Saturday, May 23, 2015 Posted by Dr.Subashini
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது முதலில் விளக்கப்படுகின்றது.
- முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல்.
- உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளே சிலை இருக்க வேண்டிய இடத்தையும் தூண்கள் இருக்க வேண்டிய இடத்தையும் விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செதுக்கி நீக்குதல்
- வெளியில் ஒரு அர்த்த மண்டபம் அமைத்தல்
- அர்த்த மண்டபத்தில் 2 முழுத்தூண்களையும் 2 அரைத்தூண்களையும் செதுக்குதல்
- உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வ வடிவம் அமைத்தல்
- வெளிச்சுவற்றில் துவார பாலகர் சிற்பம் அல்லது வேறு சிலைகள் சின்னங்கள் செதுக்குதல்
இவற்றோடு குடைவரைக் கோயிலின் பொது அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
இப்பதிவில் தொடர்ந்து தமிழக நிலப்பரப்பில் முருக வழிபாடு பற்றியும் விளக்கமளிக்கப்படுகின்றது.
லாடன் கோயில் குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. 7, 8ம் நூற்றாண்டு குடைவரை இது. முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுவது. முருகனோடு தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கருவரைக்கு வெளியே 2 துவார பாலகர்களும் மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பமும் இருக்கின்றன.
தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான காரைக்குடி டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் இப்பதிவில் அனைத்து செய்திகளையும் வழங்குகின்றார்கள்.
டாக்டர்.வள்ளியுடன் டாக்டர்.ரவிச்சந்திரனும் திரு.நாகரத்தினமும்
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன்மாதம் தமிழகத்தின் மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் நான் பதிவாக்கினேன்.
11 நிமிடப் நேரப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.de/2015/05/blog-post_ 23.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=QDwouUE4aSw&feature= youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]