பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது. கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி.
இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை உணவு, மதியம், மாலை என எப்போதும் வருபவர்களுக்கு இங்கே அன்னதானம் வழங்குகின்றனர் விடுதி நிர்வாகத்தினர்.
இந்த மண்டபத்தின் கூடத்த்தின் மேல் புறத்தில் கலை நயம் மிக்க ஓவியங்கள் தீட்டப்பட்டு கலைக்கூடமாக திகழ்கின்றது. கண்களைக் கவரும் வண்ணங்களில் இந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேல் பகுதி முழுதும் பறந்து விரிந்திருக்கின்றது இந்த கலை ஓவியப் படைப்பு.
நாங்கள் வந்திருந்த சமையம் காலை வேளையாதலால் இட்லி, சாம்பார், சட்னி ஆகியவை காலை வேளை அன்னதானத்திற்கு தயாராக இருந்தன. எங்கள் காலை உணவை இங்கேயே முடித்துக் கொண்டோம்.
பெரிய சமையலறையில் அடுப்புக்கள் மூட்டப்பட்டு மதிய சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சிலர் காய்கறிகளை தூய்மை செய்து சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.
வருவோரை அன்புடன் வரவேற்று அன்னதானம் வழங்கி சேவை செய்யும் இந்த பிள்ளையார்பட்டி விடுதியைச் சார்ந்தவர்களை வாழ்த்தி இவர்கள் சேவை ஏழை எளியோர்களுக்கு என்றென்றும் உதவிடவும் இச்சேவை மையம் இறையருளால் தொடர்ந்து செயல்படவும் வேண்டும் என்பதே நம் அவா..
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி
விடுதியின் வாசலில்: டாக்டர் நா.கண்ணன், டாக்டர் வள்ளி, சுபா
நுழைவாயில்
வாசல்
வாசலின் ஒரு புறம் – வருபவர்கள் அமர்ந்திருக்க..!
விடுதியின் பின்னால் உள்ல மாட்டுத் தொழுவத்தில் மாடுகள்
திடீரென இரண்டு மாடுகள் கயிற்றை விட்டு வெளிவந்து சண்டை போட ஆரம்பிக்க அவை இரண்டையும் விடுதியைச் சேர்ந்த ஒருவர் அடக்குகின்றார்
விடுதியில் சமையல் பணி நடந்து கொண்டிருக்கின்றது
ஒரே சமயத்தில் சமைக்கும் வகையில் வரிசையாக பல அடுப்புக்கள்..!
பால் சேகரித்து வைக்கும் பெரிய பானைகள்
காலை உணவு சாம்பார் இட்லி ஆகியவைகள் தயாராக இருக்கின்றன
மதிய சமையலுக்காக விடுதியைச் சார்ந்தவர்கள் தயார் செய்கின்றனர்
காய்கறிகள் தயாராக இருக்கின்றன. அடுத்து என்ன..? சுத்தம் செய்து சமையலைத் தொடங்க வேண்டியது தான்.
மாவு அறைக்கும் இயந்திரங்கள்
இட்லி தயாரிக்க தட்டுகள்
நெல்