Home Uncategorized கிருத்திகா

கிருத்திகா

by Dr.K.Subashini
0 comment

 

 

 Feb 13ம் நாள் அன்று திருமதி.கிருத்திகா தமது 92 வது வயதில் காலமானார் என்ற செய்தியை திரு.நரசய்யா அவர்கள் மின் தமிழில் அறிவித்திருந்த்தார். அதனைத் தொடர்ந்து கிருத்திகா அவர்களைப் பற்றிய குறிப்புக்கள சிலவற்றை திரு.நரசய்யா மின் தமிழில் வழங்கினார். அதன் தொகுப்பு இங்கே!

 


 

கிருத்திகா

திரு.நரசய்யா

 

 

 

 

என்னுடைய "சாதரணமனிதன்" நூலிலிருந்து:
 
" மதுரம் என்ற இயற்பெயர் கொண்ட கிருத்திகா காலம் சென்ற் ஐ. சி. எஸ் அதிகாரி பூதலிங்கத்தின் மனைவி. 1915 ஆம் வருடம் பிற்ந்தவர். பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவ்ர். தமிழில் இவர் எழுதியவை – ‘புகைநடுவில்’, ‘வாசவேஸ்வரம்’, ‘ சத்தியமேவ’, ‘புதிய கோணங்கி’ மற்றும் ‘நேற்றிருந்தோம்’  என்ற புதினங்களும், ‘மனதிலே ஒரு மறு’, ‘மா ஜானகி’ என்ற நடகங்களும்   கிருத்திகா என்ற புனைப்பெயரில் தமிழில் எழுதினார்
 
இந்திய அரசாங்கத்தின் உயர்f அதிகாரி ஒருவரின் மனைவி என்ற முறையில் நாட்டின் நிருவாக வளர்ச்சியையும் அதன் பாதையையும் ஒட்டி வளர்ந்தவர் என்பதால் அவரது வார்த்தைகளில் மேன்மை தெரியும்.
 
1955 ஆம் ஆண்டில் சிட்டி யு பி எஸ் சி நேர்முகத்தேர்வுக்காக டெல்லி சென்றிருந்தார். அங்கு சுந்தா என்ற நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் கிருத்திகா என்ற பெயரில் ஒரு பெண்மணி தமிழில் எழுதுவதாகவும் அதைச் சிட்டி படிக்கவேண்டுமென்வும் கேட்டுக்கொண்டார். (Chitti those days was a male chauvanist and had poor opinion about ladies writing!)
 
சுந்தாவின் சொல்லைத்தட்ட் முடியாமல் நேரமும் இருந்ததால்ஜி. டி. எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை திரும்புகையில் அவரது நாவலைப் படிக்க ஆரம்பித்தார்."  – Feb 14,  2009

 

.
படிக்க ஆரம்பித்தவுடன் சிட்டியின் ஆர்வம் அதிகரித்தது. ஏனெனில் அந்த நூலின் அமைப்பும் கருத்தும் இதுவரை எவருமே முயற்சி செய்யாத முறையில் கையாளப்பட்டிருந்ததுதான்.சென்னை சேரெத்தும் இந்த நூலைப் பற்றிய ஒரு விமர்சனத்தை ஸ்வ்த்ந்திரா என்ற ஆங்கிலப் ப்த்திரிகையில் சிட்டி எழுதினார். சுந்தா மூலமாக இதைத் தெரிந்து கொண்ட கிருத்திகா சிட்டியைப் பார்க்க விழைந்திருக்கிறார்.
 
கிருத்திகா பூதலிங்கம் தம்பதியர் 1955 ஆம் ஆண்டு தமது புத்திரி மீனாவின் திருமண்த்திற்கக (வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன்) சென்னை வ்ந்த போது, முதல் முறையாக சிட்டி, கிருத்திகா சந்தித்தனர். திருமண்ம் சுவாமிமலையில் – (நான் ஒரு விழாவில் சுவாமிநாதனை கவர்னர் ராம் மோஹன் ராவுடன் சந்தித்தேன். அப்போது சுவாமிநாதன் சொன்னது- சிட்டியின் மருமானாக இருப்பது நீங்கள் கொடுத்து வைத்தது – அதிலும் அவரது வாழ்க்கை குறித்து எழுதுவது ஒரு பாக்கியம்!)
 
அப்போது புகழுடன் விளங்கிககொண்டிருந்த பதிப்பாளர் ஜி நடேசண்டன் அவர்கள் தங்கியிருந்தனர். அங்கு தான் சிட்டி முதல் முறையாக கிருத்திகாவைச் சந்த்திருக்கிறார்
 
முதல் சந்திப்பிலேயே இவர்கள் நட்பு ஊர்ஜிதப்பட்டு விட்டது கிருத்திகாவின் நோக்கும் ஆழமான் அறிவும் சிட்டியை ஆகர்ஷித்தது. இவ்ர்கள் நட்பு சாதாரண நிலையைத் தாண்டியது என்பதை எத்தனையோ முறை இருவருடனும் நான் இருந்த போது கண்டுள்ளேன். (எனது குமாரன் திருமண்த்தின் போது நான் சிட்டியுடன் கலந்து சென்றுதான் கிருத்திகாவை அழைத்தேன் அதற்கு அவ்ர் ‘இந்த வயதில் சிட்டியை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? போன் செய்தாலே போதுமே’ என்றார். திருமண்த்தின் போது சிட்டியுடனேயே அம்ர்ந்திருந்தார்)
 
கிருத்திகா எழுதிய ‘புகை நடுவில்’ பிரபலமாக போது, சிட்டிநின் விமர்சனத்தால்னாந்த நாவல் பலராலும் அறியப்பட்ட்து. அப்போதிருந்து, கிருத்திகா தான் எழுதும் எல்லா கையெழுத்துப் பிரதிகளையும் முதலில் சிட்டியிடம் அனுப்பி அவர் பார்த்தபிறகுதான் பிரசுரத்திற்கு அனுப்புவார்!
 
கிருத்திகா ஒரு முன்னணி எழுத்தாளராக ஆவதற்குச் சிட்டி உறுதுணையாக இருந்தார் என்றால் அது மிகையாகாது! பின்னர் அவர் எழுதிய நூல்களில் ‘வாசவேஸ்வரம்’ என்னும் நூல் தமிழில் வெளிவ்ந்த மிகச்சிற்ந்த படைப்புகளில் ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது. தமிழில் எட்டு நாவல்களும், ஒரு குறு நாவலும் ஐந்து நாடகங்களும் எழுதிய கிருத்திகா ஆங்கிலத்திலும் தமது இயற்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். கலை, தத்துவம்,  நமது கலாச்சார பாரம்பர்யம் போன்ற விஷயங்களைப் பற்றிய அந்த நூல்கள் ஆங்கில வடமொழிப் புலமைக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றன.  – Feb 15, 2009

 

 

கிருத்திகா குழந்தைகளுக்காக இராமாயணம் போன்ற இதிகாசங்களை எழுதியுள்ளார். டெல்லியில் தமது கணவர் வகித்த பதவியின் பயனாகப் பல அயல் நாட்டு அறிஞர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு இருந்தது. அயல் நாட்டுப் பெண்கள் சங்கங்களில் நமது  பண்பாடு  பற்றிப்  பேசியுள்ளார். சிட்டியின் ஆலோசனையால் தம்து 87 வது வ்யதில் காந்தி அடிகளைப் பற்றிய் நூலைஆங்கிலத்தில் எழுதினார் 
 
இளைய சமுதாயத்தினருக்கும் பயன்படும் படியான நமது நாட்டின் பெருமை கலாசாரம், முதலிய அம்சங்களைப் பற்றிய பல பெரியோர்கள் அறிவுரைகள் செயல்பாடுகள் நிறைந்த Yoga of Living என்ற ஒரு நூல் அவரது ஆங்கிலப் படைப்புகளில் சிறந்த ஒன்று. இதன் சிற்பபம்சம் அந்த நூலுக்குச் சிட்டி எழுதிய 68 ப்க்கங்கள் முன்னுரை! அந்த முன்னுரையே ஒரு தனியான நூலாக விளங்கலாம்! ஏன் – அதை ஒரு சிற்ந்த ஆராய்ச்சிக் கட்டுரையாகவே பார்க்கலாம். (இதைத் தனியாக இங்கு பின்னர் இடுகிறேன்)
 
கிருத்திகா சிட்டி இருவருக்கும் இடையில் இருந்த கடிதப் பரிவர்த்தனை ஒரு இலக்கிய பண்பாட்டுச் சம்பாஷணை. என்னிட்ம் எல்லாக் கடிதங்களும் சில மாதங்கள் இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ந்துள்ளேன். அதையே ஒரு தொகுப்பாக பிரசுரிக்கலாம்.இந்தப் பரிவர்த்தனையில், சிட்டியின் திறனாய்வும் ஆங்கில மொழிப் புலமையும் கிருத்திகாவின் sincereity of purpose ம் தெரியும்.
 
அவற்றைப் பரிசீலிக்க அந்த தொகுப்பு கிடைத்தபோது, நாற்பத்தியேழு வருடங்களில் அக்காலகட்டத்த்கின் இலக்கியப் பிரதிபலிப்பாகவே எனக்குக் காணப்பட்டது.
 
சிட்டியின் சிற்ந்த திறனாய்வு புலப்படுகிற் ஒவ்வொரு கடிதத்திலும் அவரது அடிப்படை நம்பிக்கைகளும் இழையோடுகின்றன். மனிதத்துவம் என்ற சொல்லுக்குப் பூரண பிரதிபலிப்பு அவர் அக்கடிதங்க்ளிலும்  பிறருக்குக் காட்டும் பரிவு, – அதே  போலக்  குறைகளையும்  தவறுகளையும்  பொறுக்காத சவுக்கடிகள் – அவற்றிலும் ஒரு நயம், நகைச்சுவை இருந்தபோதும் தரக்குறைவு   எவ்வகையிலும்  ஏற்படாமல்  பாதுகாக்கும்  பண்பு   இவற்றைக் காணலாம். Feb 15, 2009

 

 

சாதாரணமாக ம்ற்றவர் எழுத்தை அலசாத சிட்டி, கிருத்திகாவின் கதைகளை மதிப்பிற்குரியதாக கவனித்திருக்கிறார். இவர்களது கடிதங்களில் நான் கண்டவ்ற்றைக் கூறுகிறேன்:
 
சிட்டி: "புத்தர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியாவிடினும் தமது கடமையைப் புறக்கணித்ததாக அது ஆத்மானுபூதிக்காகவாயினும் – புத்தரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை."
 
அதற்குப் பதில் கிருத்திகா புத்தரைப் பற்றி எழுதியது – நீண்ட கடிதம் – கிடைத்தவுடன் சிட்டி எழுதுகிறார்: "சென்ற கடிதம் எழுதியபிறகு புத்தரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். புத்தரின் சிறப்பும் தெரிந்தது" இது சிட்டியின் நேர்மையைக் காட்டும். "கலிங்கத்துக் காடு" என்ற தலைப்பில் கிருத்திகா ஒரு கட்டுரை வரைந்துள்ளார். தொல்பொருள் ஆராய்ச்சியிலும் மானிட இயல் விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கொல்லிமலிக் காடுகளுக்குச் சென்று அங்கு வாழ் ஆதி மனிதரைப் பார்த்து விட்டு வந்திருந்த சிட்டிக்கு இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்திருக்கின்றது.  – Feb 16, 2009

 

 

எல்வினின் பழங்குடி ம்க்களை மொழிபெய்ர்fக்குமுன்னரே, சிட்டிக்கு காவிரியையும் கங்கையையும் அந்நதிகளின் கரைகளில் வாழ் மனிதர்களைப் பற்றியும் அலசும் வாய்ப்பு கிட்டியது. வங்காள்த்தையும் தமிழகத்தையும் ஒட்டி வளர்ந்த க்லாசார ஒற்றுமைகளை விளக்க முயலுகையில், பழ்ங்கால் கலாசாரம் ஒடுக்கப்ப்ட்ட்தன் காரணம் இஸ்லாமிய படையெடுப்புகள் என்றும் ஆங்கிலேயரின் பரந்த நோக்கு வித்தியாசப்பட்டது என்றும் சொல்கிறார். அப்போது கிருத்திகாவின் கடிதம் ஒன்று முற்றிலும் மாறுபட்டு, தோட்டங்களையும் பூக்களையும் பற்றியதாக் உள்ளது. அம்மாதிரி ஒரு திடீரென மாறிவிட்ட பரிவர்த்தனை நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்கினாலும் அது ஒரு designed change  என்றே எண்ண வைக்கிறது சிட்டியின் பதில்!
 
அதுவரை இம்மாதிரி  விஷயங்களில்  கவனம்  செலுத்தியிராத  சிட்டி தனது மகன் கண்கள் மூலம்
வண்ணத்துப்   பூச்சிக்கும் கொடிக்கும் பூவுக்கும் உள்ள உறவைக்  காண்கிறார்!
வேடந்தாங்கலும் கிருத்திகாவின் இள்ங்கோடையின் பறவையினங்களின்
வர்ணனைகளும் இவ்விஷயத்தில் தேர்ச்சிபெற்ற எழுத்தாளர்  கிருஷ்ணனின் (பழம் பெரும் நாவலாசிரியர் மாதவைய்யாவின் புதல்வரும் ஒரு சிறந்த இயற்கை போட்டோகிராபருமான்வர்) கை வண்ணமும் சேர்ந்து 35 வரிக் கடிதமொன்றினை ஒரு சிறந்த வியாசமாக ஆக்கி விடுகிறது!
 
சரியாக் கிருத்திகாவைச் சந்தித்து ஒரு வருடமாகி இருந்த நிலை: இப்போது அக்கடிதங்களின் கருத்துப் பரிவர்த்தனை காலத்திறகும் மேற்பட்ட முதிர்ச்சியை அடைந்து விட்டதை நம்மால் காணமுடிகிறது!
 
சிறுகதை என்பதை ஆராய்கிறது ஒரு கடிதம். அக்கடிதத்தின் வீச்சு அத்ன் பெள்திக பரிமாணத்தைவிடப் பெரியது! அமிர்த ஷேர் கில்லின் ஓவியமும் கதைகளில் நீதி போதத்துவமும் அன்றைய (50 களில்) கட்டவிழ்க்க முயன்று வரும் எழுத்தாளர்களின் வெறு வெளி நோக்கமும் (looking at empty space) இக்கடிதங்களில் அலசப்ப்டுகின்றன்."உங்கள் கடிதம் மூலம் அறிந்து கொண்ட விவரத்தால் என் வீட்டுத் தோட்டத்தின் பூக்கள் தனிக் கவர்ச்சியுடன் காணப்ப்டுகின்றன" என்றெழுதும் சிட்டியின் கடிதத்தில் ஒரு கவி நயம் காணப்படுகிறது. கலைக் காட்சியில் சுதந்திர்க் கலையார்வத்தைக்
கூட்ப் பாழாக்கிவிடும் அதிகார நுழைவு இவரால்   வன்மையாகக்  கண்டிக்கப்ப்டுகிறது.
 
"என்னைக் கவர்ந்தது "சக்கிரவர்த்தியின் வேலையற்ற நேரம்" என்ற ஓவியம் தான். நான்கு பெண்மணிகள் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் அம்ர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிற்பகல் –  ஆமாம் காலத்தைக் கூட அப்படத்தில் காண முடிகிறது – அங்கு அவர்களுக்குப் பேசுவதற்கோ செய்வதற்கோ ஒன்றுமில்லை! அந்த சூனிய நிலையை அவர்கள் முகத்தில் காண முடிகிறது. முகங்கள் வெற்றிடங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் அதற்கோ பரிசு கொடுக்கப்படவில்லை!"  – Feb 16,2009

 

 

நாவல்கள் மட்டுமின்றி கிருத்திகா சாவித்திரி, ஹரிச்சந்திரா, கண்ணகி போன்ற இதிகாச புராண நாயக நாயகிகளின் உளவியலை ஆராயும் வகையில் புதிய நோக்கில் எழுதிய நாடகங்களும் நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவை. சமகால வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய "மனதிலே ஒரு மறு" என்ற நாடகத்தைச் சிட்டி சென்னையில் மேடையேற்றியது ஒரு ரஸமான சம்பவம்.
 
ஒரு எதிர்பாராத நிகழ்வால் இந்த நாடகம் சிட்டியால் இயக்கப் பட்டது. பல பத்திரிகைகள் நாடகத்தை போற்றி எழுதியிருந்தன. ஒத்திகையின் போது நான் ஒரு தடவை பார்த்துள்ளேன்.
 
கிருத்த்கிகாவின் மைத்துனர் அனந்தராமன் மும்பையில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நாடகத்தில் நல்ல நாட்டம் கொண்டிருந்த அவர் ஆங்கிலத்தில் சில நாடகங்கள் எழுதியது மட்டுமின்றி பல பயில்முறை நாடக அமைப்புகளோடும் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு ஒரு முறை அமெரிககாவின் நியூயார்க்கிலிருந்து  வந்திருந்த  நாடக வ்ல்லுனர் பேராசிரியர் சார்லஸ் எல்சன் என்பவரோடு பழகியபோது அவர் சென்னை வரப்போவதை அறிந்து  அங்கு சிட்டியைச் சந்திக்குமாறு சொல்லியிருந்திருக்கிறார். சென்னை வ்ந்த் எல்சன் சிட்டியைச் சந்ததித்து தமிழ் நாடகமேடை பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார். நாடக வளர்ச்சிக்காகச் சென்னையில் இயங்கி வந்த நாட்டிய சங்க் என்ற அமைப்பு எல்சனைக்  கொண்டு  நாடகப் பயிலரங்கம் (theatre workshop)  ஒன்று நடத்தியது.
 
அதில் சிட்டியும் பங்கு கொண்டபோது வகுப்பு சம்பந்தமாக ஒரு நாடகம் தேவைப் பட்டது. கிருத்திகாவின் "மனதிலே ஒரு மறு"  என்ற நாடகத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது, எல்சன் அதையே  நாடக வாசிப்பு நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். அந்த வாசிப்பின் பயனாக அதையே  நாட்டிய சங்க  ஆதரவில்  மேடையேற்றுவது எனத்  தீர்மனிக்கப்ப்ட்டது! இந்த பொறுப்பு சிட்டிக்கே தரப்பட்டது. சிட்டி சில மாதங்கள் ஒத்திகை நடத்தி 1960 ஜூன் சென்னை புரசவாக்கம் தாசப்பிரகாஷ் ஹோட்டல் வளாகத்தில் புதிய முறையில் அரங்கேற்றப்பட்டது. அப்படித்தன் சிட்டி இயக்குனரானர்!
 
இதைக் குறித்த விவர்ம் சி சு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் அதே மாதத்தில் ஒரு நீண்ட விமரிசனக் கட்டுரையாக் வந்தது.  Feb 17, 2009

 

 

அந்த நாடக முயற்சியை சி சு செல்லப்பா தமது ‘எழுத்து’ வில்  இவ்வாறு விமர்சித்தார்:

எந்தக் கலைத்துறையிலும் சோதனை செய்ய வேண்டுமென்று வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள சோதனைகளைப் பார்த்ததன் விளைவாக உற்சாகம் ஏற்படுவது சகஜம். ஆனால் அதைசெயலாக்க முற்படும் போது எந்த அளவுக்கு அதற்கு வரவேற்பு இருக்கும், அது மனதில் வாங்கிக் கொள்ளப்படும் என்றெல்லாம் சந்தேகங்கள் தோன்றும். ‘நம் நாட்டில் இத்தகைய சோதனை முயற்சிகளுக்கான சமயம் இன்னும் வரவில்லை, அத்ற்கான் சூழ்நிலை இல்லை என்ற அவநம்பிக்கை பிறந்து விடும். அவ்வளவுதான்! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அந்த சோதனை ஆகி விடும். சோதனை மாதிரியும் இருக்கச்செய்யவேண்டும், அதே சமயம் தங்களையே சோதித்துவிடும்படியாகவும் ஆகிவிடக்க்கூடாது என்று ஒரு சமரச வழி ஏற்படுத்திக்கொண்டு ஒரு வவ்வால் (வெளவால்) நிலைக்கு நிலைக்கு அந்தக் கலைத்துறையைக் கொணர்ந்து விடுவார்கள்

"நாடகத் துறை இடற்கு விதிவிலக்கு அன்று. தமிழ் மேடையில் சோதனை என்பதெல்லாம் சிந்தனை, அமைப்பு, விஷயம், வடிவம் சம்பந்தமாக ‘சோதனை மாதிரி’ அதாவது ஒரு ‘போலி’ யாகத்தான் செய்யப்பட்டிருக்கிறதே அன்றி, நிஜமாக அல்ல. சேவா ஸ்டேஜ் ஒன்றுதான் ஏதோ கொஞ்சம் ‘சோதனை முயற்சி’ என்று சொல்ல்த்தக்க அளவில் முயற்சி செய்ய ஆரம்பித்தது. ஆனால் முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

"சென்னை நாட்டிய சங்கத்தின் ஆதரவில் சென்றமாதம் கடைசி வாரத்தில் சென்னையிலே நடைபெற்ற ‘மனதிலே ஒரு மறு" என்ற நாடகம் உண்மையில் ஒரு சோதனை முயற்சி. இந்த நாடகத்தை எழுதியது கிருத்திகா. அழைப்பின் பேரில் மட்டும் வ்ந்துள்ள சிலருக்குத்தான் இந்த வய்ப்பு கிடைத்தது.இந்த மாதிரி நாடகங்களை அப்படித்தான் பரவச்செய்யமுடியும். . . ." மிகவும் நீளமான இந்த விமரிசனத்தின் இறுதியில், ‘. . .இந்த நாடகத்தை சிட்டி டைரக்ட் செய்திருக்கிறார். ஒரு சோதனை முயற்சியை முதன் முதலாக வெற்றிகரமாகவேத்தான்"
 
ஆனால் பின்னர் அந்த நாடகம் அரங்கேற்றப்ப்ட்டதாக்த்தெரியவில்லை. ஏனெனில், சிட்டி அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் அவரால் தொடர  முடியவில்லை. ஆனாலும், இரண்டு சிறந்த மனிதர்களால் இது நிறைவேற்ப்பட்டது என்பது ஒரு  இதிகாச உண்மை. – Feb 19,2009

 


 

கீர்த்தி மிகுந்த கிருத்திகா

திருப்பூர் கிருஷ்ணன்

 

