Home HistoryKrishnagiri பெண்ணையாற்றங்கரை நடுகல்

பெண்ணையாற்றங்கரை நடுகல்

by Dr.K.Subashini
0 comment

 

கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்தில் சாலையில் ஆங்காங்கே நடுகற்களை காணமுடிகின்றது. ஒரு சில நடுகற்கள் தூய்மை படுத்தப்பட்டு வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால் அவை நல்ல நிலையில் இன்றளவும் இருப்பதைக் காண முடிகின்றது.அதே வேளை சில நடுகற்கள் பராமரிப்பு இன்றி செடிகளும் முற்புதற்களும் நிறைந்து காண முடியாத வகையில் உள்ளன. சில சரிந்து விழும் மணற் புதரில் மூடிவிடுமோ என்ற அச்சம் தரும் வகையிலான சூழலில் இருக்கின்றன. தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிரிஷ்ணகிரி சென்றிருந்த போது இந்த நடுகற்களை எங்களுக்கு காண்பித்து அவற்றிற்கான விளக்கங்களையும் வழங்கினார் தொல்லியல் ஆர்வளர் திரு.சுகவனம் முருகன்.

 

 

 

பதிவு 1 :{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nadukal/nadukal5.mp3{/play}

ஒரு வீரன் இறந்த பின்னர் அவனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல். அருகில் இருப்பது அவன் மனைவி. அவள் கையில் மதுக்குடம் இருப்பது போல இந்த நடுகல்லில் சித்தரித்திருக்கின்றார்கள். இந்த இறந்த வீரன் சொர்க்கத்துக்குச் சென்று அங்கு தேவகண்ணிகளுடன் சந்தோஷமாக இருக்கின்றான் என்பதைக் காட்டுவதாக இந்த நடுகல் விளங்குகின்றது.

 

 

 

 

 

 

பதிவு 2 :{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nadukal/nadukal4.mp3{/play}

புலி அல்லது சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்தவனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல். இதனை புலிகுத்திபட்டான்கல் எனக் குறிப்பிடுகின்றனர்.

வீரனது மனைவியும் உடன்கட்டை ஏறியிருக்கின்றாள். ஆகையால் இந்த நடுகல் சதிக்கல்லாகவும் உள்ளது. இறந்த இடத்தில்யே இவ்வகை நடுகள்-சதிக்கல்களை எடுப்பதுதான் வழக்கம் என்றும் இந்த நடுகல்லும் அதே போல வீரன் இறந்த இடத்திலேயே எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் விளக்குகின்றார் திரு.சுகவனம் முருகன்.

 

 

 

 

மேலும் சில நடுகற்கள்.. பெண்ணையாற்றங்கரை சாலையோரத்தில்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுபா , திரு.சுகவனம் முருகன்

 

த.ம.அ குழுவினர் திரு.சுகவனம் முருகனுடன்

You may also like

Leave a Comment