நகைச்சுவையாளர்
கசப்பான விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு சொன்னால், எளிதில் விஷயம் பிடிபட்டு விடும். அதேபோல், மிக உயரிய தத்துவங்களையும், சுலபமான நடையில், உடல் நோவு சரி செய்யும் மருந்தைப் போல், மன நோயும் சரியாகும் விஷயத்தை, இந்த ‘ஞான மருந்து தந்து’ சொல்கிறார்:
காம்போதி] [ஆதி
பல்லவி:
மருந்தொன்று தாரும் ஐயா – என்
மனப்பேய் இறங்கி நல்ல நினைப்போ டினைத்துதிக்க (மருந்தொன்று)
அனுபல்லவி:
வருந்தும் உயிர்க்கு ஞான
விருந்தா யிருந்துதவும் (மருந்தொன்று)
சரணம்:
நாவுக்கினிய திவ்ய நாமந்தரு மருந்து,
நாட்டத்திற் பரஞ்ஜோதி காட்டுந் தனிமருந்து,
சாவா அமரநிலை மேவ வரு மருந்து,
சக்திக் கனல் வளர்க்கும் சச்சிதா னந்தமான (மருந்தொன்று)
சின்மய விளையாட்டாய்ச் செகத்தைக் காட்டு மருந்து
சிந்தித்த வுடன்அட்ட சித்தி தருமருந்து,
என்மய வுயிர்களில் தன்மயங் காட்டிடும்,
ஏக சுக போக மாகும் திருவருளின் (மருந்தொன்று)
அதேபோல், தன்யாசி ராகத்தில் ஆதி தாளத்தில், துரித நடையில் வேகமாய் ஒரு அரட்டு போடுகிறார் பாருங்கள்!! – சந்திரசேகரன் Mon, May 18, 2009
பல்லவி:
அரட்டொன்று போட்டிந்த முரட்டு மனப்பேயை
அடக்கிடுவாய் அப்பனே (அரட்டொன்று)
அனுபல்லவி:
வறட்டு வனாந்தரத்தை வளநக ரென்றிவன்
புரட்டுக் கவியெழுதிப் பொய்க் கதை புனைகின்றான் (அரட்டொன்று)
பல்லவி:
கட்டிக் கரும்பிதென்றே எட்டியைத் தருகின்றான்;
கற்றாழையைக்கட்டி முத்தமிடச் சொல்கின்றான்;
மட்டித் தடியருடன் மனைக்குள்ளே வருகின்றான்;
மலடிக்குச் சீமந்த மலர்களை முடிக்கின்றான்! (அரட்டொன்று)
பெண்ணெனப் பொன்னெனப் பிரியத்தைக் காட்டுவான்;
பிடிபட்ட மாந்தரைப் பேயென வாட்டுவான்;
கண்ணிலே பொடிதூவிக் கந்தர்வ லோகங்கள்
காணெனப் புலிநரிக் காட்டிலே ஓட்டுவான் (அரட்டொன்று)