அழகிய நடையில் ஆங்கிலத்திலும்,தமிழிலும் இலக்கிய ஓவியங்களைத் தீட்டிய எழுத்தாளர் கிருத்திகா. உண்மையிலேயே ஓவியங்களைத் தீட்டவும் வல்லவர் என்பது பலரும் அறியாத தகவல். கிருத்திகா வரைந்த வண்ணச் சித்திரங்கள்
கண்ணைக் கவர்பவை. அவரது மெல்லிய உணர்வுகளைப் போலவே அவர் வரைந்த சித்திரங்களும் கூட மென்மையும்,மேன்மையும் நிறைந்தவை. கிருத்திகாவின் "யோகா ஆஃப் லிவிங்" என்ற நூலில், உள்ளே ஆங்கிலத்தில் ஓடுவது அவரது எண்ணம்; வெளியே அட்டையை அலங்கரிப்பது அவரது வண்ணம்.

 

விமர்சகர் சிட்டி பி.ஜி.சுந்தரராஜன் சொன்ன வண்ணம், நிறைய எழுதலானார் கிருத்திகா. சிட்டி தான் அவரது இலக்கியம் வளர ஊக்கம் கொடுத்தவர். சிட்டிக்கும்,கிருத்திகாவுக்கும் இருந்த உறவை அண்ணன் – தங்கை உறவு என்பதா
அல்லது குரு – சிஷ்யை உறவு என்பதா? இரண்டுவிதமாகச் சொன்னாலும் அது உண்மைதான். தன் பெயர்த்திக்குத் தான் வளர்த்த தன் அபிமான எழுத்தாளரான கிருத்திகாவின் பெயரை வைத்து மகிழ்ந்தார் அமரர் சிட்டி. தி. ஜானகிராமன்
மதித்த எழுத்தாளர்களில் ஒருவர் கிருத்திகா.

 

சிட்டி, சிவபாதசுந்தரம், க.நா.சு., ஆதவன் போன்ற மிகச் சிலர்தான் தமிழில் எழுதுவதோடு கூட ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். அவர்கள் வரிசையில் வரும் இருமொழி எழுத்தாளர் இவர்.

 

தில்லியிலும்,பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும்,சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் தனித்தனிக் காகிதங்களில் எழுதப்பட்டவை அல்ல. எண்பது பக்கம், நூறு பக்கம் கொண்ட நோட்டுப் புத்தகங்களில் ஒவ்வொரு நோட்டுப் புத்தகமும் ஒரு கடிதம் என்ற வகையில் எழுதப்பட்டவை. தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றையே பேசுபவை.

 

கிருத்திகாவின் செல்ல மகளும்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியுமான மீனா, "அந்த மிக நீண்ட கடிதப் புத்தகங்களை எல்லாம் அவற்றைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு நூலகத்திற்குக் கொடுக்க வேண்டும்
என்றிருக்கிறேன்," என்கிறார் மிகுந்த அக்கறையுடன். மீனாவின் முகத்தில் தன் தாயாரைப் பற்றிய பெருமிதத்தைப் பார்ப்பதே ஒரு பரவசம்.

 

அமரர் கிருத்திகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீவித்யா (மணிக்கொடி எழுத்தாளர்-சிட்டியின் புதல்வி), "என்னிடம்,கிருத்திகா சிட்டிக்கு எழுதிய ஏராளமான கடிதப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. அவற்றை நான் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்!" என்கிறார் பெருமையுடன். ஸ்ரீவித்யா என்ற பெயரை அவருக்குச் சூட்டியவரே கிருத்திகா தானாம். கி. இராஜநாராயணன், வல்லிக்கண்ணன், வண்ணதாசன் போன்றோர் கடிதங்கள் நூலாக்கம் பெற்றுள்ளன.
இன்னும் சிட்டி – கிருத்திகா கடிதங்கள் எதுவும் நூலாக்கம் பெறவில்லை!

 

சிட்டியின் அணுக்கத் தொண்டராகவே காலம் கழித்த சிட்டியின் புதல்வரான  மொழிபெயர்ப்பாளர் விஸ்வேஸ்வரன், சிட்டி தான் இல்லை என்றால் இனிகிருத்திகாவும் இல்லையே என்று உருகுகிறார். ஒருகாலத்தில் தில்லிவாழ் எழுத்தாளர்கள் மத்தியில் கிருத்திகா ஒரு முக்கியப் புள்ளி.

 

பாரதியைப் படித்த பரவசத்தில் எழுதத் தொடங்கியவர் கிருத்திகா. "புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே" என்ற பாரதி வரிகளின் முதல் இரு வார்த்தைகளைத்தான், தமது தொடக்க கால நாவலுக்குத் தலைப்பாக்கினார்.

 

  • "சத்யமேவ,
  • பொன்கூண்டு,
  • வாஸவேஸ்வரம்,
  • தர்ம ஷேத்ரே,
  • புதிய கோணங்கி,
  • நேற்றிருந்தோம்"

போன்ற நாவல்கள்,

  • "யோகமும் போகமும்,"
  • "தீராத பிரச்னை,"

போன்ற குறுநாவல்கள்,

  • "மனதிலே ஒரு மறு,
  • மா ஜானகி"

போன்ற நாடகங்கள் இவையெல்லாம் கிருத்திகா தமிழுக்குக் கொடுத்த கொடை.

 

ஆங்கிலத்தில் எழுதும்போது "மதுரம் பூதலிங்கம்" என்ற தம் இயற்பெயரில் எழுதினார். "குழந்தைகளுக்கான இராமாயணம், மகாபாரதம், பாகவதம்" என இவரது ஆங்கில நூல்கள் பல. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை, பாரதி வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  அதற்கு உதவி செய்தவர் தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் ஆர்.ஏ. பத்மநாபன். பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, அமரர் கிருத்திகாவின் உறவினர். "எனக்குக்
கிருத்திகா தான் ஆதர்சம்" என்று சிவசங்கரி சொல்வதுண்டு.

 

இந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள், கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் முன்னர் பற்பல கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர்; அது பேச்சல்ல,
சங்கீதம். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர்.

 

கணவர் காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் மிகப் பெரும் பதவிகள் வகித்தவர். (பழைய ஐ.சி.எஸ்; உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப்
பெரும் பங்கு உண்டு). ஆழ்ந்த இலக்கியவாதிகளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கிருத்திகா. அவரது கணவர் பூதலிங்கம் போலவே இவரும் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர். மதங்கடந்த ஆன்மிகத்தைப் போற்றியவர். "செய்வன திருந்தச் செய்" என்பதில் மிகுந்த நாட்டமுள்ளவர். சின்னச் சின்னச் செயல்களிலும் கூட முழு அக்கறை செலுத்தி அவர் செய்வதைப் பார்த்தால், நடைமுறை வாழ்வையே அவர் ஒரு யோகமாகப் பயின்றார் என்பது புரியும்.

 

கலை, இலக்கியம் ஆகிய சிந்தனைகளில் தோய்ந்தவராய், சென்னை நகரில் 93 வயதுவரை வாழ்ந்தார் கிருத்திகா. அதாவது நேற்றுவரை. பழுத்த பழம் தானாய்க் காம்பிலிருந்து உதிர்வதுபோல, நல்லவர்கள் உயிர் முதுமைக் காலத்தில்
இயல்பாய் உதிரும் என்று சொல்லியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி. இதோ பழுத்த பழம் ஒன்று வாசகர்கள் மனத்தில் கமகமக்கும் இனிய நினைவுகளைப் பரப்பிவிட்டுத் தானாய் உதிர்ந்துவிட்டது.

(13-2-2009 அன்று கிருத்திகா காலமானார்)

 

 

You may also like

Leave a Comment