Home FolkloreFolk Songs நலுங்குப் பாட்டு

நலுங்குப் பாட்டு

by Dr.K.Subashini
0 comment

இப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது.  இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள் [email protected].  இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும்.

 

கடவுள் துணை

நலுங்குபாட்டு

வெண்செந்துறை துதி.

 

சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப்
பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே.

தங்கமே இந்தநிலமே சாமி
சுந்தராபுரி செல்வமே

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில் வெண்ணைதிருடி சாமி
மத்தாலடி பட்டீர்

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில்வெண்ணை சிந்திற்றோ சாமி
உன்கமலமுகம் வாடிற்றோ

சித்திராபுரி வீதியிலே சாமி
சிரித்தால் ஓடிவாரும்

கட்டகய ரில்லையே சாமி
உனையடிக்க மனமில்லையே

துஷ்டத்தனம் வெறுத்து சாமி
துரையே ஓடிவாரும்

நெற்றிசுற்றி யசைய சாமி
முகம்வேர்க்க பெண்கள் நகைக்க

மங்களஞ்சேர் கிருஷ்ணா சாமி
மாயவரே ஓடிவாரும்

தங்கமே இந்தநலமே சாமி
சுந்தராபுரி செல்வமே

அஷ்டாக்ஷரப் பொருளே சாமி
அடியேன் ஓடிவாரேன்

வேறு.
நலுங்கிடராம்மா மதுரைமீனாக்ஷிக்கு
நலுங்கிடராம்மா

ஆதிறட்நாலுபொய்கை அபரஞ்சிபீண்டிலா
கோதைநாச்சியாரம்மா கொலுண்டாக்கா நலுங்கிட

மல்லிகைமுல்லையுடன் மணமுள்ளயிருவாட்சி
செண்பகமலருடன் சிவசுந்தரர்க்கு நலுங்கிட

வேறு.

நலுங்கிடவாரும் பிராணநாதா நாழியாச்சுதே
அம்மிமிதித்து அருந்ததிப்பார்த்து நலுங்கிட

அழுந்தத்தாலி கட்டினீரே
பன்னீருஞ்சந்தனமும் பரிமளமிகப்பூசி நலுங்கிட

பூச்சக்ரவர்த்தி புண்ணியபுருஷா
உனக்குநான் செய்குவேன் நலுங்கிட

வேறு.

ஸ்ரீராம ஜெய ஜெய சீதாமனோகர
காருண்யசாகர கருணா ஜெய ஜெய ஸ்ரீராம

சீதையாரும் ரகுபதியும் சிங்காசன மேலிருத்தி
நலுங்கிட வேணுமென்று நாகரீகமாத ரெல்லாம் ஸ்ரீ

புண்யமான பாத்திரத்தில் புட்பமதை தானெடுத்து
கன்னிமார்கள் கொண்டுவந்து காணவந்தாரகுபதியை ஸ்ரீ

மந்தாரைமுல்லைசரம் மருக்கொழுந்துபிச்சிச்சரம்
முல்லைமலரல்லிச்சரம் முடித்தார்களிருபேரும் ஸ்ரீ

 

(Missing one page here)

பஞ்சபூதப்பலகை கப்பலாய் சேர்த்து, பாங்கான வோங்கார பாய்மரமும்கட்டு, அஞ்செழுத்தைக் கட்டிசரக்காக வைத்து, செந்தக்கால்சரக்கை சீனியாய் வைத்து செம்மாந்திகளும் ஆனந்தவெள்ளம் கண்டமாய்ப்போகுதே அலங்காரக் கப்பல்.

பண்டுளமாலையணி பலராஜருடன் கப்பலுக்கு, அந்தமுள்ள தீவுகளில் இருக்கும் அதிசயமாய் சரக்குகளைகொண்டு மிகத்தானேத்தி கோலவழிகப்பல் நடந்திடவே

முடுகு

சந்தணஞ் செஞ்சந்தணஞ் சூதாலிங்கம் தவறாதகருநாவிவெண்ணாவிவீரம் பண்ணானசாரம் பவவீரகுதிரை பாஷாண வெள்ளைபாஷாண எரியன்பாஷாண குக்கில்நேராணகெந்தகம் நெல்லிக்காய் கெந்தகம் ரோதகட்டாழை கிழவீரங்கி கிழமூக்கு தேவதாரக்கட்டையீய ஊசிக் கரந்தமிலவங்க வங்கங் கருவங்கத் தங்கந்துய்யமாய் பூலங்கெட்டம் பூலாங்கிழங்கும் கொம்பரக்கு மெழுகுங்கோறோசனை நல்ல குங்குமப்பூவு,

வெட்டுடாவெட்டு மரமும்முத்துக்கள் நட்டு ஈட்டம் பாத்து வெங்கலப்பானையை வண்டிமேலேத்து அஞ்சங்கி பீரங்கிடண்டடித்து, வனபேரி கனபேரிகை வாங்கிகோடு, மாணாம்புச்சாவடிக் கோபுரங்கட்டி, மலையேரிப் பார்க்கலாம் வைகுண்ட கப்பல்.

சம்மந்தி ஏசல்

அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே, வடக்குத் தெருவிலே வாழைக்காய்திருடி வாழைமட்டையால் பூசைபட்டாளே, அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே தெற்குத்தெருவிலே தேங்காய் திருடி தென்ன மட்டையால் பூசைகள் பட்டாளே, அடிபட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே மேலத்தெருவிலே மிளகாய்திருடி பனைமட்டையால்

(missing one page here)

இராகம் பைரவி.

வச்சிரவைடூரியத்தால் பலகைசேர்த்து
மரகதத்தினாலிழைத்த கால்கள் நாட்டி
உச்சிதரத்தினம்பதிக்க கொடுங்கைபூட்டி
உகந்துசாரங்கராச றாடீரூஞ்சல்
மகண்டமகரகண்டி பதக்கமின்ன
காதுதோடுகம்மல்சரம் பளபளென்ன
சங்குசக்கரங்கை சாரங்கம்தரித்தநாதன்
மங்கைகோமளவல்லியுடன் மனமகிழ்ந்து
பங்கஜாட்சருக்கும்பிதா ஆடீரூஞ்சல்
பார்புகழுங்குடந்தைவாச றாடீரூஞ்சல்

வேறு

செண்டாடினாள் ரங்கநாயகி ஸ்ரீநிவாசருடன்
மண்டலமெல்லாம் புகழும் மங்கைநாயகருடன்
குண்டுமல்லிகை குமுகுமெனவே குளிரபந்து களவரெடுக்கவே
மண்டலமெலாம் புகழும் ரங்கநாயகருடன்
தங்கவொட்டியாணம் தளதளென சரிகைப்புடைவை பளபளெனவே
நெத்தியிலிட்டகஸ்தூரிபொட்டு நிலைகட்டிகளையசையவே

கதவுதிறக்கிற பாட்டு

1. செந்திருவதனம்பெண் மங்கயரேவுந்தன்
செம்பொன்கதவைத் திறமானேயடி
இன்பக்குயிலன்னமே இப்போதே

2. கதவைத்திறவென்று யிதமாகக்கூறினீர்
கட்டழகாவுந்தன் ஊரென்னசுவாமி
உமக்கிட்டதிரு நாமத்தின்பேரென்ன

3. பேரென்னவெனக்கேட்பார் மகளேயெந்தன்
காரணிவைகுந்தத் தானடிவளர்
சோரநாதக் கள்வநானடி

(missing some pages here)

பலகார போதினி என்னும்
நளீன
பாகசாஸ்திரம்

நம் இந்து தேசத்திற்கு பெரும்பான்மை பெண் பலரே சமையல் பாகங்களைச் செய்து வருகிறபடியால் முக்கியமாய் அவர்களே இவ்விதிகளை யெல்லாம் செவ்வனே தெரிந்து கொள்ளவேண்டிசமையல் பாகத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த K. கிருஷ்ணமாச்சாரி அவர்களால் எழுதப்பட்டது. பிள்ளை பிறந்து யௌவன தசையடைந்து விவாகமாகிறவரைக்கும் பிள்ளைகட்குப் போஷிக்கின்ற உத்தியோகத்தை தாய் வகித்து வருகிறார். அதை போலவே மனைவி புருஷனுக்குச் செய்ய வேண்டிய தன்புருஷனுடைய தாய் மேலான சுவையுள்ள ஆகாரத்தை கொடுத்து ஊட்டிவளர்த்தாரோ அதைப்போலவே மனைவியும் செய்யவேண்டிய கடமையாதலால் இதில் தித்திப்பு செய்யவேண்டிய பாகமும், காரம் செய்யவேண்டிய பாகமும், பதார்த்தங்கள் செய்யவேண்டிய பாகமும், ஊருக்காய் செய்யவேண்டிய பாகமு, சர்பத்துகள் செய்யவேண்டிய பாகமும், இன்னும் அநேக விதமான பாகங்கள் எல்லோருக்கும் விளங்கும்படியாகவும் தாங்களே செய்துகொள்வதற்கு உண்டான வழியையும் கூறப்பட்டிருக்கிறது. ஓட்டலில் வேலைசெய்யும் நண்பர்களுக்கும் இது ஒரு உயிர்தோழனாக இருக்கும்.

தபால் சிலவு 0 – 10 – 0           விலை அணா 0 – 12 – 0

கிடைக்குமிடம்:- டி.ஆர். பாலகிருஷ்ண முதலியார்
நெ- 2, எழுத்துக்காரன் தெரு, காலாடிப்பேட்டை சென்னை 19.

You may also like

Leave a Comment