முதல் பகுதி

 

முதல் பகுதி

 

இப்பகுதியில் ஆண்டுவாரியாகப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் பதிவு எண்களையும் அவை உள்ள ஊர்களையும் காணலாம். இவ்வறிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு மாவட்டம், வட்டம், ஊர் பட்டியல்களைக் காணலாம். கல்வெட்டு எந்த கோயிலில் உள்ளது, கோயிலில் எந்த பகுதியில், கருவறை அதிட்டானத்திலா, மண்டபத்திலா, கோபுரத்திலா, சுற்றுச்சுவரிலா என்ற குறிப்புகள் கிடைக்கும். அத்துடன் ஆண்ட அரசன் யார், கல்வெட்டு எந்த காலத்தைச் சார்ந்தது, அப்பொழுது ஆண்ட அரசன் யார், கல்வெட்டு எந்த மொழியில் உள்ளது, கல்வெட்டின் செய்திச் சுருக்கம் முதலிய அனைத்து விவரங்களும் கிடைக்கும். கோயிலின் பண்டைய பெயர், ஊரின்  பண்டைய பெயர், தெய்வத்தின் பண்டைய பெயர், ஊர் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், அன்று புழக்கத்தில் இருந்த காசு, தானம் கொடுத்தவர் பெயர் முதலிய செய்திகளும் கிடைக்கும்.

 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஊர் பெயர்கள் அகர வரிசையில் மாவட்டம் வாரியாக உள்ளன. அதன் பின்னர் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்  அவ்வூர் கல்வெட்டுக்களின் எண்ணிக்கைகள் உள்ளன. இதைக் கொண்டு உங்கள் ஊரைப் பற்றிய செய்தி எந்த ஆண்டறிக்கையில் உள்ளது என அறியலாம். ஆண்டு அறிக்கைகளை நூலகங்களில்தான் சென்று காண வேண்டும். அல்லது எழுதிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 

இத்துணை நூல் வழியாக உங்கள் ஊரில் கல்வெட்டு இருக்கிறதா? அதைப் படியெடுத்து இருக்கிறார்களா? அதுபற்றி எங்கு அறியலாம் என்ற செய்திகளை அறியலாம். உங்கள் ஊரில் கல்வெட்டு இருந்து படியெடுக்கவில்லை என்றால் மாநிலத் தொல்லியல் துறைக்கோ, மத்திய தொல்லியல் துரைக்கோ எழுதுங்கள். அவர்கள் படியெடுக்க ஏற்பாடு செய்வார்கள்.

 

இரா.நாகசாமி

 

PART – 1

 

This part contains a list of villages, alphabetically arranged under each district in Tamilnadu, along with the year in which the inscriptions in the village was copied and the last column, the Inscription Nos. This ingormation would enable you to refer to the Annual Reports on Epigraphy (ARE) published in the respective year and also the  Inscriptions Nos. where the inscription has been found (for example, the temple – its location like the sanctum wall, mandapa wall, gopura wall etc.,) the name of the king in whose reign the record was issued, the language and script of the inscription and a brief summary of its content, that includes the ancient name of the village, the ancient name of the temple, the builder or donor, the nature of the gift etc., Thus they give historical information about the village, their temples, tanks, canals, taxes, institurtions etc., This guide will help you to find out the ARE year no. and inscription no. Then you have to check out the ARE report of that particular year. The ARE reports are available in the Central, and State Archaeologival Departments, whom you may contact for detailas.  The Universities or Colleges in your area may also have these ARE reports.

 

Dr.R.Nagaswamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *