ணில் பிறந்தவர், 1958 – 1961 ஏ ஜி எஸ் அலுவலகம், 1965ல் ரெயில்வேயில் கம்ப்யூடராக்கம், 1978 வரை கர்நாடகா மின்சாரத் துறையில், பின் ரெயில்வேயில் ஆடிட்டிங் என்று வளர்ந்தவர், வேலை நிமித்தம் மணிலாவில் தங்கியிருக்கும் பொழுது, எதேச்சையாக சிந்துச் சமவெளி நாகரிகம், சரஸ்வதி நதி என்றெல்லாம் பெரும் ஈடுபாடு வளர கடைசியில் அந்த சரஸ்வதி நதியே தம் வாழ்க்கையின் முக்கியப் பணியாக ஆகும் அளவிற்கு ஆர்வத்தில் மூழ்கியவராய், அதனால் தாம் வகித்து வந்த பதவியையும் துறந்து, முன் ஓய்வு பெற்று முழுதும் சரஸ்வதி நதியை மீட்டெடுக்கவும், பாரதம் முழுக்கவும் உள்ள நதிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்திலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டார்.

அவருடைய ஈடுபாட்டில் முழுதும் அவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள பக்க பலமாகவும், தோன்றுநல் துணையாகவும் இருந்தது அவர்தம் துணைவியார்.

சிந்து நதி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதிக்கரை நாகரிகம் என்ற தெளிவாக்கத்தைத் தம் எழுத்து, பேச்சு, செயல் அனைத்தின் மூலமும் உருவாக்கினார். விஞ்ஞானம், வரலாறு என்று பல்துறை அறிஞர்களையும் சரஸ்வதி நதி குறித்து கூர்ந்த கவனமும், ஆழ்ந்த ஈடுபாடும் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் டாக்டர் திரு கல்யாணராமன்.

 

தாமே சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றிய தெளிந்த முடிவுகளை அடைய அவருக்கு உதவியது திரு கல்யாணராமன் தாமே உருவாக்கிய இந்திய மொழிகளின் புலம் சார்ந்த பன்மொழி லெக்ஸிகன். சுமார் 25 இந்திய மொழிகளின் தரவுகள் அடிப்படையில் உருவான இந்த லெக்ஸிகன் 8000 semantic clusters – 8000 பொருள் கூறுகள் என்ற வகைப்பாட்டில், சுமார் 300000 சொற்களை வகைதொகை படுத்துகிறது. இந்த லெக்ஸிகன் திரு கல்யாணராமனுக்கு சிந்து எழுத்துக்களைப் படிக்க வாய்ப்பான ‘ரொஸட்டா கல்லாகப்’ பயன்பட்டிருக்கிறது.

 

ரீபஸ் முறை, க்ரிப்டாலஜி ஆகிய எழுத்தியல் முறைகளைப் பயன்கொண்டு திரு கல்யாணராமன் தமது Indus Script Cipher என்ற நூலை யாத்திருக்கிறார்.

பெரும் ஆய்வாளராகவும், சரஸ்வதி கலைக் களஞ்சியப் பெருக்கராகவும் திகழும் திரு கல்யாணராமன், வாய்க்கு வாய், அடிக்கடிப் போற்றிக் கூறுவது தொல்காப்பியரின் நுண்மாண் நுழைபுலத்தை. ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். சொல். 155) என்ற சூத்திரத்தைக் குறித்து திரு கலயாணராமன் வியந்து புகழாத நாள் இல்லை எனவே கூறலாம். இந்தச் சூத்திரத்தை திரு கல்யாணராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, “all words are semantic indicators” என்று கூறுகிறார்.

நளசேது என்றும், ஸ்ரீராமசேது என்றும் காலம் தொறும், வடமொழி, தென் மொழி என்ற வேறுபாடின்றி அனைத்து நூல்களும் போற்றியுரைக்கும் சேதுவைப் பண்பாட்டுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாப்பதில் முன்னிற்பவர் திரு கல்யாணராமன். இந்திய பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் அவரது ஊக்கமும், ஆய்வும் இன்றும் வளர்ந்துகொண்டே போகிறது எனலாம். ஆயினும் நதிகளின் மைய ஒருங்கிணைப்புத் திட்டம் என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஆக்கபூர்வமான வினையாக இருக்கிறது. டாக்டரின் வலைத்தளம் இங்கே http://sites.google.com/site/kalyan97/

 

இத்தகைய பெருமகனாரைக் கொண்டாடுவதில் தமிழ் மரபு அறக்கட்டளை மிகவும் பெருமை கொள்கிறது. உயிர்க்குல ஒருமைப்பாட்டுணர்வையும், மனித உன்னதத்தையும் நடைமுறையில் காட்டும் இத்தகைய பெரியோர்களை நாம் இந்தத் தீபாவளியன்று போற்றுவோமாக.

                                                                                                                                                               

 


 

 

 

இடமிருந்து வலம்: திரு.சந்திரசேகரன், திரு.மோகனரங்கன், திரு.தமிழ்த்தேனி, திரு.தேவ், திரு கல்யாணராமன்

 

திரு.மோகனரங்கன், திரு.தேவ், திரு.தமிழ்த்தேனி, திரு.சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து  திரு கல்யாணராமன் அவர்களைப் பேட்டி செய்துள்ளார்கள். இப்பதிவுகள் 2010 தீபாவளி சிறப்பு வெளியீடாக பதிப்பிக்கப்படுகின்றன. இப்பேட்டிகளின் பதிவுகளைக் கீழே காணலாம்.

 

பேட்டிகளின் பதிவு: பாகம் 1 (Introduction)

 {play}http://www.tamilheritage.org/kidangku/kalyanaraman/introduction.mp3 {/play}

பேட்டிகளின் பதிவு: பாகம் 2

 {play}http://www.tamilheritage.org/kidangku/kalyanaraman/part3.mp3 {/play}

பேட்டிகளின் பதிவு: பாகம் 3

 {play}http://www.tamilheritage.org/kidangku/kalyanaraman/part2.mp3 {/play}

 


 

பேட்டிகளின் காணொளிப் பதிவுகள்

 

பகுதி 1 

{wmv}drkalyanaraman1{/wmv}

 

 

 

திரு.கல்யாணராமன் வெளியீடுகள்

 

 

 

 

 

You may also like

Leave a Comment