Home HistoryThiruvannamalai நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்

நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்

by Dr.K.Subashini
0 comment

 

நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்

ப்ரகாஷ் சுகுமாரன் – திருவண்ணாமலை

 

 

விழியப் பதிவு

 

{youtubejw}C3e_nuCypdQ{/youtubejw}

 

 

லங்கோ – ஜைனி கோடு எனப்படும் ரேகையின் மத்திய பகுதியில் ( ஜாவா தீவின் அருகில் கடல் பரப்பில் ( பரந்து விரிந்திருந்த குமரி கண்டத்தில் இருந்ததாக சொல்லப்படும் தென்னிலங்கை ) தொடங்கி இலங்கை வழியாக இந்தியாவின் உஜ்ஜைனி வரை செல்லும் ரேகை லங்கோ-ஜைனி ரேகை என்பதாக கருதப்படுகிறது) 12 வது டிகிரியில் அதாவது மத்திய பகுதியில் அமைந்துள்ள திண்டிவனம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள சீதோஷ்ணம் மற்றும் சூழ்நிலைகளால் இங்கு முதல்முதலில் உயிர்கள் உருவாகி, பகுப்புற்று நீர், நில வாழ்வன, பறப்பன என பலவித இனங்கள் தோன்றி பிறகு மனித இனம் பிறந்திருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஒரு கருத்து உலவி வருகிறது. நந்தி மலையில் தொடங்கி இப்பகுதிகள் வழியாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கும் தென் பெண்ணையாற்றின் கரைகளில் உருவான மனித நாகரீக வளர்ச்சி பல்வேறு இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கான பல சான்றுகள் பழமை மிகுந்த இந்த மண்ணில் அடிக்கடி கிடைத்து வருகின்றன.

 

அந்த வரிசையில் தற்போது தண்டராம்பட்டு தாலூகாவில் உள்ள இளையான்குன்னி என்ற குக்கிராமத்தில் உள்ள நாகர்கள்ளி என்ற குன்றின் அடிவாரத்தில் தொல் பழமை வாய்ந்த சித்திர எழுத்துக்கள் அடங்கிய பிரம்மாண்டமான பாறை இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதில் உள்ள பெரும்பாலான எழுத்துக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும், உள்ளூர் மக்களின் அறியாமையாலும் காணாமல் சென்றுள்ளது. கெட்டித்தன்மை இல்லாத இலகு வகையான தன்மை கொண்ட இந்த பாறை மீது கைகளை வைத்து தடவினாலே தூள் தூளாக கொட்டும் நிலையில், பழமை மிக்க இந்த சித்திர எழுத்துக்களை பார்க்கும் மக்கள் அவற்றை தடவி பார்ப்பதால் அவை வேகமாக மறைந்து  வருகிறது. தென்னிந்தியாவில் இதுவரை நான்கு இடங்களில் இது போன்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. திண்டிவனம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள அவை அனைத்துமே தென் பெண்ணை ஆற்றங்கரைகளில் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

இதே போல இப்பகுதியின் அருகே உள்ள பல கிராமங்களில் காடுகளிலும், மலைகளிலும் ஏராளமான கல்வெட்டுக்களும், நடுகற்களும் உள்ளன. இவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு தொகுக்கப்பட்டால் நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழர் வரலாற்றின் மறைந்த பல பக்கங்கள் வெளியாகும். இந்த சித்திர எழுத்துக்கள் குறித்த தகவல் அறிந்தவுடன், ஆர்வத்துடன் இங்கே வந்து பார்வையிட்டு சில நடுகற்களையும், கல்வெட்டுக்களையும் பதிவு செய்து கொண்ட தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை இயக்குனர் பூங்குன்றன் அவர்கள், இவை தாய் தெய்வ வழிபாட்டு காலத்தை சேர்ந்த சித்திர எழுத்துக்கள் என்றும், இதுவரை கண்டறியப்பட்டு உள்ள எழுத்துக்களில் அதிக பழமை வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.

 

படத்தொகுப்பு:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment